இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

தற்போது உருவாக்கப்பட்டுள்ள வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையில், பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக இந்தியா அதிகப்படியான தொகையை செலவு செய்கிறது. இதனால் பொருளாதார ரீதியில் இந்தியாவிற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

இவ்விரு பிரச்னைகளுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். எனவே இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் உள்ளது.

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளவர்கள் மத்தியில் இந்த அறிவிப்புகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

எனவே இன்னும் பல்வேறு சலுகைகளை வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மத்திய அரசு தவிர, பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தீவிரமாக உள்ளன. இதற்காக ஒரு சில மாநில அரசுகள் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகன கொள்கையை உருவாக்கி வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

இதில், அந்தந்த மாநிலங்களில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு என தனித்தனியே சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மின்சார வாகன கொள்கையை வெளியிட்டுள்ளன. இதில், தமிழக அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் யூனியன் பிரதேசமான சண்டிகரும் தற்போது வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

MOST READ: 19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

இந்தியாவில் வாகன அடர்த்தி மிகுந்த நகரங்களில் சண்டிகரும் ஒன்று. சண்டிகரில் தோராயமாக 12 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, சண்டிகர் காற்றின் தரத்தை வெகுவாக பாதிப்படைய செய்கிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதில் சண்டிகர் நிர்வாகம் ஆர்வமாக உள்ளது.

MOST READ: உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இன்ஜினியர்... என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

உலகின் மிக தூய்மையான நகரங்களில் ஒன்றாக சண்டிகர் உருவெடுக்க வேண்டும் என அதன் நிர்வாகம் விரும்புகிறது. மேலும் மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிலும் சண்டிகர் தலைசிறந்து விளங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எட்டுவதற்காக வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

MOST READ: 2,400 கிமீ ரேஞ்ச்... புரட்சிகரமான ஃப்யூவல் செல் பேட்டரியை உருவாக்கிய எஞ்சினியர்!

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

இதில், பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு சண்டிகரில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். அதேபோல் வரும் 2030ம் ஆண்டிற்குள் 1,000 பொது எலெக்ட்ரிக் வாகன சார்ஜர்களை இன்ஸ்டால் செய்யும் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. இதுதவிர மானிய திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

இதன்படி எலெக்ட்ரிக் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வாங்குபவர்கள் நேரடி மானியம் 20,000 ரூபாயை பெறுவார்கள். ஆனால் இது முதல் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும். அதே நேரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு வரும் 2024ம் ஆண்டு வரை, பதிவு கட்டணங்கள் மற்றும் சாலை வரி ஆகியவற்றில் இருந்து 100 சதவீதம் விலக்கு வழங்கப்படும்.

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு (முதல் ஆயிரம் பேருக்கு) 1 ஆண்டுக்கான இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படும். மேலும் அரசுக்கு சொந்தமான அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் மின்சார வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்வதற்கு வசதியாக இடங்களை ஒதுக்கும் திட்டமும் இந்த வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

அத்துடன் வீடுகளில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை இன்ஸ்டால் செய்பவர்களுக்கு 30 சதவீத மானியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரைவு எலெக்ட்ரிக் வாகன கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

சண்டிகரில் எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அமல்படுத்தும் பொறுப்பு சண்டிகர் போக்குவரத்து துறையிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலெக்ட்ரிக் வாகன கொள்கையை அமல்படுத்தும் விதமாக, கமிட்டி ஒன்றை போக்குவரத்து துறை அமைக்கவுள்ளது. இந்த கொள்கையை எப்படி அமல்படுத்துவது? என்பது தொடர்பான பரிந்துரைகளை இந்த கமிட்டி வழங்கும்.

Source:Autocar India

Most Read Articles

English summary
Draft Electric Vehicle Policy: Chandigarh Plans To Register Only EVs Post 2030. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X