விற்பனையில் வெற்றி நடைபோடும் சிவிக்: ஸ்கோடாவை வீழ்த்திய ஹோண்டா

ஹோண்டா சிவிக் அறிமுகமான இரண்டு மாதங்களில் ஸ்கோடா, ஹூண்டாய் மற்றும் டொயோட்டா போன்ற தனது போட்டி நிறுவனங்களை வீழ்த்தி ஹோண்டா சிவிக் விற்பனையில் வெற்றி நடைபோடுகிறது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் வெற்றி நடைபோடும் சிவிக்: ஸ்கோடாவை வீழ்த்திய ஹோண்டா

ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா சிவிக் செடான் காரின் முன்பதிவினை அந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது.முன்பதிவு துவங்கிய 45 நாட்களில், 1,600க்கும் மேற்பட்ட புக்கிங்குகளை பெற்றது. அதன்பின்னர் ஹோண்டா சிவிக் இந்திய வியாபார சந்தையில் கடந்த மார்ச் 7ம் தேதி ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. ஹோண்டா சிவிக் பேஸ் காரின் ஆரம்ப விலை ரூ.17.71 ரூபாய் மற்றும் டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.22.29 லட்சம் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்தது.

விற்பனையில் வெற்றி நடைபோடும் சிவிக்: ஸ்கோடாவை வீழ்த்திய ஹோண்டா

ஹோண்டாவின் புதிய வாடிக்கையாளர்களைவிட பழைய ஹோண்டா சிவிக் காரினை வைத்திருப்பவர்கள் தான் அதிகமாக புக்கிங் செய்தனர். குறிப்பாக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட 1.8 லிட்டர் என்ஜின் கார்கள்தான் அதிகமாக புக்கிங் செய்யப்பட்டன. இது ஹோண்டா வரலாற்றில் சிறப்பான விற்பனையாக கருதப்படுகிறது. மேலும் ஹூண்டாய் மற்றும் டொயோட்டா போன்ற தனது போட்டி நிறுவனங்களின் கார்களை வீழ்த்தியது.

விற்பனையில் வெற்றி நடைபோடும் சிவிக்: ஸ்கோடாவை வீழ்த்திய ஹோண்டா

ஹோண்டா சிவிக் கார் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 369 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன, சீவிக் காரின் போட்டியாளர்களான ஸ்கோடா ஆக்டேவியா, டொயோட்டா கொரோலா, மற்றும் ஹூண்டாய் எலன்ட்ரா கார்கள் சிவிக் காரை விட குறைவாகவே விற்பனையாகியுள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா கார்கள் 227 யூனிட்களும், டொயோட்டா கொரோலா கார்கள் 177 யூனிட்களும், ஹூண்டாய் எலன்ட்ரா காரகள் 85 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஆட்டோபண்டிட்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹோண்டா சிவிக் கார்கள் இரண்டே மாதத்தில் தனது போட்டி நிறுவன கார்களை விட 80 சதவீதம் அதிகமா விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

Model No. Of Units Sold
Honda Civic 369
Skoda Octavia 227
Toyota Corolla 177
Hyundai Elantra 85
விற்பனையில் வெற்றி நடைபோடும் சிவிக்: ஸ்கோடாவை வீழ்த்திய ஹோண்டா

விற்பனையில் வெற்றி நடைபோடும் ஹோண்டா சிவிக் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மற்றொரு வேரியண்டான 1.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது. டீசல் என்ஜினில் 6 ஸ்பீட் ஸ்டாண்டர்டு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் இன்ஜினில் மட்டும் சிவிடி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் வெற்றி நடைபோடும் சிவிக்: ஸ்கோடாவை வீழ்த்திய ஹோண்டா

ஹோண்டா சிவிக் காரின் முன்புறத்தில் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல் மற்றும் எல்இடி பனி விளக்குகள் இடம்பெறுள்ளன. மேலும் 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் சி-வடிவ எல்இடி டெய்ல்லைட்ஸ், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 7 இன்ச் டச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை காரில் இடம்பெறட்டுள்ளன. இந்த கூடுதல் அம்சங்களே பழைய ஹோண்டா வாடிக்கையாளர்கள் புதிய ஹோண்டாவிற்கு மாற முக்கிய காரணமான கருதப்படுகிறது.

விற்பனையில் வெற்றி நடைபோடும் சிவிக்: ஸ்கோடாவை வீழ்த்திய ஹோண்டா

நிதியாண்டின் துவக்கத்திலேயே ஹோண்டா சிவிக் விற்பனையில் 80 சதவீதம் அதிகரித்தது ஹோண்டா நிருவத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா அமேஸ் காரும் விற்பனையில் மாருதி சுஸுகி டிசையர், ஹூண்டாய் எக்ஸெண்ட், டாடா டிகோர், ஃபோக்ஸ்வேகன் அமியோ மற்றும் ஃபோர்டு அஸ்பயர் உள்ளிட்ட கார்களை விற்பனையில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது, ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து விற்பனையில் முன்னேறி வருவதால் ஸ்கோடா, ஹூண்டாய் மற்றும் டொயோட்டா உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளது.

Most Read Articles
English summary
Honda Civic Beats All Rivals Consecutively- Read More in Tamil
Story first published: Saturday, May 4, 2019, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X