அமெரிக்கன் கம்பெனியான ஃபோர்டு காரைச் சிறப்பித்த இந்திய தயாரிப்பு!

ஃபோர்டு - மஹிந்திரா இரு நிறுவனங்களின் இணைப்பைத் தொடர்ந்து வெளிவரும் முதல் எலக்ட்ரிக் காரில் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் காருக்கான எஞ்ஜின் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கன் கம்பெனியான ஃபோர்டு காரைச் சிறப்பித்த இந்திய தயாரிப்பு!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டும், இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் கடந்த 2017ம் ஆண்டு கூட்டணி அமைத்தன. புதிய கார்களை உருவாக்கவும், புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த கூட்டணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கன் கம்பெனியான ஃபோர்டு காரைச் சிறப்பித்த இந்திய தயாரிப்பு!

அந்த வகையில், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து மஹிந்திராவின் வெற்றிகமான எஸ்யூவி மாடலான எக்ஸ்யூவி500 அடிப்படையில், புதிய கார் ஒன்றை உருவாக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

அமெரிக்கன் கம்பெனியான ஃபோர்டு காரைச் சிறப்பித்த இந்திய தயாரிப்பு!

இந்நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பிற்கு பின், முதல் முறையாக செடான் ரகத்திலான ஃபோர்டு ஆஸ்பயர் எலக்ட்ரிக் வாகனம் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா என்னும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கன் கம்பெனியான ஃபோர்டு காரைச் சிறப்பித்த இந்திய தயாரிப்பு!

ஆஸ்பயர் எளக்ட்ரிக் காரில் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களுக்கான எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு, ஆஸ்பயர் எலக்ட்ரிக் காரில் 82 பிஎச்பி திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கன் கம்பெனியான ஃபோர்டு காரைச் சிறப்பித்த இந்திய தயாரிப்பு!

இதற்கு அதீதி சக்தியை வழங்கும் வகையில் 25kWh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை செல்லலாம். அதேசமயம், இது அதிகபட்சமாக 110 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய திறனைப் பெற்றுள்ளது.

அமெரிக்கன் கம்பெனியான ஃபோர்டு காரைச் சிறப்பித்த இந்திய தயாரிப்பு!

மஹிந்திரா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை ரீபேட்ஜ் செய்து விற்பனைச் செய்யவும் திட்டம் தீட்டி வருகின்றது. அதேசமயம், தற்போது தயாராகி வரும் ஆஸ்பயர் எலக்ட்ரிக் கார்கள், ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கன் கம்பெனியான ஃபோர்டு காரைச் சிறப்பித்த இந்திய தயாரிப்பு!

இரு நிறுவனங்களின் இணைப்பில் தயாராகி வரும் இந்த புதிய மாடல் ஆஸ்பயர் எலக்ட்ரிக் கார் பெரிய பூட் ரூம் மற்றும் நீளமான வீல் பேஸினைப் பெற்ற மாடலாக உருவாகியுள்ளது. அதேபோன்று, மற்ற எலக்ட்ரிக் கார்களுக்கு டஃபான போட்டி கொடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களையும் கொண்டு உருவாகியுள்ளது.

அமெரிக்கன் கம்பெனியான ஃபோர்டு காரைச் சிறப்பித்த இந்திய தயாரிப்பு!

மின் வாகனங்களுக்கான விதிகள் இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால், இந்த எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் சற்று தள்ளிப்போடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆஸ்பயர் எலக்ட்ரிக் கார் வருகின்ற 2020ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford Aspire Electric Sedan To Be Powered By Mahindra Electric Drivetrain. Read In tamil.
Story first published: Friday, May 10, 2019, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X