மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

மாருதி சுஸுகி நிறுவனம் அசத்தலான முயற்சி ஒன்றை செய்து வருகிறது. அது என்னவென்று தெரிந்தால் உங்களால் நிச்சயமாக பாராட்டாமல் இருக்க முடியாது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

மூன்றாம் உலகப்போர் என்ற ஒன்று மூண்டால், அது நிச்சயம் தண்ணீருக்காகதான் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு உலகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. குறிப்பாக தமிழ்நாட்டின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

தலைநகர் சென்னையில் தண்ணீர் பிரச்னை தொடர்பாக சமீபத்தில் வெளிவந்த செய்திகள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. எனவே தண்ணீரை சேமிப்பதற்கான வழிமுறைகள் குறித்து தற்போது அதிகம் ஆராயப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகின்றன.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது விட்டாரா பிரெஸ்ஸா, ஸ்விப்ட், டிசையர், ஆல்டோ, ஆல்டோ கே10, செலிரியோ, ஈக்கோ (7/5 சீட்டர்) மற்றும் சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

இவை அனைத்தும் அரேனா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்படும் கார்கள் ஆகும். இதுதவிர தனது நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக, இக்னிஸ், பலேனோ, சியாஸ், எஸ்-க்ராஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்எல்6 உள்ளிட்ட கார் மாடல்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

இந்த சூழலில் தண்ணீர் சேமிப்பிற்காக மாருதி சுஸுகி நிறுவனம் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பதற்காக டிரைவாஷ் சிஸ்டமை மாருதி சுஸுகி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன்படி 2018-19ம் நிதியாண்டில், 6.9 மில்லியன் வாகனங்களை டிரைவாஷ் சிஸ்டம் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனம் சர்வீஸ் செய்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

இதன் மூலமாக 656 மில்லியன் லிட்டர்கள் தண்ணீரை மாருதி சுஸுகி நிறுவனம் சேமித்துள்ளது. அதாவது தனது ஒர்க் ஷாப்களில் ஒரு காருக்கு 95 லிட்டருக்கும் மேற்பட்ட தண்ணீரை மாருதி சுஸுகி நிறுவனம் சேமித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 1,750க்கும் மேற்பட்ட நகரங்களில், 3,600க்கும் மேற்பட்ட ஒர்க் ஷாப்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

டிரை வாஷ் சிஸ்டம் மூலமாக மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் காரை கழுவும் நேரம் குறைந்துள்ளது. மேலும் காரை கழுவும் தரம் மேம்பட்டிருப்பதுடன், தண்ணீர் நுகர்வும் குறைந்துள்ளது. இதுதவிர நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்து வருகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

இதன்படி நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்பதற்காக தனது பெரும்பாலான உற்பத்தி பணிகளுக்கு கேனல் வாட்டரை (canal water) மாருதி சுஸுகி நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இதுதவிர மேலும் பல்வேறு பணிகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை மாருதி சுஸுகி நிறுவனம் பயன்படுத்தி கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

தண்ணீரை சேமிக்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த முயற்சியை நம்மால் கண்டிப்பாக பாராட்டாமல் இருக்க முடியாது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
English summary
Dry Car Wash Initiative: Maruti Suzuki Saves 656 Million Litres Of Water In 2018-19. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X