மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

இந்திய சாலைகளின் தரம் கடந்த சில வருடங்களாக பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும் சில முக்கிய நகரங்களில் கூட இன்னும் சாலைகள் மேம்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. இதனாலேயே வாடிக்கையாளர்கள் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் கொண்ட வாகனங்களை தேர்வு செய்கின்றனர். இவை மோசமான சாலைகளால் பெரிய அளவில் பாதிப்பு அடையாது.

எனவே தான் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எஸ்யூவி கார்கள் தற்போது அதிகம் சாலைகளில் தென்படுகின்றன. கார் தயாரிப்பு நிறுவனங்களும் எஸ்யூவி தயாரிப்புகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் சில நிறுவனங்கள் தங்களது செடான் கார்களையே எஸ்யூவி தரத்திற்கு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸுடன் தயாரித்து வெளியிட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட சில செடான் கார்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

டாடா ஜெஸ்ட்

175 மிமீ என்ற அதிக அளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ள இந்த கார் கடந்த 2014ல் அறிமுகமானது. டாடா நிறுவனத்தின் மற்றொரு செடான் மாடல் டிகோரை விட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸை இந்த கார் கொண்டுள்ளது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

இது மட்டுமில்லாமல் இதன் சக்கரங்களும் சிறியதாக உள்ளதால் மோசமான சாலைகளிலும் இந்த கார் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் கடந்து செல்லும். இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.5.82 லட்சத்தில் இருந்து விற்கப்படும் இந்த ஜெஸ்ட் செடான் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு வேரியண்ட் தேர்வுகளை கொண்டுள்ளது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

டொயோட்டா கரொல்லா அல்டிஸ்

தற்போதுள்ள புதிய மாடல்களுடனும் தனது அதிக கிரவுண்ட் கிளியரன்ஸால் கடுமையான போட்டி கொடுத்து வரும் டொயோட்டா கரொல்லா அல்டிஸின் கிரவுண்ட் கிளியரன்ஸின் அளவு டாடா ஜெஸ்ட்டை போல 175 மிமீ ஆகும். இவ்வளவு அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸை 2,700 மிமீ அளவுள்ள வீல்பேஸ் உடன் கொண்டுள்ளதால் காரின் அடிப்பாகம் சேதமடைவது பெரும் அளவில் தவிர்க்கப்படுகிறது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்

இதன் முந்தைய மாடலான ஃபோர்டு ஃபிகோ ஹாட்ச்பேக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஆஸ்பயர் மாடல் கடந்த வருடத்தில் 174 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸுடன் அறிமுகமானது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் போன்ற என்ஜின் தேர்வுகளில் விற்பனையாகும் இந்த காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தோற்றங்கள் அனைத்தும் முற்றிலும் ஃபிகோ ஹாட்ச்பேக்கை விட சிறப்பான முறையில் அப்டேட் செய்யப்பட்டிருந்தது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

டாடா டிகோர்

ஜெஸ்ட் மாடலுக்கு பிறகு டாடா நிறுவனத்தில் இருந்து அதிக கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்ட காராக டாடா டிகோர் விளங்குகிறது. 170 மிமீ அளவில் கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ள இந்த கார் சப்-4 மீட்டர் செடான் வகை கார்களில் அதிக அளவு மோசமான சாலைகளால் சேதமடையாத காராகவும் உள்ளது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 84 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் என்ஜின் 69 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

மாருதி சியாஸ்

வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலான டிசைன்களையும் உயர்ரக கார்களுக்கு இணையான தொழிற்நுட்பங்களையும் கொண்டுள்ள மாருதி சியாஸ் கார் 170 மிமீ-ல் கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. இந்த கிரவுண்ட் கிளியரன்ஸால் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்களுடன் கடுமையான போட்டியினை கொடுத்து வருகிறது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா நிறுவனத்தில் இருந்து மிக சிறப்பான முறையில் விற்பனையாகும் செடான் மாடலாக உள்ள ஹோண்டா அமேஸ் 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டது. இதன் வீல்பேஸ் அளவு 2,470 மிமீ ஆகும். இதனால் இந்த காரை குண்டும் குழியுமாக உள்ள சாலைகளிலும் கூட தைரியமாக ஓட்டி செல்லலாம். பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் விற்பனையாகி வரும் இந்த ஹோண்டா அமேஸ் காரின் டீசல் என்ஜின் தான் முதன்முறையாக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வெளியானது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

இந்த செடான் கார்கள் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ள காரணத்தால் வாடிக்கையாளர்களிடையே அதிகளவில் பிரபலமடைந்துள்ளன. இவை மட்டும் இல்லாமல் இன்னும் சில செடான்கள் இந்திய மார்கெட்டில் விற்கப்பட்டும் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டும் வருகின்றன.

