1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் 10ம் தேதி வரை வழங்கப்பட்ட 1.5 லட்சம் அபராத செல்லாண்களை திரும்ப பெறும் நடவடிக்கையில் டெல்லி போலீஸ் களமிறங்கியிருப்பாதக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் புதிய திருத்தங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்றாக அதிகபட்ச அபராதம் இருக்கின்றது. விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு முன்பெப்போதும் இல்லாத அளவில் அபராதத்தை வழங்க அது வழி வகுக்கின்றது.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் விதமாகவும், இந்தியாவை விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கிலும் மத்திய அரசு இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டில் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

இந்நிலையில், போக்குவரத்து விதியை மீறியதாக வழங்கப்பட்ட 1.5 லட்சம் அபராதச் செல்லாண்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் டெல்லி போலீஸார் களமிறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ளது.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

இந்த நடவடிக்கையில், அதிகபட்சமாக அதிவேகத்தில் சென்றதற்கான அபராத செல்லாண்களையே டெல்லி போலீஸார் ரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

இதுகுறித்து, டெல்லி காவல்துறை இணை ஆணையர் கூறியதாவது, "ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அக்டோபர் 10ம் தேதி வரை வழங்கப்பட்ட சுமார் 1.5 லட்சம் செல்லாண்களை டெல்லி போக்குவரத்து காவல்துறை திரும்பப் பெற இருக்கின்றது. அவற்றில் பெரும்பாலானவை தேசிய நெடுஞ்சாலை 24ல் அதிக வேகத்தில் பயணித்ததற்காக வழங்கப்பட்டவையாகும்" என்றார்.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

பொதுவாக அதிவேகத்தில் பயணிப்பது என்பது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். ஆனால், டெல்லி போலீஸாரின் இந்த அபராத செல்லாண் ரத்து நடவடிக்கைக்கு ஓர் தகுந்த காரணம் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 24 என்பது டெல்லி மற்றும் உபி-யை இணைக்கும் முக்கிய சாலையாக இருக்கின்றது. இந்த சாலையில் அதிகபட்சமாக 70 கிமீ வேகம் வரை செல்லலாம் என கூறப்படுகின்றது. ஆனால், தற்போது செல்லாணைப் பெற்றிருக்கும் 1.5 லட்சம் பேரில், பலர் 60 கிமீ வேகத்திற்கும் குறைவாகவே சென்றுள்ளனர்.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

இதன்காரணமாகவே, கடந்த இரண்டரை மாதங்களில் வழங்கப்பட்ட 1.5 லட்சம் அபராத செல்லாண்களை ரத்து செய்ய டெல்லி போக்குவரத்து போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பொதுமக்களில் பலர் தொடர்ச்சியாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை போலீஸார் கையாள இருக்கின்றனர்.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

மேலும், அம்மாநில பொதுப்பணித்துறையும் தேசிய நெடுஞ்சாலை 24-ல் அதிகபட்சமாக 70 கிமீ வேகம் வரை பயணிக்கலாம் என்பதை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்த தகவலை அரசு அதிகாரிகளுக்கு தெரிவிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக இந்த சிக்கலை டெல்லி போக்குவரத்துத்துறைச் சந்தித்துள்ளது.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

டெல்லி போலீஸாரின் அபராத செல்லாண் ரத்து நடவடிக்கையைத் தொடர்ந்து, நிஜாமுதீன் பாலம் மற்றும் காசிப்பூர் இடையேயான டெல்லி-உபி எல்லைக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 24 இல் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா மற்றும் வேகத்தை அளவிடும் கருவிகளில், அதிகபட்ச வேகமாக 70 கிமீ என்பது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

இதில், ஏற்கனவே அதி வேகத்திற்காக அபராதத்தைச் செலுத்தியவர்களுக்கான பதில் கேள்விக்குறியாக உள்ளது.

ஆகையால், முன்னதாக குற்றமே செய்யாமல் அபராதத்தைச் செலுத்திய ஓட்டுநர்கள் சிலர் நீதிமன்றத்தை நாட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

டெல்லி போலீஸாரின் அபராத செல்லாண் ரத்து நடவடிக்கை, இதுவரை அபராதத்தை செலுத்தாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பயனளிக்கும். மாறாக ஏற்கனவே அபராதத்தை வழங்கிய வாகன ஓட்டிகளுக்கு இது துளியளவும் பயனளிக்காது. அவர்கள் செலுத்திய கோடிக் கணக்கான ரூபாயும் கேள்விக் குறியாக மாறியுள்ளது.

1.5 லட்சம் இ-செல்லாண்களை திரும்ப பெற திட்டம்: அதிரடி நடவடிக்கையில் களமிறங்கும் டெல்லி போலீஸ்!

இதற்கான பதிலும் டெல்லி போக்குவரத்துத்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்தே, நாங்கள் குற்றம் செய்யாதவர்கள் என கூறும் வாகன ஓட்டிகள் சிலர் நீதிமன்றங்களை நாடி தங்களுக்கான நீதியைப் பெற இருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi Traffic Police Cancel 1.5 Lakh OverSpeeding Challans. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X