ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கு இடையிலான நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிவு கூட்டப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

பிரிமீயம் எஸ்யூவி கார்கள் ரகத்தில் ஃபோர்டு எண்டெவர் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. தோற்றத்திலும், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆப்ஷன்களிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்தநிலையில், போட்டி அதிகரித்து வருவதை மனதில் கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், இந்த புதிய எண்டெவர் எஸ்யூவி எதிர்பார்ப்புக்கு முன்னதாகவே இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கு இடையிலான நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய முப்பட்டை க்ரில் அமைப்பு, பொலிவு கூட்டப்பட்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் மேம்படுத்தப்பட்ட சிங்க் சாஃப்ட்வேருடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளையும் பயன்படுத்த முடியும்.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

தற்போது ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த நிலையில், புதிய மாடலில் 2.0 லிட்டர் ஈக்கோபுளூ டீசல் எஞ்சின் இடம்பெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய டீசல் எஞ்சின் இரண்டு விதமான திறன் கொண்டதாக கிடைக்கும்.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

ஒரு மாடல் 180 பிஎச்பி பவரையு், 420 என்எம் டார்க் திறனையும் மற்றொரு மாடல் 212 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். இந்த டர்போ சார்ஜ்டு டீசல் எஞ்சினுடன் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!

வழக்கம்போல் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சரியான மாற்று தேர்வாக புதிய ஃபோர்டு எண்டெவர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியும் நேரடி போட்டியாளராக இருந்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford India has officially started the production of the new Endeavour facelift. The facelifted Ford Endeavour does not showcase a major revamp over the current model, but adds some essential bits to maintain desirability in its segment.
Story first published: Saturday, January 19, 2019, 12:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X