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களின் பட்டியலை பார்த்தீர்கள். இப்போது, ஏர்பேக் கார் வைத்திருப்பவர்கள் மனதில் வைக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

ஏர்பேக் கட்டாயம்

இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் என்பது அடிப்படை பாதுகாப்பு அம்சமாக கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. மேலும், பல பட்ஜெட் கார்களில் கூட விருப்பத்தின் பேரில் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் மற்றும் சைடு ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த கார்களில் சில சிறிய விஷயங்களை செய்தால் கூட ஏர்பேக் விரிவடையாது. மேலும், அதுவே சில ஆபத்தையும் விளைவித்துவிடும். அவை என்னென்ன? பார்க்கலாம் வாங்க.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

சீட் பெல்ட்

சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ஏர்பேக் விரிவடையாது. இது பலமுறை நாம் தெரிவித்திருக்கிறோம். குறுகிய தூர பயணம் அல்லது நீண்ட தூரம் பயணம் என்றில்லை. எப்போது விபத்து நேரும் என்பது யாரும் அனுமானிக்க முடியாத விஷயம். எனவே, காரில் ஏறியவுடன் சீட் பெல்ட்டை அணிந்துவிட்டு, காரை இயக்குவதை பழக்கமாக்கிக் கொள்வது அவசியமானது. சில கார்களில் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஏர்பேக் விரிவடையாத வகையில் தொழில்நுட்பம் கொடுக்கப்படுகிறது என்பதையும் மனதில் வையுங்கள்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

சீட் கவர்

காரில் சீட் கவர் போடுவதால் ஏர்பேக் விரிவடையாது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, ஏர்பேக் உள்ள கார்களில் சீட் கவர் போடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வெளிச் சந்தையில் சீட் கவர் வாங்கி போடக்கூடாது. அதேநேரத்தில், டீலர்களில் சீட் கவரை போடக்கூடிய வாய்ப்புண்டு. முன்புற ஏர்பேக்குகள் மட்டுமின்றி, சைடு ஏர்பேக்குகளும் சீட் கவர் போடுவதால் விரிவடையாது என்பதை மனதில் வைக்க வேண்டியது அவசியம்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

அமரும் முறை

காரின் ஸ்டீயரிங் வீலுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து செல்வதை தவிர்க்கவும். அதாவது, சீட் பெல்ட் கண் இமைக்கும் நேரத்தில் விரிவடையும்போது முகத்தில் அறைந்து காயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, இருக்கையுடன் இயைந்து அமர்ந்து செல்வதும், ஸ்டீயரிங் வீலில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து ஓட்டுவதும் அவசியம். கார் வாங்கும்போதே டீலரில் விற்பனை அதிகாரியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுக் கொள்வதும் அவசியம்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

இதையும் செய்யாதீங்க

ஓட்டுனருக்கு பக்கத்தில் அமர்ந்து வரும் சிலர் டேஷ்போர்டு மீது கால் வைத்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். இதுவும் ஆபத்தில் முடிந்துவிடும். விபத்தின்போது ஏர்பேக் விரிவடைந்தால் மிக மோசமான காயங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

MOST READ: தமிழ் நடிகையிடம் கை வரிசையை காட்டிய பிரபல கொள்ளை கும்பல்... மீண்டும் களமிறங்கியதால் மக்கள் அச்சம்...

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

பொம்மைகள்

ஏர்பேக் உள்ள கார்களில் டேஷ்போர்டின் மீது பொம்மைகள் மற்றும் இதர பொருட்களை வைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சக பயணிக்கான இருக்கை பக்கத்தில் உள்ள ஏர்பேக் விரிவடையும்போது மிக மோசமான விபத்துக்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

MOST READ: சாதி கருத்துக்களை வாகனங்களில் எழுத இனி பயப்படணும்... போலீஸ் காட்டிய அதிரடி என்னவென்று தெரியுமா?

