டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அறிமுக விபரம்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் சிவிடி கியர்பாக்ஸ் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அறிமுக விபரம்!

மிக குறைவான விலை கொண்ட பட்ஜெட் கார்களிலும் இப்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்துள்ளது. இதனை மனதில் வைத்து தங்களது பட்ஜெட் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை வழங்குவதற்கு கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அறிமுக விபரம்!

ஆனால், பட்ஜெட் கார்களில் பெரும்பாலும் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் அதிகம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், நிஸான் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் டட்சன் நிறுவனம் முதல்முறையாக பட்ஜெட் கார் மார்க்கெட்டில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வை தனது மாடல்களில் வழங்க இருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அறிமுக விபரம்!

ஆம். தனது கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் சிவிடி எனப்படும் உயர்வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை அறிமுகப்படுத்த உள்ளது டட்சன் நிறுவனம். வரும் 23ந் தேதி டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் சிவிடி மாடல் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அறிமுக விபரம்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, இனி சிவிடி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்க இருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அறிமுக விபரம்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎஸ் பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் லிட்டருக்கு 19.83 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்டுகிறது.

Most Read: "எனக்கு எந்த பிரச்னையும் இல்ல" ஓபனாக பேசிய அமைச்சர் நிதின் கட்கரி: எதற்கு தெரியுமா..?

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அறிமுக விபரம்!

இந்த நிலையில், டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவே இருக்கிறது. இதனை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக மேம்படுத்த வேண்டி இருக்கிறது.

Most Read: 5 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுத்த புதிய கார்... அதிர்ச்சியில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் அறிமுக விபரம்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் டாப் வேரியண்ட்டில் மட்டுமே சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ரூ.60,000 கூடுதல் விலையில் சிவிடி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த மாதம் விலை அறிவிப்புடன் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #டட்சன் #datsun
English summary
According to report, Datsun Go and Go+ CVT gearbox model is expected to unveil later this month.
Story first published: Thursday, September 12, 2019, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X