டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் சிவிடி கியர்பாக்ஸ் மாடலுக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அதிக இடவசதியுடன் போதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், பாதுகாப்பு தரம், விற்பனைக்கு பிந்தைய சேவை உள்ளிட்ட காரணங்களால் இந்த இரண்டு மாடல்களுமே விற்பனையில் எதிர்பார்த்த அளவு இல்லை.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் மதிப்பை கூட்டும் விதத்தில், இந்த இரு மாடல்களிலுமே சிவிடி கியர்பாக்ஸ் தேர்வை டட்சன் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய மாடலுக்கான முன்பதிவு தற்போது அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

ரூ.11,000 முன்பணத்துடன் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் சிவிடி கியர்பாக்ஸ் மாடலுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். டட்சன் மற்றும் நிஸான் டீலர்களில் இந்த கார்களுக்கு முன்பதிவு ஏற்கப்படுகிறது.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தற்போது வரை 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்த நிலையில், மிக விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்விலும் வர இருக்கிறது.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அடிப்படையிலான மாடலில்தான் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது. வேறு எந்த பெரிய அளவிலான மாற்றங்களும் செய்யப்படவில்லை.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் எல்இடி பகல்நேர விளக்குகள், 14 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த இரு கார்களிலும் பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ரியர் பார்க்கிங் சென்சசார்கள், டியூவல் ஏர்பேக்குகள், ரியர் விண்டோ வைப்பர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

டட்சன் கோ, கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை கூடுதலான விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடுத்த மாதம் முதல் பாதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun has commenced the pre-bookings for the Go and Go Plus CVT models in India at Rs 11,000 today.
Story first published: Saturday, September 28, 2019, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X