இந்தியாவில் இனி வீடுகளில் இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

இங்கிலாந்து பாணியில் மத்திய அரசும் அதிரடி அறிவிப்பை வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக உலகின் பெரும்பாலான நாடுகளும் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு எதிரிகளாக இருப்பதே இதற்கு மிக முக்கியமான காரணம். மற்றொரு முக்கியமான காரணம் என்னவென்றால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை அதிகரிப்பதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுதான்.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் பிரபலமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அள்ளி வீசி கொண்டுள்ளது.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு வேகமாக மாறுவதில் பெரும் தடைக்கல்லாக இருப்பது சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறைதான். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாகனங்களை கை கழுவுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

குறிப்பாக இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை காரணமாகதான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்கள் என்ற விஷயத்தில் இங்கிலாந்து ஒரு படி மேலே போய் விட்டது. எதிர்காலத்தை ஆளப்போவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் என்ற விஷயத்தை இங்கிலாந்து அரசு நன்றாக புரிந்து கொண்டு விட்டது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை இங்கிலாந்து வேக வேகமாக ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

இங்கிலாந்தில் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சூழலில் இங்கிலாந்தில் கட்டப்படும் ஒவ்வொரு புதிய வீட்டிலும், சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்குவது குறித்து அந்நாட்டு அரசு மிக தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

அதாவது சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாமல் வீடுகளை கட்டக்கூடாது. இந்த புதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டால், உலகிலேயே புதிய வீடுகளில் சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டாயமாக்கிய முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெறும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எளிதாக மாற இது உதவும் என இங்கிலாந்து அரசு நம்புகிறது.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

இதுகுறித்து ஆட்டோஎக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் புதிய வீடுகளில் கட்டாயமாக இடம்பெற வேண்டியது ரேபிட் சார்ஜரா? பாஸ்ட் சார்ஜரா? அல்லது ஸ்லோ சார்ஜரா? என்பது குறிப்பிடப்படவில்லை. அதே சமயத்தில் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்களுக்கும் இந்த புதிய விதிமுறை கட்டாயமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

அதாவது காம்ப்ளக்ஸில் உள்ள ஒவ்வொரு அப்பார்ட்மெண்ட்டிற்கும், பார்க்கிங் இடத்தில், குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக் வாகன சார்ஜரையாவது நிறுவ வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விதியின் மூலம் புதிதாக வீடு கட்டும் அல்லது புதிய வீட்டை வாங்கும் அனைவருக்கும் சொந்தமாக சார்ஜிங் ஸ்டேஷன் இருப்பது உறுதி செய்யப்படும்.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

இதன் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களை அவர்கள் சார்ஜ் செய்ய பொது இடங்களில் உள்ள சார்ஜர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை குறையும். இங்கிலாந்து அரசு இதனை கட்டாயமாக்கினால், நிச்சயம் இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படும். ஐரோப்பிய நாடுகள் பலவும் கடந்த சில வருடங்களாகவே எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

இதில், இங்கிலாந்து முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை எடுத்து கொண்டால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு மிக தீவிரமாக உள்ளது. குறிப்பாக இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ள பிரதமர் நரேந்திர மோடி, எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

எனவே இங்கிலாந்தை பின்பற்றி இந்தியாவிலும் புதிய வீடுகள் அனைத்திலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்படுமா? என என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படி ஒரு விதி கட்டாயமாக்கப்பட்டால், அது யாரையும் பாதிக்கவும் செய்யாது. எனினும் அமல்படுத்துவதாக இருந்தால் இதன் சாதக, பாதகங்களை ஆராய்வது அவசியம்.

இந்தியாவில் வீடுகளில் இனி இது இருப்பது கட்டாயம்? இங்கிலாந்தை பின்பற்றி அதிரடி காட்டுமா மோடி அரசு?

உண்மையில் வருங்காலத்தில் இப்படி ஒரு விதிமுறை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை என்பதுதான் தற்போது உள்ள யதார்த்த நிலை. ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு அவ்வளவு தீவிரமாகவும், உறுதியாகவும் உள்ளது.

Most Read Articles
English summary
UK To Mandate Installation Of EV charging Points In All New Houses — Wise Move Indeed. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X