புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதுப்பொலிவுடன் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்ட புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை இங்கே காணலாம்.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியானது ஏற்கனவே டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைத்து வந்த நிலையில், தற்போது டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் என்ற 2 வேரியண்ட்டுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். டிரென்ட் என்ற பேஸ் வேரியண்ட் விற்பனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இதுவரை விற்பனையில் இருந்த ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால், புதிய மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் இடம்பெற்றுள்ளது.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அதே 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 158 பிஎச்பி பவரையும், 385 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். 2 வீல் டிரைவ் ஆப்ஷனில் கிடைக்கும்.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியின் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் டைட்டடானியம் ப்ளஸ் வேரியண்ட்டில் கிடைக்கும். இந்த 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக 4 சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி கடத்தப்படுகிறது.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது லிட்டருக்கு 14.2 கிமீ மைலேஜையும், 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலானது 12.62 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய முகப்பு க்ரில் அமைப்பு, கரும் புகை பூச்சு பின்னணியுடன் கூடிய எச்ஐடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, புதிய பம்பர், 18 அங்குல அளவுடைய புதிய அலாய் வீல்கள், டெயில் லைட்டிலும் எல்இடி விளக்குகள் கொண்ட பட்டை ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் டெயில் கேட்டை ஹேண்ட்ஸ் ஃப்ரீ முறையில் எளிதாக திறக்கும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். மேலும், சிங்க்-3 செயலிலும் இடம்பெற்றிருக்கிறது. பழைய மாடலில் இருந்த அதே 10 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் தக்க வைக்கப்படடு இருக்கிறது.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மூன்டஸ்ட் சில்வர், சன்செட் ரெட், அப்சொலூயூட் பிளாக் மற்றும் டைமண்ட் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். மேலும், புதிதாக டிஃபியூஸ்டு சில்வர் என்ற தேர்வும் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், அசென்ட் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் (டைட்டானியம் வேரியண்ட்) ரூ.28.2 லட்சத்திலும், 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்ட மாடல் (டைட்டானியம் வேரியண்ட்) ரூ.30.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எஸ்யூவியின் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்ட டைட்டானியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.33 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 போன்ற பிரிமீயம் ரக எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு
English summary
Ford Endeavour Facelift model has been launched in India.
Story first published: Friday, February 22, 2019, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X