ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வருகை விபரம்!

புதுப்பொலிவுடன் கூடிய ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இந்திய வருகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வருகை விபரம்!

இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலாக பெயர் பெற்றுள்ளது ஃபோர்டு எண்டெவர். பிரம்மாண்ட தோற்றம், சிறந்த டீசல் எஞ்சின் தேர்வுகள், ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களுடன் தனிச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வருகை விபரம்!

இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், டெயில் லைட்டுகள், புதிய அலாய் வீல்கள், படூல் விளக்குகள், புதிய டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வருகை விபரம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் பிரிமீயம் லெதர் இருக்கைகள், டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஒன் டச் அப்-டவுன் வசதியுடன் ஜன்னல் கண்ணாடிகள், ஆன்ட்டி பிஞ்ச் வசதி, பின்புற கதவுக்கான ஹேண்ட்ஸ்ஃப்ரீ வசதிகள் இடம்பெற்றிருக்கும். புதிய ஆம்பியன்ட் லைட் சிஸ்டமும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வருகை விபரம்!

மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் 8.0 அங்குல தொடுதிரையுடன் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த சாதனம் ஏற்கனவே வழங்கப்படும் ஃபோர்டு சிங்க்-3 செயலியுடன் வர இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். 10 ஸ்பீக்கர்கள், சப் ஊஃபருடன் கூடிய புதிய ஆடியோ சிஸ்டம் வழங்கப்படும்.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வருகை விபரம்!

தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் தக்க வைக்கப்படும். 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்ஸடம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டிகன்ட்ரோல், ரோல் ஓவர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், வேகக் கட்டுப்பாட்டு வசதியுடன் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வருகை விபரம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் இப்போது பயன்படுத்தப்படும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வரும் என்று தெரிகிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது. ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கு ஏற்ப டிரைவிங் மோடுகளும் வழக்கம்போல் இடம்பெற்றிருக்கும்.

ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வருகை விபரம்!

மேம்படுத்தப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி வரும் பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவை ஒட்டி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. விலையும் கூடுதலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 ஆகிய எஸ்யூவிகளுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
American car maker, Ford is planning to launch Endeavour facelift model in India by early next year.
Story first published: Thursday, September 26, 2019, 13:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X