புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் அறிமுக விபரம்!

புதிய விதிமுறைகளுக்கு ஒப்பாக மேம்படுத்தப்பட்டு வரும் புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் அறிமுக விபரம்!

இந்திய ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு சிறந்த மாற்று தேர்வாக ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி இருந்து வருகிறது. இந்த நிலையில், வரும் அக்டோபர் முதல் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுடன் கார்களை விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட இருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் அறிமுக விபரம்!

இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் கார்களில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக எஞ்சின்களை பொருத்துவதும் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இந்த இரண்டு விதிகளுக்கும் ஏதுவாக, கார்களையும், எஞ்சின்களையும் பெரும்பாலான நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் அறிமுக விபரம்!

அந்த வகையில், முற்றிலும் புதிய மாடலாக ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மாடலானது க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு தக்கவாறு மிகச் சிறந்த கட்டுமான தரத்துடன் கூடிய பாடியுடன் வர இருக்கிறது. அதேபோன்று, டிசைனிலும் அனேக மாறுதல்களை பெற்றிருக்கும்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் அறிமுக விபரம்!

முகப்பு க்ரில், பம்பர், பின்புற டெயில் லைட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றை முற்றிலும் புதிதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த மாடலில் நவீன தொழில்நுட்ப வசதிகளும் அளிக்கப்பட இருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் அறிமுக விபரம்!

வரும் டிசம்பர் மாதத்தில் புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் உற்பத்தி துவங்கப்பட இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று ஆட்டோகார் இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் அறிமுக விபரம்!

தற்போது ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் 140 எச்பி பவரை அளிக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 85 எச்பி பவரை அளிக்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. ஆனால், புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மட்டும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு தக்கவாறு மேம்படுத்தி, தக்க வைக்கப்பட இருக்கிறது. 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் கைவிடப்படும்.

புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியின் அறிமுக விபரம்!

ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்றவாறு, புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியில்ல லோ ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் மல்டி லிங்க் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்படும். புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு போட்டியாக புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியும் களமிறங்க இருக்கிறது. இது ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் ஆவலை கிளறியுள்ளது.

Source: ACI

Most Read Articles
English summary
Pune based Force Motors has been retailing the current generation of the Force Gurkha for a few years now. The model has been upgraded a few times already and the last update saw the vehicle get ABS, seat belt reminder alarms, over-speed warning alarms, and rear parking sensors. The Force Gurkha sold, and sailed through with these changes but newer upgrades are needed in order for it to comply with new safety rules.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X