டிரைவர்லெஸ், எலெக்ட்ரிக் கார்களை இணைந்து தயாரிக்க ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் இடையே கூட்டணி!

டிரைவர்லெஸ் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமமும் இணைந்து செயல்படுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் கூட்டணி!

கடுமையான மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை மனதில் வைத்து எலெக்ட்ரிக் கார் உருவாக்கத்திற்கு வாகன நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் கூட்டணி!

குறிப்பாக, டிரைவர்லெஸ் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கு பெரும் முதலீடு தேவைப்படுவதால் உருவாக்கப் பணிகள் போதிய வேகத்தில் நடக்கவில்லை. இதனை மனதில் வைத்து பல்வேறு வாகன நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட துவங்கி இருக்கின்றன.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் கூட்டணி!

அந்த வகையில், உலகின் மாபெரும் வாகன உற்பத்தி குழுமமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் ஃபோர்டு நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கான MEB பிளாட்ஃபார்மை பயன்படுத்தி புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் கூட்டணி!

வரும் 2023ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை ஃபோர்டு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள தனது ஆலையிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்வதற்கும் ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் கூட்டணி!

மேலும், 6 ஆண்டு காலத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யவும் ஃபோர்டு இலக்கு வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த எலெக்ட்ரிக் கார் மாடலையும் களமிறக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. ஆனால், எந்த வகையிலான காராக இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் கூட்டணி!

புதிய எலெக்ட்ரிக் காருக்கு தேவையான கட்டமைப்பு கொள்கை மற்றும் உதிரிபாகங்களை ஃபோர்டு நிறுவனத்திற்கு ஃபோக்ஸ்வேகன் வழங்க இருக்கிறது. இதன்மூலமாக, மிக விரைவாக எலெக்ட்ரிக் கார் உருவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கும், இரு நிறுவனங்களின் முதலீடு வெகுவாக குறையும் என்பதால், சரியான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக ஃபோர்டு மற்றும் ஃபோக்ஸ்வேகன் கூட்டணி தெரிவித்துள்ளது.

MOST READ: ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் கூட்டணி!

இதுதவிர, டிரைவர்லெஸ் கார் உருவாக்கத்திற்காக ஜெர்மனியை சேர்ந்த அர்கோ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதற்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அர்கோ நிறுவனத்தில் ஃபோர்டு முதலீடு செய்து வருகிறது.

MOST READ: இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள எஸ்யூவி கார்கள்!!

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் கூட்டணி!

இந்த நிலையில், இரு நிறுவனங்களும் சமமான பங்குகளை பெறும் விதத்தில் இந்த முதலீடு அமைய உள்ளது. இரு நிறுவனங்களின் டிரைவர்லெஸ் வாகனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அர்கோ நிறுவனம் வழங்க உள்ளது. லெவல் -4 என்ற உயர் நிலை டிரைவர்லெஸ் தொழில்நுட்பத்தை அர்கோ நிறுவனம் உருவாக்கித் தர இருக்கிறது..

MOST READ: இந்தியாவின் முதல் இன்டர்நெட் காருக்கு வரலாறு காணாத வரவேற்பு

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் கூட்டணி!

முதல்கட்டமாக அர்கோ நிறுவனத்தின் டிரைவர்லெஸ் வாகன தொழில்நுட்பம் வர்த்தக வாகனங்களிலும், நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் டோர் டெலிவிரி செய்யும் வாகனங்களிலும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர், டிரைவர்லெஸ் கார்களிலும் அர்கோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக ஃபோர்டு - ஃபோக்ஸ்வேகன் கூட்டணி!

மேலும், ஃபோர்டு நிறுவனம் தயாரிக்கும் புதிய பிக்கப் டிரக் வாகனத்தை இரு பிராண்டுகளிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டம் உள்ளது. வரும் 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய பிக்கப் டிரக் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு
English summary
American car maker, Ford is planning to launch VW’s MEB platform based Electric Car by 2023.
Story first published: Monday, July 15, 2019, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X