கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

2019 நவம்பரில் அதிகம் விற்பனையான கம்பேக்ட் எஸ்யூவி கார்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதில் கடந்த சில மாதங்களை போல மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ கார்கள் தான் முன்னிலை வகிக்கின்றன.

கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

இந்த லிஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ள மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடிக்கும் மாதம் இது. கடந்த நவம்பர் மாதத்தில் 12,033 யூனிட்கள் விற்பனையுள்ள விட்டாரா பிரெஸ்ஸா மாடல் 2018 நவம்பரில் 14,378 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதனால் 2018 நவம்பருடன் ஒப்பிடும்போது கடந்த மாத விற்பனையில் 16 சதவீதம் வீழ்ச்சியை இந்த கார் அடைந்துள்ளது.

கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

விற்பனையில் இந்த மாடலின் தொடர் ஆதிக்கத்திற்கு மாருதி நிறுவனம் அறிவித்துள்ள சில சலுகைகள் தான் மிக முக்கிய காரணம். ரூ.7.67 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த கார், கம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

இந்த ஆண்டு மே மாதம் வரை விட்டாரா பிரெஸ்ஸாவின் தொடர் வெற்றிக்கு எந்த காரும் தடையாக இல்லாத நிலையில் இந்த மே மாதத்தில் கம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு கடுமையாக போட்டியளிக்கும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் வென்யூ மாடலை அறிமுகம் செய்தது.

கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

இந்த நவம்பர் மாத லிஸ்ட்டில் இரண்டாவது இடம் பிடித்துள்ள இந்த வென்யூ மாடல், கடந்த மாதத்தில் 9,665 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. ஹூண்டாய் வென்யூவின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.6.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Rank Models November 2019 November 2018
1

Maruti Suzuki Vitara Brezza

12,033

14,378

2

Hyundai Venue

9,665

-
3

Tata Nexon

3,437

4,224

4

Ford EcoSport

2,822

2,724

5

Mahindra XUV300

2,224

-
6

Honda WR-V

721

2,786

7

Mahindra TUV300

683

99

கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

இந்த இரு மாடல்களை தவிர்த்து வேறெந்த கம்பேக்ட் எஸ்யூவி காரும் பெரிய அளவில் விற்பனையாகவில்லை. மூன்றாவது இடத்தில் உள்ள டாடா நெக்ஸான் கடந்த மாதத்தில் 3,437 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே 2018 நவம்பர் மாதத்தில் மொத்தம் 4,224 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் இந்த கார், கடந்த ஆண்டு நவம்பரை விட 19 சதவீத விற்பனை வீழ்ச்சியை அடைந்துள்ளது.

கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

டாடா நெக்ஸானின் எலக்ட்ரிக் வெர்சன் கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து விற்பனையை ஆரம்பிக்கவுள்ளது. இந்த காரின் அறிமுக தேதி மற்றும் பொருத்தப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களை பற்றி தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

இவற்றை தொடர்ந்து இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் ஈக்கோ ஸ்போர்ட் உள்ளது. கடந்த மாதத்தில் 2,822 யூனிட்கள் விற்பனையான இந்த கார் 2018 நவம்பரில் 2,724 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதன் மூலம் ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் கார் 2018 நவம்பரை விட 4 சதவீதம் கூடுதலாக விற்பனையாகியுள்ளது தெரிய வருகிறது.

கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

ஐந்தாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 மாடல் உள்ளது. இந்த கார் கடந்த மாதம் 2,224 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. 2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் தான் இந்த கார் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

கம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனையில் தொடரும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...

இதற்கு அடுத்த 6வது மற்றும் ஏழாவது இடங்களில் ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும் மஹிந்திரா டியூவி300 கார்கள் உள்ளன. இவை கடந்த மாதத்தில் முறையே 721 மற்றும் 683 கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இவை இரண்டுமே 2018 நவம்பர் மாதத்தை விட விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. குறிப்பாக ஹோண்டா டபிள்யூஆர்-வி சுமார் 74 சதவீதம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட விற்பனையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #sales
English summary
Compac SUV November Sales Table
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X