போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர், போலீஸ்காரரை பழி தீர்த்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது முதல் பல்வேறு சுவாரஷ்யமான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

அதிலும், மிக முக்கியமாக வாகனங்களின் விலையைக் காட்டிலும் அதிகளவில் அபராதம் விதிப்பதும், அந்த உச்சபட்ச அபராதத்தின் காரணமாக பொதுமக்கள் மற்றும் போலீஸார் இடையே மோதல் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகின்றது.

போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

இந்நிலையில், பிஹார் மாநிலம், புரேனா பகுதியில் ஓர் வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சீட் அணியாமல் வந்த மருத்துவரை மடக்கிய போலீஸார். அதற்கான அபராதத்தை வழங்கியுள்ளனர். அப்போது, தனக்கு அபராதத்தை வழங்கியதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்நபர், அதே பகுதியில் இருந்த மற்றுமொரு போலீஸாரை பழிக்கு பழி வாங்கியுள்ளார்.

போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் ஒரு சில மாநிலங்கள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும் பெரும்பாலான மாநிலங்களில் அந்த சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, ஏகபோகமான வசூலை குவித்து வருகின்றது.

போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

வசூல் வேட்டைக்காக போலீஸார், எப்போதும் வாகன தணிக்கை என்ற யுக்தியையே தற்போது கையாண்டு வருகின்றனர். இதன்மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான உச்சபட்ச அபராதத்தை விதித்து வருகின்றனர்.

போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

அந்தவகையில், வாகனம் சார்ந்து நடைபெறும் குற்றங்கள் மற்றும் விதிமீறல்களைக் கண்டறியும் விதமாக பிஹார் மாநிலத்தின், புரேனா பகுதியைச் சேர்ந்த போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக காரில் வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர், சீட் பெல்ட் அணியாமல் வந்ததாக கூறப்படுகின்றது.

ஆகையால், அவரை மடக்கிய போலீஸார், அவருக்கான அபராதச் செல்லாணை வழங்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

மருத்துவரும், தனது தவற்றை உணர்ந்து அபராதச் செல்லாணுக்காக காத்திருந்துள்ளார். அப்போது, அவரை போலீஸ் வாகனம் ஒன்று கடந்துச் சென்றது. அதில், அமர்ந்திருந்த காவலர் சீட் பெல்ட் அணியாமல் காரை இயக்கியுள்ளார். இதைக்கண்டு அதிர்ந்துபோன அவர், உடனடியாக தனது செல்போனை எடுத்து படம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

தொடர்ந்து விதியை மீறிய காவலருக்கும் அதிகபட்ச அபராதத்தை விதிக்குமாறு, தன்னை மடக்கிய போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அந்த போலீஸாருக்கு முதலில் அபராதத்தை விதித்துவிட்டு பின்னர் எனக்கு அபராதம் வழங்குங்கள் என கூறியுள்ளார்.

போலீஸ்காரரை பழி தீர்த்த மருத்துவர்... பீஹாரில் அரங்கேறிய சுவாரஷ்யமான சம்பவம்!

இல்லையெனில் அபராதத்தை ஏற்கமுடியாத என உறுதியாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சீட் பெல்ட் அணியாமல் வந்த காவலருக்கு ரூ. 1,000-த்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டது. பின்னர், அந்த மருத்துவருக்கும் அதேபோன்று செல்லாண் வழங்கப்பபட்டது.

பிஹார் மாநிலத்தில் அரங்கேறிய இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, அரசு அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் என யாராக இருந்தாலும் அதிகபட்ச அபராதத்தை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் என்பதை புதிய சட்டம் வலியுறுத்துகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Doctor Forces Policeman To Pay Fine For Not Wearing Seatbelt. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X