சென்னையில் தயாரிக்கப்பட்டு 2020 ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம்...

விரைவில் ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து புதிய எண்டெவர் மாடல் பிஎஸ்6 என்ஜினுடன் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் இந்த கார் தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்டு 2020 ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம்...

எந்தவொரு மறைப்பும் இன்றி சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த காரில் ஏற்படுத்தப்பட்டுள்ள காஸ்மெட்டிக் மாற்றங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இந்த 2020 எண்டெவர் மாடலில் பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

சென்னையில் தயாரிக்கப்பட்டு 2020 ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம்...

தற்போதைய எண்டெவர் மாடலில் உள்ள என்ஜின் தேர்வு தான் இந்த புதிய மாடலிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஃபோர்டு எண்டெவர் மாடலானது 2.2 லிட்டர் நான்கு- சிலிண்டர் டீசல் என்ஜினுடன் 160 பிஎச்பி பவரையும் 385 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் தயாரிக்கப்பட்டு 2020 ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம்...

மற்றொரு என்ஜின் தேர்வாக 3.2 லிட்டர் நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் 200 பிஎச்பி பவரையும் 470 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு என்ஜின்களும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படும்போது இவற்றின் செயல்படுத்திறனில் கண்டிப்பாக சில மாறுதல்கள் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

சென்னையில் தயாரிக்கப்பட்டு 2020 ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம்...

பிஎஸ்4 ஃபோர்டு எண்டெவர் மாடலானது ரூ.29.20 லட்சத்தில் இருந்து ரூ.34.70 லட்சம் வரை எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்படுவதால் இந்த மாடலின் விலை ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.5.5 லட்சம் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடையாது.

சென்னையில் தயாரிக்கப்பட்டு 2020 ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம்...

உட்புறத்தில் ட்யூல்-டோன் டேஸ்போர்டு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 8-இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சில கட்டுப்பாடுகள் ஏற்றப்பட்ட ஸ்டேரிங், பனோராமிக் சன்ரூஃப் போன்றவை தற்போதைய மாடலில் இருந்து எந்தவொரு மாற்றமுமின்றி கொடுக்கப்படும் என தெரிகிறது.

சென்னையில் தயாரிக்கப்பட்டு 2020 ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம்...

பாதுகாப்பு அம்சங்களாக காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, மலைப்பாதைகளில் ஏறும்போது தேவையான கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார்ஸ், பின்புற பார்க்கிங் கேமிரா, எலக்ட்ரானிக் ஸ்டாபிலிட்டி கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் எமர்ஜென்சி அசிஸ்டன்ஸ் போன்றவற்றை எண்டெவர் கார் கொண்டுள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்டு 2020 ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம்...

2020ல் அறிமுகமான பின்பு ஃபோர்டு எண்டெவர் டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, ஸ்கோடா கோடியாக், இசுஸு எம்யு-எக்ஸ் போன்ற மாடல்களுடன் போட்டியிடவுள்ளது. விரைவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள இந்த கார் ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஃபோர்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் வருங்காலத்தில் இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டணியுடன் தயாரிக்கப்பட்டு அறிமுகமாகவுள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்டு 2020 ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம்...

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதமே இந்த புதிய ஃபோர்டு எண்டெவர் கார் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பிஎஸ்6 காரின் என்ஜின் தரம் குறித்த தகவல்களை அறிய கடுமையாக முயற்சித்து வருகின்றோம். இது புதிய கார் குறித்து மேலும் தெரிந்துகொள்ள ட்ரைவ்ஸ்பார்க் தமிழுடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Spy Pics: 2020 Ford Endeavour Spotted Testing Ahead Of India Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X