அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

டாடா ஹாரியரை காட்டிலும் ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்குகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

இந்தியாவின் டாடா நிறுவனம் ஆல் நியூ ஹாரியர் எஸ்யூவி (Tata Harrier SUV) காரை கடந்த ஜனவரி மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக டாடா ஹாரியர் உருவெடுத்துள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவி காருக்கான வெயிட்டிங் பீரியட் மிக அதிகமாக இருப்பதே அதற்கு சாட்சி.

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் தற்போது 6 மாதங்கள் வரை உள்ளது. இந்திய நிறுவனங்களில் டாடாவின் கார்கள் விரைவாக செயலாற்றக்கூடியவை. ஆனால் அதன் ஹாரியர் எஸ்யூவி காரானது, ஹூண்டாய் கிரெட்டா 1.6ஐ (Hyundai Creta 1.6) காட்டிலும் விரைவாக செயலாற்றுமா?

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

கார்தேக்கோ தளம் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் பார்த்தால், டாடா ஹாரியரை காட்டிலும், ஹூண்டாய் கிரெட்டா 1.6 லிட்டர் டீசல்தான் விரைவாக செயலாற்றக்கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்க டாடா ஹாரியர் 12.11 வினாடிகளை எடுத்து கொள்கிறது. ஆனால் ஹூண்டாய் கிரெட்டா 1.6 டீசல் இதை வெறும் 10.83 வினாடிகளில் செய்து விடுகிறது.

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

ஆனால் ரோலிங் ஆக்ஸலரேஷன் என்ற விஷயத்தில், ஹூண்டாய் கிரெட்டாவை காட்டிலும் டாடா ஹாரியரே (Rolling Acceleration) விரைவாக செயலாற்றுகிறது. மணிக்கு 20 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் இருந்து மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்ட டாடா ஹாரியருக்கு 7.2 வினாடிகள் தேவைப்படுகிறது. ஆனால் இதனை செய்ய ஹூண்டாய் கிரெட்டா 7.93 வினாடிகள் எடுத்து கொள்கிறது.

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

டாடா ஹாரியர் எஸ்யூவி காரில், 2.0 லிட்டர் எம்ஜேடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. ஹாரியர் எஸ்யூவி காரில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை மட்டுமே டாடா நிறுவனம் வழங்குகிறது.

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

மறுபக்கம் ஹூண்டாய் கிரெட்டா 1.6 காரில், 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 128 பிஎஸ் பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறனை வழங்க கூடியது. டாடா ஹாரியரை போல் இதுவும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனைதான் பெற்றுள்ளது. ஆனால் ஹூண்டாய் நிறுவனம் இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனையும் வழங்குகிறது.

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

டாடா ஹாரியரை காட்டிலும் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி மிகவும் இலகுவானதாக உள்ளது. ஹூண்டாய் கிரெட்டாவின் ஆரம்ப நிலை ஆக்ஸலரேஷன் சிறப்பாக இருக்க இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. ஹூண்டாய் கிரெட்டாவின் எடை 1,398 கிலோ மட்டுமே. ஆனால் மறுபக்கம் டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் எடை 1,675 கிலோ.

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

அதிகபட்ச எடையானது வாகனத்தின் பிரேக்கிங் டிஸ்டன்ஸையும் (Braking Distance) பாதிக்கிறது. மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் இருந்து நிற்க ஹூண்டாய் கிரெட்டா 26.75 மீட்டரையும், டாடா ஹாரியர் 28.49 மீட்டரையும் எடுத்து கொள்கின்றன. அதே சமயம் மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் இருந்து நிற்க ஹூண்டாய் கிரெட்டாவிற்கு 43.43 மீட்டரும், டாடா ஹாரியருக்கு 45.70 மீட்டரும் தேவைப்படுகிறது.

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

அதிவேகமாக சென்று கொண்டிருக்கும்போது பிரேக் பிடித்தால் வாகனம் உடனே நிற்காது. சிறிது தூரம் ஓடிதான் நிற்கும். பொதுவாக இலகுவான வாகனங்களுடன் ஒப்பிடுகையில் அதிக எடை கொண்ட வாகனங்கள் நிற்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கின்றன. ஹூண்டாய் கிரெட்டாவுடன் ஒப்பிடும்போது டாடா ஹாரியர் அதிக நேரம் எடுப்பதற்கு அதன் எடைதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

டாடா ஹாரியர் எஸ்யூவி கார் 12.69 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் கிடைக்கிறது. அதேசமயம் ஹூண்டாய் கிரெட்டா 1.6 டீசல் காரானது, 13.59 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். அதிநவீன வசதிகள் என வந்து விட்டால், டாடா ஹாரியரை காட்டிலும் ஹூண்டாய் கிரெட்டாவே தலைசிறந்து விளங்குகிறது.

அனைத்திலும் சூப்பர்... டாடா ஹாரியரை விட ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்க காரணம் இதுதான்...

கிரெட்டா காரில், சன் ரூஃப், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்குகிறது. ஆனால் டாடா ஹாரியரில் இவை கிடையாது. எனினும் நடப்பாண்டு இறுதிக்கு முன்னதாக இந்த வசதிகளை ஹாரியர் காரிலும் வழங்குவதற்கான பணிகளில் டாடா நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
Comparison Test: Tata Harrier vs Hyundai Creta. Read in Tamil
Story first published: Wednesday, March 27, 2019, 9:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X