டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா?

டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா?

சில ஆண்டுகளுக்கு முன் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் மிக மோசமான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்ற கார் பிராண்டாக டட்சன் மாறியது. இந்த நிலையில், கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போதும் சில கார்களை கையில் எடுத்து க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி உள்ளது.

டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா?

மாருதி எர்டிகா, ரெனோ டஸ்ட்டர், மாருதி வேகன் ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் டட்சன் ரெடிகோ கார்கள் இப்போது க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி ஆய்வு முடிவுகளை குளோபல் என்சிஏபி அமைப்பு வெளியிட்டுள்ளது.

டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா?

இந்த ஆய்வு முடிவில் டட்சன் ரெடிகோ காருக்கு அதிகபட்சமான ஐந்துக்கு ஒன்று என்ற மோசமான நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. பெரியவர்களுக்கான தர மதிப்பீட்டில் ஒரே ஒரு நட்சத்திர மதிப்பீட்டையும், சிறியவர்களுக்கான தர மதிப்பீட்டில் இரண்டு நட்சத்திரங்களை மட்டுமே பெற்றுள்ளது.

டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா?

க்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்ட மாடலில் ஓட்டுனருக்கான ஏர்பேக் மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த காரின் கட்டுமானம் ஸ்திரமாக இல்லை என்பதும் இந்த சோதனை மூலமாக தெரிய வந்துள்ளது. ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிகளின் தலை மற்றும் கழுத்துப் பகுதிக்கு போதிய பாதுகாப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா?

அதேநேரத்தில், ஓட்டுனர் மார்பு பகுதிக்கு பெரிய அளவிலான காயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, ஒரே ஒரு நட்சத்திர புள்ளியை இந்த கார் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா?

அதேபோன்று, 18 மாத குழைந்தை மற்றும் 3 வயது குழந்தைக்கான பொம்மையை வைத்து சோதனை செய்ததில், தலை பகுதி முன் இருக்கையில் மோதி பலத்த காயமடைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் இந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா?

மேலும், இந்த காரில் 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள் பின் இருக்கைகளில் இல்லை என்பதும் ஏமாற்றமாக இருக்கிறது. எனினும், இந்த காரில் முன்புற இருக்கை பயணிக்கான ஏர்பேக், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ரிமோட் லாக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

டட்சன் ரெடிகோ காருக்கான க்ராஷ் டெஸ்ட் முடிவு... எதிர்பார்த்துதானே என்கிறீர்களா?

மிக குறைவான பட்ஜெட்டில் விற்பனையில் இருக்கும் இந்த கார் அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ், சரியான பட்ஜெட் போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற கார் மாடலாக இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #டட்சன் #datsun
English summary
Datsun Redi Go car has recieved 1 star safety rating in latest Global NCAP crash test report.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X