பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

மத்திய அரசின் தடுமாற்றங்கள் காரணமாக, பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? என்பதில் மக்கள் குழப்பத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜிஎஸ்டி குறைப்பு உள்பட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை ஓரளவிற்கு குறைய தொடங்கியுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

இதன் காரணமாக பொதுமக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை தற்போது பெரிய தடை கல்லாக உள்ளது. இந்த குறையையும் போக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் மிகப்பெரிய ஊக்கமே ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் என அத்துறையை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை கடந்த 2 தசாப்தங்களில், அதாவது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது மிக கடுமையாக சரிந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கொடுக்கப்படும் ஆதரவும் ஒரு காரணம் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்து வருகின்றனர். உண்மையில் பொதுமக்களும் சற்று குழம்பிதான் உள்ளனர். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதா? அல்லது வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவதா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் காணப்படவே செய்கிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

முன்னதாக இந்தியாவை படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றுவது தொடர்பாக நிதி ஆயோக் சமீபத்தில் மத்திய அரசுக்கு சில யோசனைகளை தெரிவித்திருந்தது. இதன்படி வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மூன்று சக்கர வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரை செய்திருந்தது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

அதேபோல் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து இரு சக்கர வாகனங்களும் (150 சிசி மற்றும் அதற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட) எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் தனது பரிந்துரைகளில் தெரிவித்திருந்தது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

அதே சமயம் வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் யோசனை கூறியிருந்தது. இதனிடையே நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரைகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது தொடர்பான காலக்கெடு எதையும் நிர்ணயிக்கவில்லை என்றும், அதனை சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் நிர்ணயம் செய்யாது எனவும் கூறினார். அத்துடன் ஏராளமான மாநில அரசுகள் எலெக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்து கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது இயற்கையான வழிமுறையில் நடக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புது டெல்லியில் நேற்று (ஆகஸ்ட் 21) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுதான் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். நிதின் கட்கரியின் இந்த பேட்டி ஆட்டோமொபைல் துறையினரை நிம்மதி பெரு மூச்சு விட வைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் விஷயத்தில் மத்திய அரசும், நிதி ஆயோக்கும் பயங்கரமான குழப்பத்தில் உள்ளதா? என்று எண்ண தோன்றுகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது ஒரு சில ஆண்டுகளில் நடக்கும் என சில சமயங்களில் அவர்கள் அறிவிக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

அப்படி இருக்க மாற்றத்திற்கான காலக்கெடு எதுவும் இல்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். இது போன்ற குழப்பங்களால், மின்சார வாகனங்களுக்கு மாறுவது தொடர்பாக அவர்களிடம் திடமான முடிவு எதுவும் இல்லையோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கை முடிவுகளில் மத்திய அரசு தடுமாறுவதாக ஆட்டோமொபைல் துறையினரும் புகார் தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கலாமா? வேண்டாமா? மக்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்திய மத்திய அரசு

மத்திய அரசின் தடுமாற்றங்கள் மக்களுடன் சேர்த்து ஆட்டோமொபைல் துறையை சார்ந்தவர்களையும் கடுமையான குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. எனவே மத்திய அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Most Read Articles
English summary
Deadline Not Set For Transition To Electric Vehicles Says Nitin Gadkari. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X