தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

தனது புனே தொழிற்சாலையில் இருந்து முதல் டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து அறிமுகத்திற்கு தயாராகியுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2020 ஜனவரியில் டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகமாகவுள்ளது.

தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

டாடா அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் இந்த வருடத்தின் இறுதியில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதன் என்ஜின் பிஎஸ்4 தரத்தில் வெளிவராமல் நேரடியாக பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக வெளிவரவுள்ளது. இதுதான் டாடா அல்ட்ராஸ் மாடலின் அறிமுகத்திற்கு தாமதம்.

தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்த காரின் டீசரை வெளியிட்டு இருந்தது. இதனால் அல்ட்ராஸ் கார் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. அல்ட்ராஸ் காரின் இந்த டீசரை காண கீழேயுள்ள லிங்கை அழுத்தவும்.

தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

அல்ட்ராஸ் மாடல் தான் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதல் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலாகும். டாடாவின் இம்பேக்ட் 2.0 டிசைனில் உருவாகியுள்ள மற்றொரு காராக அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் உள்ளது. முன்னதாக ஹெரியர் எஸ்யூவி மாடல் தயாரிக்கப்பட்டிருந்தது.

தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

மேலும் டாடா அல்ட்ராஸ் மாடல் தான் டாடாவின் ஆல்ஃபா கட்டமைப்பில் அறிமுகமாகும் முதல் காராகும். இந்த கட்டமைப்பு ஃப்ளாட்ஃபாரத்தை டாடா நிறுவனம் எதிர்காலத்தில் சிறிய அளவிலான கார்களை தயாரிக்க பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஃப்ளாட்பாரத்துடன் ஒமிகா கட்டமைப்பு என்கிற மற்றொரு ஃப்ளாட்ஃபாரத்தையும் இந்நிறுவனம் வைத்துள்ளது.

தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

2019 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் டாடா நிறுவனத்தில் இருந்து ப்ரீமியம் ஹேட்ச்பேக்காக ஹெரியரின் 7-இருக்கை மாடலின் எஸ்யூவி மற்றும் எலக்ட்ரிக் வெர்சன்கள் தான் முதலில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

இந்த அல்ட்ராஸ் காரில் டாடா நிறுவனம் ஏகப்பட்ட ஸ்டைலான வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்களை வழங்கியுள்ளது. தொழிற்நுட்பங்கள் அம்சங்கள் இந்த காரில் நிறையவே உள்ளன. அல்ட்ராஸ் காரின் உட்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் குறித்த தகவல்கள் சமீபத்தில் தான் வெளியானது. இதுகுறித்து விரிவாக அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

அல்ட்ராஸ் மாடலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்று என்ஜின் தேர்வுகளை வழங்கியுள்ளது. டாடா டியாகோவில் கொடுக்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (85 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்), நெக்ஸான் மாடலில் உள்ள மூன்று சிலிண்டர் அமைப்புகளுடன் 102 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆகும்.

தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

இந்த மூன்று என்ஜின் தேர்வுகளுடனும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. சில மாதங்கள் கழித்து இதனுடன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வையும் வழங்க டாடா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே கூறியதுபோல், அல்ட்ராஸ் மாடல் தனது முதல் நாள் விற்பனையில் இருந்து பிஎஸ்6 என்ஜினுடன் தான் அறிமுகமாகவுள்ளது.

தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

இந்த காரின் தயாரிப்புடன் டாடா நிறுவனம் மேலும் பல புதிய கார்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனத்தின் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹெரியரின் 7 இருக்கை வெர்சன் கிராவிடாஸ் என்ற பெயரில் அறிமுகமாகவுள்ளது. இந்த புதிய கார் குறித்து மேலும் அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

தயாரிப்பு முழுவதும் நிறைவடைந்து முதல் டாடா அல்ட்ராஸ் கார் வெளியானது...

இந்த புதிய தயாரிப்புகள் மட்டுமில்லாமல் டாடா நிறுவனம் நெக்ஸான், டியாகோ மற்றும் டிகோர் மாடல்களை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தும் வேலைகளிலும் ஈடுப்பட்டு வருகிறது. 2020 ஜனவரியில் விற்பனைக்கு வரவுள்ள டாடா அல்ட்ராஸ் மாருதி சுசுகி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற கார்களுடன் போட்டியிடவுள்ளது. இந்த புதிய காரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.6-7 லட்சத்தில் இருந்து விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Altroz Production Begins: First Hatchback Rolls Out Of Assembly Line
Story first published: Thursday, November 28, 2019, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X