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

பம்பர் கார்டு

காரின் முன்புறத்தில் புல் பார் எனப்படும் எக்ஸ்ட்ரா பம்பரை பொருத்துவதும் ஏர்பேக் விரிவடையாமல் போவதற்கு வழிவகுக்கும். காரின் முன்புறத்தில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் சென்சார்களை வைத்துத்தான் மோதலின்போது ஏர்பேக் விரிவடையும். இதுபோன்ற புல் பார் பொருத்தினால் சென்சார்களுக்கு மோதல் தாக்கம் போதிய அளவு கிடைக்காமல் ஏர்பேக் விரிவடையாமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

பொது விஷயம்

இப்போது பெரும்பாலான கார்களில் ஏர்பேக்குடன்தான் வருகிறது. எனவே, ஏர்பேக் இருக்கும்போது வெளிச்சந்தையில் ஆக்சஸெரீகளை வாங்கி பொருத்துவதை தவிருங்கள். சீட் கவர் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகளை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் வாங்கி பொருத்துவதன் மூலமாக இந்த பிரச்னையை தவிர்க்கலாம். பொதுவாக, எந்த கூடுதல் ஆக்சஸெரீகளையும் பொருத்தாமல் இருப்பதும், சரியான முறையில் அமர்ந்து கார் ஓட்டுவதும் பயன்தரும்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

இதுபோன்று, விபத்து நேரங்களில் ஏர் பேக்குகள் விரியாமல் இருக்கும் சூழ்நிலையில், இங்கு காரின் ஏர் பேக்குகள் விபத்து நடக்காமலேயே விரிந்தன. இதனால், அந்த காரின் உரிமையாளருக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா...? இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக கார்கள் அதிகளவில் விபத்துக்களில் சிக்குகின்றன. அப்போது உள்ளே இருப்பவர்கள் படுகாயம் அடைந்து உயிரிழக்க நேரிடுகிறது. எனவே கார்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

இதன் ஒரு பகுதியாக கார்களில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக வழங்க வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதில், மிகவும் முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களில் ஒன்று ஏர்பேக் (Airbag). ஏர்பேக்குகள் தமிழில் காற்றுப்பைகள் என குறிப்பிடப்படுகின்றன.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகளின் படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய கார்களிலும் குறைந்தபட்சம் ஒரு ஏர்பேக்காவது இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது ஏர் பேக்குகள் இல்லாமல் எந்த ஒரு புதிய காரையும், உற்பத்தி நிறுவனங்கள் விற்பனைக்கு கொண்டு வரக்கூடாது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

அதே சமயம் கார்களின் விலையை பொறுத்து, அதில் இருக்கும் ஏர்பேக்குகளின் எண்ணிக்கை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஒரு சில கார்களில் 2 ஏர் பேக்குகள் இருக்கலாம். இன்னும் சில கார்களில் 6 ஏர்பேக்குகள் கூட வழங்கப்பட்டிருக்கும். கார்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை ஏர் பேக்குகள் உறுதி செய்கின்றன.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

கார்களில் ஏராளமான சென்சார்கள் வழங்கப்பட்டிருக்கும். திடீரென ஏற்படும் அதிர்வு உள்ளிட்டவற்றை இந்த சென்சார்கள் உடனடியாக கண்டறிந்து, ஏர் பேக்குகள் விரிவடைவதை தூண்டும். அதாவது விபத்து போன்ற மோதல்களை உதாரணமாக கூறலாம். விபத்து சமயங்களில் ஏர் பேக்குகள் கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்து, காருக்கு உள்ளே இருக்கும் பயணிகளை காப்பாற்றும்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

ஏர் பேக்குகள் விரிவடைவதால், விபத்துக்களில் சிக்கும் கார்களுக்கு உள்ளே இருக்கும் பயணிகளுக்கு காயம் ஏற்படாது. முன்பெல்லாம் இந்திய வாடிக்கையாளர்கள் பாதுகாப்பிற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். விலை மட்டுமே அவர்கள் மனதில் முக்கிய அம்சமாக இருக்கும். ஆனால் தற்போது புதிய கார்களை வாங்குபவர்கள் பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

எனவே கார் உற்பத்தி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, கார்களில் அதிக ஏர் பேக்குகளை வழங்க தொடங்கியுள்ளன. இது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் சாலை விபத்து நேர்ந்தால் மட்டும்தான் ஏர் பேக் விரிவடையுமா? என்றால், நிச்சயமாக கிடையாது. மும்பையை சேர்ந்த டெல்சன் சோய் என்பவரது காரின் ஏர் பேக் விபத்து நடைபெறாத சமயத்திலும் திடீரென விரிவடைந்துள்ளது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

