டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்!

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் இந்தியாவின் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் முக்கிய தேர்வுகளாக உள்ளன. போட்டியாளர்களைவிட இடவசதி அதிகம், விலை குறைவு என்பதுதான் ஹைலைட்டாக உள்ளது. டட்சன் கோ கார் பட்ஜெட் ஹேட்ச்பேக் ரக மாடலாகவும், கோ ப்ளஸ் கார் 7 பேர் பயணிப்பதற்கான மினி எம்பிவி கார் மாடலாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்!

இந்த கார்களில் தற்போது 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைத்து வருகிறது. இந்த நிலையில், விரைவில் சிவிடி கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்!

பொதுவாக பட்ஜடெ் கார் மார்க்கெட்டில் பெரும்பான்மையான மாடல்கள் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில்தான் கிடைக்கின்றன. இந்த நிலையில், முதல்முறையாக டட்சன் நிறுவனம் தனது கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் அதிக மதிப்புவாய்ந்த சிவிடி கியர்பாக்ஸ் தேர்வினை வழங்க உள்ளது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்!

ஏஎம்டி கியர்பாக்ஸைவிட சிவிடி கியர்பாக்ஸ் மிகச் சிறந்த தொழிநுட்ப அம்சங்களை பெற்றிக்கிறது. விலை அதிகம், ஏஎம்டி அளவுக்கு எரிபொருள் சிக்கனத்தை எதிர்பார்க்க முடியாது என்ற காரணங்களால் பெரும்பாலான நிறுவனங்கள் மிக குறைவான விலையுடைய பட்ஜெட் கார்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை பயன்படுத்தி வருகின்றன.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்!

இந்த நிலையில், துணிச்சலாக டட்சன் நிறுவனம் தனது கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வை வழங்க உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்!

ஏஎம்டி போன்று கியர் மாற்றத்தின்போது சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களில் அதிர்வுகள் இருக்காது. சீரான ஆக்சிலரேசனையும், சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்கும். எரிபொருள் சிக்கனமும் போதிய அளவு இருக்கும்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்!

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. நிஸான் மைக்ரா காரிலும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு உள்ளது. ஆனால், மார்க்கெட்டிலேயே மிக குறைவான விலையில் கடட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்கள் நிலைநிறுத்தப்பட இருக்கின்றன. இதனை டட்சன் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்!

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் இப்போது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்பட இருக்கிறது. எனவே, டிசைனில் மாற்றங்கள் இருக்காது. ஆனால், சிவிடி பேட்ஜ் உள்ளிட்ட சில கூடுதல் அம்சங்களை பெற்றிருக்கும்.

டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் சிவிடி மாடல்கள் அறிமுக விபரம்!

அடுத்த மாதம் புதிய டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இந்த நிலையில், இந்த கார்களை சென்னையில் வைத்து எமது குழுவினர் நேற்று செய்துள்ளனர். விரைவில் இந்த கார்களை ஓட்டிய அனுபவத்தையும், சாதக, பாதகங்களையும் விரைவில் பகிர்ந்து கொள்கிறோம்.

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun Go and Go Plus CVT Gearbox Models will be launched in India by next month.
Story first published: Thursday, September 26, 2019, 15:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X