ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

மேம்படுத்தப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த புதிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

ஃபோர்டு நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மஸில் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல் மஸ்டாங். பல தலைமுறை மாற்றங்களை கண்டுவிட்ட இந்த காரின் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட மாடல் கடந்த ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. இந்த நிலையில், இந்த மாடல் இந்தியா வருவதில் சந்தேகம் நிலவி வந்தது.

ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

இந்த சூழலில், வரும் ஏப்ரல் மாதம் ஃபோர்டு மஸ்டாங் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, பானட் ஏர் ஸ்கூப் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

இந்த காரில் புதிய பம்பர் மற்றும் டிஃபியூசர் அமைப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது ஃபோர்டு மஸ்டாங் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்.

ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

இந்த காரில் தொடர்ந்து 5.0 லிட்டர் வி8 எஞ்சின்தான் தக்க வைக்கப்பட இருக்கிறது. எனினும், எஞ்சினின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் 415 எச்பி என்ற அளவிலிருந்து 450 எச்பி என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது மஸ்டாங் காரை வாங்க விரும்புவோருக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் விஷயமாக அமையும்.

ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

இத்துடன் மற்றொரு முக்கிய விஷயமாக, புதிய மஸ்டாங் காரில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுக்கு பதிலாக, புதிய 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது.

MOST READ: இலவசம்... டோல்கேட் விஷயத்தில் தரமான நடவடிக்கையை எடுத்தது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?

ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

புதிய ஃபோர்டு மஸ்டாங் காரில் புதிய 12.0 அங்குல எல்சிடி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும். மேலும், சாஃப்ட் டச் என்ற மென்மையான தொடு உணர்வை தரும் பிளாஸ்டிக் பாகங்களுடன் இன்டீரியர் மிகவும் பிரிமீயம் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இறுக்கிறது.

MOST READ: தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

எல்இடி லைட்டுகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இந்த காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களாக கூறலாம். மொத்தத்தில், பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும்.

MOST READ: 15 மனைவிகளுக்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாங்கிய மன்னர்... விலை மதிப்பை கேட்டு மயக்கம் போட்றாதீங்க

ஃபோர்டு மஸ்டாங் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வருகை விபரம்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய மஸ்டாங் அறிமுகம் மற்றும் இதர விபரங்கள் குறித்து அதிக தகவல்களை எதிர்பார்க்கலாம். இந்திய ஸ்போர்ட்ஸ் கார் மார்க்கெட்டில் தொடர்ந்து சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
According to reports, Ford is planning to launch Mustang Facelift model in India by first quarter of next financial year.
Story first published: Monday, November 25, 2019, 10:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X