மாருதியின் அதிர்ச்சி அறிவிப்பு: முடிவடைகிறது 35 வருட பயணம்..!!!

இந்திய மக்களிடம் அமோக வரவேற்பினை பெற்ற மாருதி ஆம்னியின் தயாரிப்பினை நிறுத்தி அதற்கு பதிலாக மாருதி ஈக்கோ தயாரிப்பு அதிகரிக்கப்படும் என மாருதி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா அறிவித்துள்ளார். மாருதி நிறுவனத்தில் 35 வருடங்களாக விற்பனையில் சிறந்து விளங்கிய மாருதி ஆம்னி தற்போது விடைபெறுகிறது.

மாருதியின் அதிர்ச்சி அறிவிப்பு: முடிவடைகிறது 35 வருட பயணம்

பல நடுத்தர குடும்பத்தினரின் தேவைகளை கச்சிதமாக பூர்த்தி செய்து வருகிறது மாருதியின் ஓம்னி மினிவேன். தனி நபர் மார்க்கெட்டில் 5 சீட்டர், 8 சீட்டர் மாடல்களிலும் வர்த்தக மார்க்கெட்டில் ஆம்புலன்ஸ், கார்கோ உள்ளிட்ட மாடல்களில் கிடைக்கிறது. மேலும், நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் நல்ல விற்பனை பதிவை செய்து வரும் மாடலும் கூட. மாதத்திற்கு 5,000 ஓம்னி வேன்களை மாருதி விற்பனை செய்து வருகிறது.

மாருதியின் அதிர்ச்சி அறிவிப்பு: முடிவடைகிறது 35 வருட பயணம்

மார்க்கெட்டிலேயே டிரைவர் உள்பட 8 பேர் வரை பயணம் செய்யத் தகுந்த வசதிகொண்ட ஒரே குறைந்த விலை மாடல் மாருதி ஓம்னி மட்டுமே. அதிக பயணிகள் செல்லத்தக்க வகையில் டிசைன் செய்யப்பட்டு வெற்றி பெற்ற மாடலாக மாருதி ஓம்னி இனி விற்பனைக்கு வரத்து என்ற செய்தி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாருதியின் அதிர்ச்சி அறிவிப்பு: முடிவடைகிறது 35 வருட பயணம்

மாருதி ஈக்கோ மற்றும் ஓம்னி கார்கள் சத்தமில்லாமல் விற்பனையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை மாதாமாதம் பெற்று வருகின்றன. மிக நீண்ட காலமாக இந்த இரு மாடல்களிலுமே எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இருப்பினும், விற்பனை சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

மாருதியின் அதிர்ச்சி அறிவிப்பு: முடிவடைகிறது 35 வருட பயணம்

இந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் கார்களுக்கான புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த இரு மாடல்களையும் மேம்படுத்த முதலீடு அதிகம் தேவைப்படுவதால், மாருதி நிறுவனம் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

மாருதியின் அதிர்ச்சி அறிவிப்பு: முடிவடைகிறது 35 வருட பயணம்

இந்த புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளின்படி கார்கள் வடிவமைக்கப்படுவதால், விபத்துக்களின்போது பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்படும். உயிரிழப்புகள் தவிர்ப்பதற்கான வாய்ப்பையும் உருவாக்கும். இதுதவிர, ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்களும் பல மாடல்களில் கொடுக்கப்பட்டு வருகிறது.

மாருதியின் அதிர்ச்சி அறிவிப்பு: முடிவடைகிறது 35 வருட பயணம்

இந்நிலையில் நாட்டின் புதிய வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டத்தை கருத்தில் கொண்டு மாருதி ஆம்னியில் இனி புதிய பாதுகாப்பு பாகங்களை பொருத்துவதை தவிர்த்து அதற்க்கு பதிலாக மாருதி ஈக்கோ வேனில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி விற்பனைக்கு வரவிருப்பதாக மாருதி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா கூறினார். இந்த ஆண்டு மத்தியில் மாருதி ஆம்னி தயாரிப்பு முழுமையாக நிறுத்தப்படும் என தெரிகிறது.

மாருதியின் அதிர்ச்சி அறிவிப்பு: முடிவடைகிறது 35 வருட பயணம்

மாருதி ஆம்னியின் 796 சிசி 3 சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 59 என்எம் டார்க் திறனையுமம் வழங்கும் திறன் கொண்டதாக இருந்தது. மாருதி ஈக்கோ 1.2 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 73 பிஎச்பி பவரையும், 101 என்எம் டார்க் திறனையுமம் வழங்கும் திறன் கொண்டதாக இறக்கிறது. மாருதி ஆம்னி 3.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது இது மாருதி ஈக்கோவை விட 70,000 ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Eeco Replaced Maruthi Omni: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X