5 நட்சத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் பாதுகாப்பான காருக்கு கிடைத்த வெகுமதி: உற்சாகத்தில் டாடா!

இந்தியாவின் முதல் பாதுகாப்பான காருக்கு வெகுமதி கிடைக்கும் விதமாக அதன் விற்பனைக் கணிசமாக அதிகரித்து இருப்பதாக டாட நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

5 நட்சத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் பாதுகாப்பான காருக்கு கிடைத்த வெகுமதி: உற்சாகத்தில் டாடா நிறுவனம்...!

நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், பட்ஜெட் ரக கார் தயாரிப்பில் முன்னணி வகித்து வருகின்றது. இந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்ட டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல் காரை குளோபல் என்சிஏபி அமைப்பு கடந்த 2018ம் ஆண்டு கிராஷ் (Crash) டெஸ்ட் செய்தது. இந்த பரிசோதனையில், நெக்ஸான் கார் ஐந்துக்கு 5 ஸ்டார் பெற்று இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பெருமையைப் பெற்றது.

5 நட்சத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் பாதுகாப்பான காருக்கு கிடைத்த வெகுமதி: உற்சாகத்தில் டாடா நிறுவனம்...!

இந்த காரை 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் கிராஷ் டெஸ்ட் செய்தபோது, 4 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றது. இதைத்தொடர்ந்து, நெக்ஸான் காரில் சில மாற்றங்களை டாடா நிறுவனம் செய்தது. அதன்படி, நெக்ஸானின் அனைத்து வேரியண்ட்களிலும், முன்பக்க டிரைவர் மட்டும் பாஸஞ்சர் சீட்பெல்ட் ரிமைண்டர் பொருத்துவதைக் கட்டாயமாக்கியது.

டாடாவின் இந்த முயற்சியினாலே நெக்ஸான் இந்த புதிய தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த கிராஷ் டெஸ்டில் 17 புள்ளிகளுக்கு 16.06 என்ற புள்ளிகளை எடுத்து நெக்ஸான் கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதற்கு முன்பாக நிகழ்த்தப்பட்ட சோதனையில் 13.56 புள்ளிகளை மட்டுமே இது பெற்றிருந்தது.

5 நட்சத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் பாதுகாப்பான காருக்கு கிடைத்த வெகுமதி: உற்சாகத்தில் டாடா நிறுவனம்...!

கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட சோதனையில் டாடா நெக்ஸான் காரின் கூடு அமைப்பு வலிமையானதாக இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அத்துடன், பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களிலும் நல்ல மதிப்பீட்டை இந்த நெக்ஸான் பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் அதிகபட்சமான 5 ஸ்டார் ரேட்டிங்கை இந்த கார் பெற்றிருக்கிறது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து டாடா நெக்ஸான் எஸ்யூவிகள் கார்களும் 5 ஸ்டார் ரேட்டிங் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

டாடாவின் இந்த வெற்றிக்கு பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவ்வாறு, குளோபல் என்சிஏபி அமைப்பின் பொதுச் செயலாளர் டேவிட் வார்டு, "பெரியவர்களின் பாதுகாப்பில் இந்த கார் சிறந்த மதிப்பைப் பெற்றுள்ளது. இது இந்திய கார்களின் பாதுகாப்பில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதற்கு என்னுடையை வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

டாடாவின் இந்த சாதனையைத் தொடர்ந்து, நெக்ஸான் எஸ்யூவி மாடலின் விற்பனைக் கணிசமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 53 ஆயிரத்து 797 நெக்ஸான் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது முந்தைய விற்பனையைக் காட்டிலும் 20 சதவீத அதிக வளர்ச்சியாகும். இதில், அதிகபட்சமாக பிப்ரவரி மாதத்தில் 5 ஆயிரத்து 623 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

5 நட்சத்திரம் பெற்ற இந்தியாவின் முதல் பாதுகாப்பான காருக்கு கிடைத்த வெகுமதி: உற்சாகத்தில் டாடா நிறுவனம்...!

விற்பனைக் குறித்த முழுவிவர பட்டியலைக் கீழே காணலாம்:

Month Units Sold
March 2018 4,405
April 2018 4,717
May 2018 4,308
June 2018 4,148
July 2018 3,840
August 2018 4,499
September 2018 4,297
October 2018 4,608
November 2018 4,224
December 2018 4,393
January 2019 5,095
February 2019 5,263
Total 53,797

இவ்வாறு, இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் என்ற பெருமையைக் கொண்ட டாடாவின் நெக்ஸான் எஸ்யூவி மாடலுக்கு மக்கள் நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளனர்.

டாடா நெக்ஸானின் அனைத்து வேரியண்ட்களிலும் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரிக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நெக்ஸானின் எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் ஆகிய இரண்டு வேரியண்டுகளில் மட்டுமே ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்டுகள் கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Five Star Rated TATA Nexon Sales Get Increased 20 Percent. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X