இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து

உலகில் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் மார்கெட்டை கொண்டது இந்தியா. உலகில் அதிகளவில் மாசு உண்டாக்கும் நகரங்களில் 15 நகரங்கள் நம் இந்தியாவில் தான் உள்ளன. இதில் வாகனங்களால் ஏற்படும் மாசுவை குறைக்க எலக்ட்ரிக் வாகனங்கள் தான் ஒரே வழி என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து

இந்தியாவில் 1000 பேரில் 19 நபர்கள் காரை உபயோக்கின்றனர் என ஆய்வறிக்கை கூறுகிறது. இது குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும் நம் நாட்டில் வாகன நெரிசல், 4 வினாடிகளுக்கு ஒரு வாகன விபத்து போன்றவை பெரும் தலைவலியாக உள்ளது.

இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து

ஒரு நாட்டின் போக்குவரத்து மாசு மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் வாகனத்தின் டிசைன்ஸ் பிரிவு மிக முக்கிய பங்கை வகிக்கிறது என டாடா மோட்டார்ஸின் டிசைன்ஸ் பிரிவின் முதன்மை அதிகாரி Mr.ப்ரதாப் போஸ் கூறியுள்ளார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயன்படுத்தும் இலகுவான மெட்டிரீயல்ஸ், கார்ப்பிரேட் அல்லாத காற்று இயக்கவியல் முறைகள் மற்றும் க்ரியேடிங் டிசைன்ஸ் போன்றவை மறுசுழற்சிக்கு உதவுகிறது.

இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து

மேலும் டாடா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற என்ஜின்களை பயன்படுத்தவும் முயற்சித்து வருகிறது. இந்த குறிக்கோள்களினால் இந்நிறுவனத்திடம் இருந்து டிகோர் இவி எலக்ட்ரிக் கார் சமீபத்தில் சந்தைக்கு வந்தது. மேலும் அகமதாபாத் நகர அரசுடன் 300 எலக்ட்ரிக் பேருந்துகளை தயார் செய்வதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து

இந்த பசுமை வாகனங்கள் விலையுயர்ந்ததாக இருந்தாலும் இவை காற்று மாசு உள்ளிட்ட எந்த மாசுவையும் ஏற்படுத்தாத, சர்வீஸ் மெயிண்டனன்ஸுக்கும் எந்தவொரு பண செலவையும் உண்டாக்காத வாகனமாக இருக்கும் என அந்நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து

உலகளவில் குறைந்த விலையில் விற்பனையாகும் எலக்ட்ரிக் வாகனத்தின் விலையே சுமார் 21 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் டாடா நிறுவனம் இத்தகைய வாகனங்களை மலிவான விலையில் அதேநேரம் நீண்ட காலம் நன்மை தராத வகையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் விலையுயர்ந்த எலக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் டயர், ப்ரேக்குகளை மலிவான பாகங்களால் மாற்றவுள்ளது.

இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து

டாடா நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு இந்திய ஆட்டோமொபைல் மார்கெட் எந்த வகையில் நன்மை தரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனால் டாடா நிறுவனம் குறைந்த விலையில் அதற்கு ஏற்ற தரத்துடைய எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து

ஆனால் அவர்களிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே ஆட்டோமொபைல் தொழில் சார்ந்த டிசைனர்ஸ் உள்ளனர். இதனால் டாடா நிறுவனம் தங்களது கார்களின் டிசைன் விஷயத்தில் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்தினால் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் புதிய சாதனை புரியலாம்.

இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து

டாடா நிறுவனத்தின் இந்த எல்க்ட்ரிக் வாகனங்கள் பற்றிய ஆர்வம் நிச்சயமாக தினந்தினம் அதிகரித்து வரும் மாசுப்படுத்தலை குறைப்பதற்காக தான் இருக்கும். ஆனால் டாடா நிறுவனம் கூறும் எலக்ட்ரிக் வாகனங்களால் விபத்துகளை குறைக்க முடியும் என்கிற கூற்று தான் சற்றும் விளங்கவில்லை. இதையெல்லாம் விட டாடா நிறுவனம் கவனிக்க வேண்டிய விஷயம், இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் தாங்கள் உபயோகிக்கும் வாகனத்தில் இருந்து எலக்ட்ரிக் வாகனத்திற்கு மாறுவதற்கு பெரியளவில் யோசிப்பார்கள் என்பது தான்.

இந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து

விலையும் வருடங்கள் செல்ல செல்ல குறையும் என வைத்து கொண்டாலும், வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் உள்கட்டமைப்பு எலக்ட்ரிக் கார்களில் அவ்வளவாக இல்லை. சரி இயந்திர பிரிவிலாவது எதாவது ஒரு நன்மை உள்ளதா என பார்த்தால், ஒரு நாளில் 30 கிலோமீட்டர் செல்லும் இந்த காரை 40 கிமீ/நேரத்தில் ஓட்டி செல்ல கண்டிப்பாக யாரும் விரும்பமாட்டார்கள்.

Most Read Articles
English summary
Electric Vehicles Are The Solution To India’s Pollution And Safety Problems: Tata Motors
Story first published: Saturday, October 12, 2019, 19:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X