காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

பொதுவாக புதிய முயற்சிகளை மீண்டும் மீண்டும் துணிச்சலாக செய்து பார்க்க டாடா தயங்கவே தயங்காது. காலத்தால் அழியாத காவிய கார்கள் இந்தியாவிற்கு கிடைத்ததற்கு அதுவே காரணம்.

காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

இந்தியாவை சேர்ந்த ஒரு சில கார் நிறுவனங்கள் மட்டுமே சர்வதேச அளவில் பெயர் பெற்று விளங்குகின்றன. இதில், டாடா முக்கியமானது. இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டாடா, தற்போது வரை பல்வேறு கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

ஏறத்தாழ இந்திய கார் மார்க்கெட்டின் அனைத்து செக்மெண்ட்களிலும் டாடா மோட்டார்ஸ் தனது கார்களை விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. இதில், சில மாடல்கள் 'ஹிட்' ஆகியுள்ளன. சில மாடல்கள் அந்த அளவிற்கு விற்பனையில் பெரிதாக சோபிக்க தவறியுள்ளன.

காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

இந்தவகையில் சேல்ஸ் சார்ட்டில் பெரிய எண்களை கொண்டு வந்து சேர்க்க தவறிய கார்கள் காலப்போக்கில் மறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மக்கள் மனதில் இருந்து மறைந்து விட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்கள் குறித்து இனி பார்க்கலாம்.

காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

சியாரா (Sierra)

இந்தியாவில் தற்போது பல்வேறு எஸ்யூவி ரக கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவின் எஸ்யூவி செக்மெண்ட்டை குறி வைத்து பல்வேறு புதிய கார் நிறுவனங்களும் களமிறங்கி வருகின்றன. ஆனால் அவை அனைத்திற்கும் சியாராதான் முன்னோடி.

இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முறையான எஸ்யூவி ரக கார் இதுவே. டாடா சியாரா 3 டோர்களை கொண்ட மாடல். பின் நாட்களில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா சியாராவின் வேரியண்ட்களில், 4×4 ஆப்ஷன் கூட வழங்கப்பட்டது.

காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

இன்டீரியர் என எடுத்து கொண்டால், பல்வேறு வசதிகளை கொண்டதாக சியாரா வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் அதன் காலத்தில் சிறந்த மாடல்களில் ஒன்றாக சியாரா விளங்கியது. 2 லிட்டர் டீசல் மற்றும் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் சியாரா விற்பனை செய்யப்பட்டது.

டாடா சியாரா இன்று உங்களை நினைவை விட்டு அகன்றிருக்கலாம். ஆனால் கார்கள் மீது பேரார்வம் கொண்ட சிலர் தற்போதும் கூட தங்கள் டாடா சியாரா எஸ்யூவி கார்களை புத்தம் புதிது போலவே பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

எஸ்டேட் (Estate)

டாடா நிறுவனம் தனது ஆரம்ப கால கட்டத்திலேயே பல்வேறு வகையான கார்களை களமிறக்கியது. இதில், ஸ்டேஷன் வேகன் (Station Wagon) வகை கார்களும் அடக்கம். ஸ்டேஷன் வேகன் என்பது ஒரு வகையான கார் பாடி ஸ்டைல். வழக்கமான கார்களை காட்டிலும் இதன் பாடி நீளமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

ஒரு சில வெளிநாடுகளில் ஸ்டேஷன் வேகன் கார்கள் மிகவும் பிரபலம். இந்த வகையில் எஸ்டேட் என்ற ஸ்டேஷன் வேகன் காரை டாடா நிறுவனம் களமிறக்கியது. டாடா எஸ்டேட் கார் தனது பெரும்பாலான மெக்கானிக்கல் அம்சங்களை சியாராவுடன் பகிர்ந்து கொண்டது.

பொதுவாக இந்திய மார்க்கெட்டில் ஸ்டேஷன் வேகன் ரக கார்கள் விற்பனையில் பெரிதாக சாதிக்காது. டாடா எஸ்டேட் காரிலும் அதே கதைதான் நடந்தது. இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க டாடா எஸ்டேட் தவறி விட்டது. இந்த காரெல்லாம் மக்கள் மனதை விட்டு மறைந்து விட்டாலும் கூட, காலத்தால் அழியாத காவியமாக என்றென்றும் நிலைத்து நிற்கும்.

காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

இன்டிகோ மெரினா (Indigo Marina)

எஸ்டேட் தோல்வியை சந்தித்த நிலையில், சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்டேஷன் வேகன் என்ற முயற்சியை கையில் டாடா நிறுவனம் கையில் எடுத்தது. இதன்படி இன்டிகோ மெரினா காரை டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

பொதுவாக புதிய முயற்சிகளை செய்து பார்க்க டாடா ஒரு போதும் தயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விசாலமான இட வசதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன செய்ய? இந்தியாவில்தான் ஸ்டேஷன் வேகன் கார்களுக்கு மார்க்கெட் கிடையாதே. எஸ்டேட் மூலம் சந்தித்த தோல்விக்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து இன்டிகோ மெரினா மூலமும் தோல்வியை சந்தித்தது டாடா.

காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

இன்டிகோ மான்சா (Indigo Manza)

வழக்கமான இன்டிகோ செடான் காருக்கு, ஸ்டைலிஷ் மற்றும் பிரீமியம் ஆல்டர்நேட்டிவ் ஆக வந்ததுதான் இன்டிகோ மான்சா. ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கு மாற்றாக கடந்த 2010ம் ஆண்டு களமிறக்கப்பட்டது இன்டிகோ மான்சா.

காலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...

இன்டிகோ மான்சா காரில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுமே வழங்கப்பட்டன. இன்டிகோ மான்சா காரை கேப் மார்க்கெட் நன்றாக ஏற்றுக்கொண்டது. ஆனால் சொந்த பயன்பாட்டிற்கு கார் வாங்குபவர்கள் மத்தியில் இன்டிகோ மான்சா பிரபலம் அடையவில்லை. எனவே இதனை விற்பனையில் இருந்து டாடா விலக்கி விட்டது.

Most Read Articles
English summary
Forgotten Tata Cars: Sierra, Estate, Indigo Marina, Indigo Manza. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X