பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

மின்சார பேருந்தை சார்ஜ் செய்ய அதன் ஓட்டுநர், டீசலால் இயங்கும் ஜெனரேட்டரைப் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

நாட்டின் தற்போதைய முக்கிய தேவைகளில் ஒன்றாக மின்சார வாகனங்கள் மாறியுள்ளன. இவை சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்படும் என்ற காரணத்தால், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்குமான மிகப்பெரிய தேடலாக அது மாறியுள்ளது.

எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுகலந்த புகை சுற்றுப்புறச் சூழலுக்கு சீர்கேட்டை விளைவிப்பதுடன், பலவிதமான வியாதிகள் உருவாகவும் காரணமாக அமைகின்றது.

பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

ஆனால், மின்சார வாகனங்கள் அவ்வாறில்லாமல், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் செயல்பாட்டிற்கு நேர் எதிர்மறையாக செயல்படுகின்றன.

அந்தவகையில், சுற்றுப்புறச் சூழலுக்க நண்பனாக செயல்படுவது மட்டுமின்றி குறைந்த செலவில் அதிக பலனை அளிக்கும் திறனை அவை பெற்றிருக்கின்றன. இதுபோன்ற பல காரணங்களால் மின்சார வாகனங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

இந்நிலையில், மின்சார பேருந்து ஒன்று டீசலால் இயங்கும் ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி, வைரலாகி வருகின்றது.

பொதுவாக, மின்சார வாகனங்கள் குறைந்த பராமரிப்பு செலவில் அதிகம் பலனளிப்பதாலும், பூஜ்ஜியம் உமிழ்வை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்ற காரணத்தினாலுமே, அவற்றின் விற்பனையை ஊக்குவிக்கின்ற வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

ஆனால், இங்கு ஓர் மின்சார பேருந்து, அதிக மாசை வெளிப்படுத்தும் டீசல் ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்துகொள்ளும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் முழுமையாக சார்ஜ் தீர்ந்துவிட்ட காரணத்தால், அதனை மீண்டும் இயக்கும் நோக்கில், அப்பேருந்தின் ஓட்டுநர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

ஓட்டுநரின் இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் வசைபாடிய வண்ணம் இருக்கின்றனர். ஆனால், போதியளவு மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், இந்தியாவில் மின்சார வாகனங்குளுக்கான சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை இருப்பதை இந்த சம்பவம் வெளிக்காட்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் இன்றளவும் சென்று சேரவில்லை. இதற்கு முக்கிய காரணமாக மின்வாகனங்களின் அதிக விலை இருந்தாலும், அதற்கு அடுத்தபடியாக சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை இருக்கின்றது.

பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் அந்த வீடியோவை, ஹிமன்சு பலிவல் என்ற டுவிட்டர் பயனர் வெளியிட்டுள்ளார்.

இச்சம்பவம், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அரங்கேறியுள்ளது. மேலும், ஜெனரேட்டர் மூலம் சார்ஜ் செய்யப்பட்ட மின்சாரப் பேருந்து பிஎம்சி-க்கு சொந்தமானது என அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, மின்சாரப் பேருந்தின் இந்த நிலைக்கு கவலைத் தெரிவிக்கும் விதமாக அந்த பதிவில் அவரது வருத்தத்தையும் பதிவிட்டுள்ளார்.

அந்தவகையில், "மின்சார பேருந்தை சார்ஜ் செய்ய சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி, பின்னர் சுற்றுப்புறத்தை பாதுகாக்க மின்சாரப் பேருந்துகளை பயன்படுத்த போகிறீர்களா?... என கேள்வியெழுப்பியுள்ளார்.

பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

இந்தியாவில் இன்னும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் முழுமையாக வந்தடையாத காரணத்தால், பல நிறுவனங்கள் அதன் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன.

பேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

அண்மையில் மாருதி சுஸுகி நிறுவனம், அதன் மின்சார வாகனங்களின் அறிமுகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கா காரணத்தை வெளியிட்டிருந்தது. அதில், சார்ஜிங் நிலையம் இல்லாததும் ஓர் காரணமாகும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Electric Bus Charging Through Diesel Run Generator. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X