ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

நீங்கள் கிறிஸ்டியானா ரொனால்டோவின் ரசிகரா? அவரது ஆண்டு வருமானம் எவ்வளவு என்பது உங்களுக்கு தெரியுமா?

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்தியாவில் ஒரு மதம் போல் வேரூன்றி இருக்கும் கிரிக்கெட்டிற்கு நிகராக கால்பந்து இன்னும் பிரபலம் அடையவில்லை. எனினும் இரண்டு கால்பந்து வீரர்களுக்கு மட்டும் இந்தியாவில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் இந்தியர்களுக்கு நன்கு பரிட்சயமான இரண்டு கால்பந்து வீரர்கள் இவர்கள் மட்டுமே. ஒருவர் மெஸ்ஸி. மற்றொருவர் கிறிஸ்டியானா ரொனால்டோ.

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இதில், மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக விளையாடி வருகிறார். கிறிஸ்டியானா ரொனால்டோ போர்ச்சுக்கல்லை சேர்ந்தவர். போர்ச்சுக்கல் தேசிய அணி மட்டுமல்லாது, இத்தாலியை சேர்ந்த ஜூவெண்டஸ் கிளப் அணிக்காகவும் கிறிஸ்டியானா ரொனால்டோ விளையாடி கொண்டுள்ளார். கிறிஸ்டியானா ரொனால்டோ கடந்த 2018ம் ஆண்டுதான் ஜூவெண்டஸ் அணியில் இணைந்தார்.

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

அதற்கு முன்பாக ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக தூள் கிளப்பி கொண்டிருந்தார் கிறிஸ்டியானா ரொனால்டோ. விளையாட்டு உலகில் மிகவும் புகழ்பெற்ற நபர்களில் ஒருவராக கிறிஸ்டியானா ரொனால்டோ திகழ்கிறார். கால்பந்தை அவ்வளவாக ரசிக்காத இந்தியாவில் கூட அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதே அதற்கு சாட்சி.

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

உலகின் செல்வ செழிப்பு மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் கிறிஸ்டியானா ரொனால்டோ உள்ளார். இவரது ஆண்டு வருமானம் இந்திய மதிப்பில் ரூ.750 கோடி என கூறப்படுகிறது. எனவே மிகவும் விலை உயர்ந்த பல்வேறு கார்களை கிறிஸ்டியானா ரொனால்டோ வாங்கி குவித்துள்ளார். கிறிஸ்டியானா ரொனால்டோவின் கார் கலெக்ஸன் மெச்சத்தக்க வகையில் உள்ளது.

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

புகாட்டி சிரோன் (Bugatti Chiron), புகாட்டி வெரோன் (Bugatti Veyron), ஃபெராரி லாஃபெராரி (Ferrari LaFerrari), ஃபெராரி எஃப்12 டிடிஎஃப் (Ferarri F12 TDF), லம்போர்கினி அவென்டேடார் (Lamborghini Aventador), போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S), ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி ஸ்பீட் (Bentley Continental GT Speed), அஸ்டன் மார்ட்டின் டிபி9 (Aston Martin DB9), மெக்லாரன் எம்பி4-12சி (McLaren MP4-12C) ஆகியவை கிறிஸ்டியானா ரொனால்டோவிடம் உள்ள சில விலை உயர்ந்த கார்கள் ஆகும்.

MOST READ: கூடுதலாக மேலும் ஒரு லக்சூரி காரை வாங்கிய விராட்... இதன் விலை தெரிந்தால் நிச்சயம் மயக்கமே ஏற்படும்!

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

ஆனால் இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. ஏனெனில் இவை தவிர ஆடி நிறுவனத்தின் எஸ்8 (S8), ஆர்8 (R8) மற்றும் ஆர்எஸ்7 (RS7) உள்ளிட்ட கார்களையும் கிறிஸ்டியானா ரொனால்டோ வைத்துள்ளார். அத்துடன் மேலும் சில ஃபெராரி நிறுவன கார்களும் அவரிடம் உள்ளன. அனேகமாக இப்போதே உங்களுக்கு தலை சுற்றியிருக்கலாம்.

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்த சூழலில் மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் ஒன்றை கிறிஸ்டியானா ரொனால்டோ சமீபத்தில் வாங்கியுள்ளார். இது எஸ்யூவி ரக கார் ஆகும். இன்னும் சொல்லப்போனால் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எஸ்யூவி ரக கார் என்றால், அது கல்லினன்தான்.

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

தற்போதைய நிலையில் உலகில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் திகழ்கிறது. இந்த சூழலில் தான் புதிதாக வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியிட்டுள்ளார்.

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இதன் மூலம்தான் கிறிஸ்டியானா ரொனால்டோ இந்த காரை வாங்கியிருப்பதே தெரியவந்தது. புகைப்படத்துடன் இணைந்து போர்ச்சுகீசிய மொழியில் ''Trabalho feito'' என்ற கேப்ஷனையும் கிறிஸ்டியானா ரொனால்டோ பதிவிட்டிருந்தார். இதற்கு ஆங்கிலத்தில் ''work done'' என அர்த்தம். கிறிஸ்டியானா ரொனால்டோ வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளார்.

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் ஏராளமான சொகுசு வசதிகள் வழங்கப்படுகின்றன. பென்ட்லீ பென்டைகா (Bentley Bentayga) மற்றும் லம்போர்கினி உரஸ் (Lamborghini Urus) உள்ளிட்ட கார்களுடன் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் போட்டியிட்டு வருகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், அதிசக்தி வாய்ந்த 6.75 லிட்டர் வி12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

MOST READ: இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு... உச்சகட்ட மகிழ்ச்சியில் மக்கள்...

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 563 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது. இதில், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை 6.95 கோடி ரூபாய். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டும்தான். இனி வரும் காலங்களில் இதுபோன்று இன்னும் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் கிறிஸ்டியானா ரொனால்டோவின் வீட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

ரொனால்டோவின் ஆண்டு வருமானம் இதுதான்... எப்படி செலவழிக்கிறார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...

ஆக மொத்தம் தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதற்காகவே செலவிட்டு வருகிறார் கிறிஸ்டியானா ரொனால்டோ. பட்ஜெட் விலையில் ஒரு மாருதி சுஸுகி காரையே சொந்தமாக வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் அதிர்ச்சியாகதான் இருக்கும். ஆனால் ஆண்டுக்கு சுமார் 750 கோடி ரூபாய் சம்பாதிக்கும் கிறிஸ்டியானா ரொனால்டோவை பொறுத்தவரை இவை அனைத்தும் சிறு தொகையே!

Image Source 1,2,3:CarToq

Most Read Articles

English summary
Cristiano Ronaldo Buys Rolls Royce Cullinan Worth Rs.6.95 Crore. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more