பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட் போர்ஷே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை, டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க் கலாய்த்து டுவிட்டர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க மிஸ்டர்!

சொகுசு கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் போர்ஷே நிறுவனம், அதன் புத்தம் புதிய மின்சார கார்களான டெய்கான் டர்போ மற்றும் டெய்கான் டர்போ எஸ் என்று அழைக்கப்படும் இரு புதிய மாடல்களை அண்மையில் அறிமுகம் செய்தது.

இவ்விரு கார்களின் சிறப்பம்சங்கள் சில டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் அம்சங்களுடன் ஒத்தவாறு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க மிஸ்டர்!

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வாக செயல்பட்டு வரும் எலன் முஸ்க், டெஸ்லாக கார்களை ஒத்தவாறு களமிறங்கியுள்ள போர்ஷே நிறுவனத்தின் புதிய இரு மின்சார கார்களையும் வச்சு செய்யுமாறு டுவிட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டதாவது, "யுஎம் @போர்ஷே, டர்போ என்ற வார்த்தைக்கு நீங்கள் என்ன அர்த்தமென்று நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க மிஸ்டர்!

பொதுவாக, டர்போ என்ற வார்த்தையை டர்போசார்ஜட் செய்யப்பட்ட எஞ்ஜின் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. அதாவது, ஐசி எஞ்ஜின் வாகனங்கள் எனப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களால் இயங்கும் எஞ்ஜின்களுக்கு இத்தகைய பெயர் உபயோகிக்கப்பட்டு வருகின்றது.

பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க மிஸ்டர்!

ஆனால், போர்ஷே நிறுவனம், டர்போ என்ற பெயரை அதன் பல தயாரிப்புகளுக்கு பயன்படுத்தி வருவதாக எலன் முஸ்க் சுட்டிக் காட்டினார். மேலும், போர்ஷே கேமேன், கெயன்னெ, 911, மசான் உள்ளிட்ட மாடல்களில் டர்போ என்ற வேரியண்டில் கார்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க மிஸ்டர்!

தொடர்ந்து, தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போர்ஷே எலெக்ட்ரிக் கார்களான டைகன் மாடலின் இரு வேரியண்டுகளுக்கும் டர்போ வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதை விளக்கினார்.

எலன் முஸ்கின் இந்த தீண்டல், போர்ஷே நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளில் கிளைகளை அமைத்து, வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனத்திற்கு இது கூட தெரியவில்லை என கேள்வியெழுப்பும் வகையில் இது அமைந்துள்ளது.

அதேசமயம், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் முஸ்க், இவ்வாறு போட்டி நிறுவனங்களை சீண்டுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக ஆடி நிறுவனம் அறிமுகம் செய்த இ-ட்ரான் காரையும் அவர் கலாய்த்து டுவிட் செய்திருந்தார்.

பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க மிஸ்டர்!

அண்மைக் காலங்களாக உலகம் முழுவதும் நிலவி மின்வாகனங்களுக்கான எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இதனடிப்படையில், சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷேவும், டைகன் டர்போ மற்றும் டைகன் டர்போ எஸ் ஆகிய மாடல்களை தயாரித்துள்ளது.

பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க மிஸ்டர்!

இம்மாதம் ஃபிராங்க்பர்ட் வாகன கண்காட்சியில் உலகளாவிய வெளியீடாக களமிறங்கும் இக்கார், வருகின்ற டிசம்பர் மாதத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

இந்த காரில் இரு சக்திவாய்ந்த மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. அவையிரண்டும் இணைந்து அதிகபட்சமாக 600 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க மிஸ்டர்!

டைகன் டர்போ எஸ் மாடல் நான்கு கதவுகள் கொண்ட செடான் ரக மாடலாக களமிறங்க இருக்கின்றது. இது ஒரு முழுமையான சார்ஜில் 280 கிமீ தூரம் வரை செல்லும். அதேபோன்று, டைகன் டர்போ மாடல் ஒரு முழுமையான சார்தில் 260 கிமீ தூரம் வரை செல்லும். இவையிரண்டிற்கும் வெறும் 20 கிமீட்டர்கள் மட்டுமே வித்தியாசமாக உள்ளன.

பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க மிஸ்டர்!

இந்த கார்கள் குறிப்பிட்ட ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்யும்போது வெறும் 23 நிமிடங்களிலேயே 80 சதவீத சார்ஜை அடைந்துவிடும்.

அதற்கேற்ப வகையில், இதில் 800 வோல்ட் பேட்டரி இதில் பயன்படுத்தப்படுகின்றது. இதில், டைகன் டர்போ எஸ் வேரியண்ட் 0-த்தில் இருந்து 60 என்ற கிலோ மீட்டர் வேகத்தை 2.6 விநாடிகளிலேயே அடைந்துவிடும். இது உச்சகட்டமாக 161 கிமீ வேகத்தில் செல்லும்.

பிரபல போர்ஷே நிறுவனத்தை வச்சு செய்த எலன் மஸ்க்: என்னதான் இருந்தாலும் நீங்க இப்படிலாம் கலாய்க்க கூடாதுங்க மிஸ்டர்!

இதுமட்டுமின்றி, இந்த காரில் பல்வேறு சொகுசு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், 10.9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன். டெஸ்லா தானியங்கி கார்களில் காணப்படுவதுபோன்ற 17 இன்ச் ஸ்கிரீன். இத்துடன், ஹெல்லோ கூகிள் என்று கூறுவதைப் போல ஹே போர்ஷே என்று கூறி பயனடையும் வகையில் குரல் அசிஸ்டண்ட் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Elon Musk 'Trolls' Porsche's New Electric Car Taycan Turbo. Read In Tamil.
Story first published: Friday, September 6, 2019, 16:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X