Just In
- 19 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பீஜோ குழுமத்தை இணைக்கும் முயற்சியில் ஃபியட் க்றைல்ஸர் தீவிரம்!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ குழுமத்தை இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது ஃபியட் க்றைஸ்லர் குழுமம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ வாகன குழுமத்தை இணைப்பதற்கான முயற்சிகளில் ஃபியட் க்றைஸ்லர் குழுமம் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது ஃபியட் க்றைஸ்லர் நிறுனம்.

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்துடன் பீஜோ இணைக்கப்பட்டால், இந்த குழுமத்தின் மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையாக மாறும் என்று மதிப்பிடப்படுகிறது. தற்போது பீஜோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பணியாற்றி வரும் கார்லோஸ் தவேர்ஸ் இணைப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிய குழுமத்துக்கு தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர் ரெனோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் தலைவராக செயல்பட்டு வரும் ஜான் எல்கன் இணைப்பு நடவடிக்கைக்கு பின் புதிய குழுமத்தின் தலைவராக செயல்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. தற்போது இந்த கருத்துக்கு இரு நிறுவனங்களுக்கும் ஒப்புக் கொள்ளும் முடிவில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த இணைப்பு நடவடிக்கையின் மூலமாக ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோவின் கீழ் செயல்படும் ஆல்ஃபா ரோமியோ, க்றைஸ்லர், சிட்ரோன், டாட்ஜ், டிஎஸ், ஜீப், லான்சியா, மஸேரட்டி, ஒபெல், பீஜோ மற்றும் வாக்ஸ்ஹால் ஆகிய நிறுவனங்கள் ஒரே குடையின் கீழ் கட்டுப்படுத்தப்படும்.

தற்போது துவங்கி இருக்கும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவடைந்தால் இந்த இணைப்பு நடவடிக்கை அடுத்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக ஃபியட் க்றைஸ்லர் மற்றும் பீஜோ குழுமங்களிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

எனவே, இரு குழுமங்களையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே விரைவில் இதற்கான அறிவிப்பும், ஒப்பந்தங்களும் கையெழுத்தாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த முறை நிச்சயம் இரு குழுமங்களும் இந்த இணைப்பு நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பீஜோ குழுமத்தை கையகப்படுத்துவதற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மற்றொரு நிறுவனமான ரெனோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அது தோல்வியில் முடிந்ததால், தற்போது ஃபியட் க்றைஸ்லர் குழுமம் மீண்டும் இரண்டாவது கட்ட முயற்சியை துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.