பாதிப்பிற்கு உள்ளான டெல்சன் சோய் சிகப்பு நிற ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ஒன்றை வைத்துள்ளார். இந்த காரின் முன் பகுதியில் 2 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டிருந்தன. இந்திய மார்க்கெட்டை பொறுத்த வரை அனைத்து வேரியண்ட்களிலும் ட்யூயல் ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்ட கார்களில் ஃபோக்ஸ்வேகன் போலோவும் ஒன்று.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

சரி, விஷயத்திற்கு வருவோம். ஏர் பேக்குகள் ஒரு முறை விரிவடைந்து விட்டால், அவற்றை மீண்டும் பொருத்த வேண்டும். இது கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம்தான். ஆனால் விபத்தில் சிக்கிய பின்பு ஏர் பேக்கை மாற்றுவது என்றால் கூட பரவாயில்லை. உயிரை காப்பாற்றிய புண்ணியத்திற்காக அந்த செலவை தாராளமாக செய்து விடலாம்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

ஆனால் சாலை விபத்தில் சிக்காமலேயே ஏர் பேக் விரிவடைந்து, அவற்றை மீண்டும் மாற்ற செலவு செய்வது என்றால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? அதே கோபம்தான் டெல்சன் சோய்க்கும் வந்துள்ளது. ஆனால் தவறு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது என நினைத்து விட வேண்டாம். தவறு எல்லாம் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதுதான்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

இந்திய சாலைகளின் 'கண்டிஷன்' எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். அதை தனியாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளன. சாலைகளில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் வேறு இருக்கும். அதுவும் மழைக்காலம் என்றால் சாலைகளின் நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

மழை நீர் நிரம்பி விடுவதால், சாலையில் உள்ள பள்ளங்களை வாகன ஓட்டிகளால் கண்டறியவே முடியாது. இதன் விளைவு? வேறு என்ன, விபத்துதான். பள்ளங்கள் இருப்பதை கண்டறிய முடியாத வாகன ஓட்டிகள் அதில் விழுந்து படுகாயம் அடைவது வாடிக்கையாக உள்ளது. சில சமயங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

விபத்துக்கள் மட்டுமல்லாது, மிக கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படவும் மோசமான சாலைகள் காரணமாகின்றன. இதுபோன்ற மோசமான ஒரு சாலைதான் டெல்சன் சாயின் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஏர் பேக் திடீரென விரிவடைய காரணம். மும்பையின் வடாலா பகுதியில் உள்ள சாலையில் தனது ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் டெல்சன் சோய் சமீபத்தில் சென்று கொண்டிருந்தார்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

எனவே டெல்சன் சோயின் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் பின் சக்கரங்கள் அந்த பெரிய பள்ளத்தில் ஏறி இறங்கியுள்ளன. அப்போது ஏற்பட்ட அதிர்வின் தாக்கம் காரணமாக அவரது காரின் முன் பக்க ஏர் பேக்குகள் இரண்டும் திடீரென விரிவடைந்து விட்டன. ஏர் பேக்குகள் விரிவடைந்ததுடன் மட்டுமல்லாது, காரின் பின் பக்க பம்பரும் சேதமடைந்து விட்டது.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

தற்போது காரை சரி செய்ய தோராயமாக 2.50 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டெல்சன் சோய் நடந்த சம்பவங்களை எல்லாம் டிவிட்டரில் வெளியிட்டார். அத்துடன் சேதமடைந்த தனது காரின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மோசமான சாலைகள் ஒரு வாகனத்திற்கு எவ்வளவு அதிகமாக செலவு வைக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

பள்ளத்தில் ஏறி இறங்கிய தாக்கத்தின் காரணமான ஏர் பேக் சென்சார்கள் தூண்டப்பட்டு, 2 காற்று பைகளும் விரிவடைந்துள்ளன. இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கார் வைத்திருப்பவர்கள் கவலையடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் நமக்கும் நிகழ்ந்தால், யார் செலவு செய்வது? என்பதே இதற்கு காரணம்.

மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...

குண்டும், குழியுமான சாலைகள் எப்போதுமே மிகவும் அபாயகரமானவைதான். இதுபோன்ற சாலைகளில் பயணிக்கும்போது வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கூடுமான வரை மிக குறைவான வேகத்தில் பயணம் செய்யலாம். அத்துடன் இத்தகையை சாலைகளை சீரமைப்பதில் அதிகாரிகளும் அலட்சியம் காட்டக்கூடாது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Most Read Articles
மேலும்... #auto news #ஆட்டோ
English summary
5 sedans with SUV-like ground clearance: Maruti Ciaz to Toyota Corolla Altis
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X