பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறைவான எரிபொருளை மட்டுமே வினியோகித்து, வாகன ஓட்டிகளை ஏமாற்ற செய்து வந்த தந்திர வேலைகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடையே, கடந்த 2015ம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி, அணு சக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தாமல், அணுகுண்டுகளை ஈரான் தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

இதன் காரணமாக ஈரான் உடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. இதன்பின் ஈரானின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிக தீவிரமாக எடுத்து வருகிறார்.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் வியாபாரம்தான் ஈரானின் முதுகெலும்பு. ஈரானின் முக்கிய வருவாய் கேந்திரமாக கச்சா எண்ணெய் திகழ்கிறது. எனவே சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

இதன் ஒரு பகுதியாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, 2018ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதிக்குள் நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும், இந்த உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

இதில், இந்தியாவும் அடங்கும். என்றாலும் 2018ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதியன்று, அமெரிக்காவின் உத்தரவு அமலுக்கு வரவில்லை. இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளித்த அமெரிக்கா, ஈரான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொள்ளலாம் என தெரிவித்தது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

ஆனால் அதுவும் கூடுதலாக சுமார் 6 மாதத்திற்குதான். அதாவது 2019ம் ஆண்டு மே 1ம் (நேற்று) தேதி வரை. அதன்பின் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அமெரிக்கா விலக்கு அளித்திருந்தது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

அமெரிக்கா விலக்கு அளித்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. இனி எந்த ஒரு நாட்டுக்கும் விலக்கு அளிக்க முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. எனவே இனி ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகள் அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்கொள்ள வேண்டும்.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் ஈரான் கச்சா எண்ணெய்க்கு குட் பை சொல்லி வருகின்றன. அதற்கு பதிலாக ஈராக், சவுதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட வேறு நாடுகளிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அவை திட்டமிட்டு வருகின்றன.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

ஈரானை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்து வருகிறது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

ஆனால் இதன் தாக்கம் இந்தியாவில் இன்னும் எதிரொலிக்கவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே லோக்சபா தேர்தல் முடிவடைந்த பிறகு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய (மே 2) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75.85 ரூபாய். அதே சமயம் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் 70.40 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

''இதுவே மிக அதிகமான விலைதான். இன்னும் விலை உயர்ந்தால் என்ன செய்வது?'' என வாகன ஓட்டிகள் அனைவரும் புலம்பி கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உறைய வைக்கும் மற்றொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

உங்கள் கார் அல்லது பைக் உள்ளிட்ட வாகனங்களின் மைலேஜில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான சரிவு ஏற்பட்டு வருகிறதா? அப்படியானால் தவறு உங்கள் வாகனத்தின் மீது மட்டும்தான் இருக்க முடியும் என உறுதியாக கூறி விட முடியாது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

பெட்ரோல் பங்க்குகளில் நீங்கள் செலுத்திய பணத்தின் அளவிற்கு நிகரான எரிபொருள் நிரப்பப்படாமலும் இருந்திருக்கலாம். ஆம், உண்மைதான். பெட்ரோல் பங்க்குகளில் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவை காட்டிலும், குறைவான எரிபொருளை மட்டும் வினியோகம் செய்யும் மோசடி கண்டறியப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

ஆந்திர பிரதேச சட்ட அளவியல் துறை சார்பில் (Andhra Pradesh Legal Metrology Department), மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் சமீபத்தில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதில், 7 பெட்ரோல் பங்க்குகளில் முறைகேடு கண்டறியப்பட்டது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

அதாவது எரிபொருள் மீட்டரில் மாற்றங்களை செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைவான எரிபொருள் மட்டுமே அங்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட 7 பெட்ரோல் பங்க்குகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

அங்கு ஒவ்வொரு 5 லிட்டர் பெட்ரோலிலும், 40 மில்லி லிட்டர் குறைவாக வினியோகிக்கப்பட்டுள்ளது. இதனை சாதாரண வாடிக்கையாளர்களால் கண்டறிய முடியாது. ஏனெனில் எரிபொருள் மீட்டரில் அளவீட்டு முறைகளை மாற்றி விடுவதால், அவை சரியான அளவை காட்டுவது போன்றே இருக்கும்.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

ஆனால் வாடிக்கையாளர்கள் கேட்ட அளவை விட குறைவாகவே எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். தற்போது அதிகாரிகளின் பிடியில் சிக்கி கொண்டுள்ள 7 பெட்ரோல் பங்க்குகளில், 5 லிட்டர் பெட்ரோலுக்கு, 40 மில்லி லிட்டர் முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

இதற்கு முன்பாக இதேபோன்று மற்றொரு பெட்ரோல் பங்க் சிக்கியது. அங்கு ஒவ்வொரு 5 லிட்டருக்கும், 150 மில்லி லிட்டர் முறைகேடு செய்யப்பட்டிருந்தது. அதாவது நீங்கள் 5 லிட்டருக்கு பணம் செலுத்தினால், உங்களுக்கு 5 லிட்டர் எரிபொருளும் நிரப்பப்படாது. 150 மில்லி மீட்டர் குறைவாகவே நிரப்பப்படும்.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

இதற்காக 'சிப்' ஒன்றை பொருத்தி மீட்டரில் முறைகேடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிப் பொருத்தப்பட்டதன் காரணமாக, மீட்டர் சரியான ரீடிங்கை காட்டாது. அதாவது குறைவாக எரிபொருள் நிரப்பப்பட்டாலும் கூட, அதிகமாக நிரப்பப்பட்டது போன்ற ரீடிங்கையே மீட்டர் காட்டும்.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த முறைகேடு வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. இதுபோன்றதொரு மோசடி தற்போது மீண்டும் அரங்கேறியிருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆந்திர பிரதேச மாநிலத்தில், கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று இந்த சோதனை நடத்தப்பட்டது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 52 பெட்ரோல் பங்க்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 7 பெட்ரோல் பங்க்குகளில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. மறுநாள் மீண்டும் சோதனை நடைபெற்றது. இம்முறை 49 பெட்ரோல் பங்க்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

ஆனால் இங்கு எவ்வித முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை. என்றாலும் இன்னும் சில பெட்ரோல் பங்க்குகளில் முறைகேடு நடைபெற்று கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

வாகன ஓட்டிகளுக்கு சரியான அளவில் எரிபொருள் வினியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்டறியவே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வாகன ஓட்டிகள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப அவர்களுக்கு எரிபொருள் கிடைக்க வேண்டும் என்பதே இந்த சோதனையின் நோக்கம். இதுகுறித்து ET Auto தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் மெகா மோசடி அம்பலம்... வாகன ஓட்டிகளை ஏமாற்ற கையாளும் தந்திரம் இதுதான்

இந்த சோதனையில் 7 பெட்ரோல் பங்க்குகளில் முறைகேடு கண்டறியப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே நாடு முழுக்க அந்தந்த மாநிலங்களில், இந்த சோதனையை மேற்கொள்ள அதிகாரிகள் முன் வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Fuel Meter Fraud Detected In 7 Petrol Pumps In Andhra Pradesh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X