மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து அசத்திய ஃபோர்டு!

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, சிறப்புத் திட்டங்களை அறிவித்து அசத்தி உள்ளது ஃபோர்டு கார் நிறுவனம். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து அசத்திய ஃபோர்டு!

மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ப கார்களில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறது. இதுபோன்று மாற்றங்களை செய்தால், கார் நிறுவனங்கள் வழங்கும் வாரண்டி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து அசத்திய ஃபோர்டு!

மாற்றம் செய்யப்பட்ட கார்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்தாலும், வாரண்டி விதிகளில் சிக்கல் நிலவுகிறது. இதனை மனதில் வைத்து, மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் திட்டத்தை ஃபோர்டு அறிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து அசத்திய ஃபோர்டு!

அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாற்றங்களை செய்வதற்கு வெளியில் உள்ள நிறுவனங்கள் உதவியுடன் மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்கள் தங்களது கார்களில் மாற்றங்களை செய்யலாம். அதற்கு நிறுவனத்தின் வாரண்டி வழங்கப்படும் என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து அசத்திய ஃபோர்டு!

மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு வரியிலும், வாகனத்திற்கான காப்பீட்டு தொகையிலும் குறிப்பிட்ட தள்ளுபடியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு அரசு சிறப்புச் சலுகை திட்டங்களுக்கான ஆவணங்களை சமர்பிப்பதற்கு தேவையான உதவிகளை பணியாளர்கள் மூலமாக செய்து கொடுக்கப்படும்.

மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து அசத்திய ஃபோர்டு!

இதுமட்டுமல்லாது, மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வட்டி விகிதத்தில் கார் கடன் பெற்றுத் தருவதற்கும் ஏற்பாடு செய்வதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டங்கள் மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களை மனம் குளிர செய்துள்ளது.

மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து அசத்திய ஃபோர்டு!

கடும் சந்தைப் போட்டியை மனதில் வைத்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஃபோர்டு அறிவித்து வருகிறது. அண்மையில் சர்வீஸ் செய்வதற்கான செலவை கணக்கிடும் வகையில் கால்குலேட்டர் ஒன்றை அறிமுகம் செய்தது. இதில், உதிரிபாகங்கள் விலை மற்றும் சர்வீஸ் கட்டணங்களை ஒளிவுமறைவின்றி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பை கொடுத்தது.

மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து அசத்திய ஃபோர்டு!

அத்துடன், ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களுக்கு 5 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டியையும் அறிவித்தது. இந்த நிலையில், தற்போது மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கவும், சிறப்புச் சேமிப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has announced special schemes for specially abled customers including, special interest rates on car loans and warranty schemes in India.
Story first published: Wednesday, December 4, 2019, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X