ஃபோர்டு எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டீசர் வெளியீடு

ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா கார் நிறுவனம் மாடல் ஒய் என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனமும் புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த தகவலை வெளியிட்டது. இது ஆட்டோமொபைல் உலகில் பரபரப்பையும், ஆவலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் மாடலை ஃபோர்டு கார் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட இருப்பது ஏற்கனவே ஊகித்த விஷயம்தான்.

ஃபோர்டு எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் டீசர் வெளியீடு

அது தற்போது க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவியாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. முன்புறம் மற்றும் ஸ்டைலில் மஸ்டாங் காரின் சாயலை இந்த புதிய எலெக்ட்ரிக் க்ராஸ்ஓவர் கார் ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பின்புறத்திலும், கூரை அமைப்பிலும் க்ராஸ்ஓவர் ரக மாடலாக வடிவமைக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

அடுத்த மாதம் 17ந் தேதி இந்த புதிய எலெக்ட்ரிக் க்ராஸ்ஓவர் ரக கார் மாடலை ஃபோர்டு கார் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த முதல் டீசரை வெளியிட்டு இருக்கிறது. அடுத்து சில டீசர்களையும் ஃபோர்டு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா மாடல் ஒய் காருக்கு போட்டியாக இருக்கும் இந்த புதிய கார் ரேஞ்ச் மற்றும் செயல்திறனில் மிரட்டலாக இருக்கும் என்று தெரிகிறது. அதாவது, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரையிலும், 200 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் திறனையும் பெற்றிருக்கும்.

மேலும், தொழில்நுட்பத்திலும், வசதிகளிலும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் புதிய பாதையை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் காக்பிட் எனப்படும் ஓட்டுனர் அமரும் பகுதியானது மிக சிறப்பான அம்சங்களை பெற்றிருக்கும் என தெரிகிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் முதலில் அமெரிக்காவிலும் பின்னர் உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் இதுகுறித்த விரிவானத் தகவலகளை ஃபோர்டு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford has released a new teaser video of its first pure Electric car ahead of its unveil next month.
Story first published: Tuesday, October 29, 2019, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X