அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

திண்டுக்கல் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணித்த 2 இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி என்ற ஊரை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு சுதாகரன் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சிறுமலை சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

சகோதரர்களான சுதாகரனும், சுபாஷ் சந்திரபோசும் ஒன்றாகவே வேலைக்கு சென்று விட்டு ஒன்றாகவே வீடு திரும்புவார்கள் என கூறப்படுகிறது. இதன்படி கடந்த 2ம் தேதி மாலை வேலை முடிந்த பின் அவர்கள் இருவரும் ஒன்றாக வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

சுதாகரனும், சுபாஷ் சந்திரபோசும் இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தனர். ரெட்டியபட்டி என்ற ஊருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் முன்னால் மற்றொரு வாகனம் சென்று கொண்டிருந்தது.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

வழி இருந்ததன் காரணமாக முன்னால் சென்ற வாகனத்தை அவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது அந்த வாகனத்தில் இருந்தவர்கள், சுதாகரனும், சுபாஷ் சந்திரபோசும் பயணித்த இரு சக்கர வாகனத்தை திடீரென வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

அவர்கள் நொச்சிஓடைப்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும், வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் சாதி பெயரை குறிப்பிட்டு, சுதாகரனையும், சுபாஷ் சந்திரபோஸையும் அவர்கள் சரமாரியாக திட்டியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

எங்களை நீங்கள் முந்தி செல்வதா? என்கிற ரீதியில், சாதி பெயரை சொல்லி, சகோதரர்களை அந்த கும்பல் திட்டியுள்ளது. அப்போது அந்த கும்பலில் இருந்தவர்கள் போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சுதாகரனும், சுபாஷ் சந்திரபோசும் எதற்கு பிரச்னை என அங்கிருந்து சென்று விட்டனர்.

MOST READ: வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி... இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு...

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

ஆனால் அந்த கும்பல் விடுவதாக இல்லை. சுதாகரன், சுபாஷ் சந்திரபோஸின் வீட்டிற்கே வந்து அவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் அவர்களின் வண்டியையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

இந்த தாக்குதலில் காயமடைந்த சுதாகரன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக சாணார்பட்டி காவல் நிலையத்தில் தங்கராஜ் புகார் அளித்தார்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

இதன்பேரில் நொச்சிஓடைப்பட்டியை சேர்ந்த சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் நாம் நாகரீகமான சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

இந்தியாவை பொறுத்தவரை சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது (Road Rage) என்பது வாடிக்கையான ஒன்றுதான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். ஆனால் சாதியை முன்னிறுத்தி நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, அடிக்கடி லேன் (Lane) மாறுவது, இன்டிகேட்டர்களை ஆன் செய்யாமல் வளைவுகளில் திடீரென திரும்புவது போன்ற காரணங்களால்தான் வாகன ஓட்டிகளுக்கு இடையே சாலையில் மோதல் ஏற்படுகிறது.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

ஒரே வரியில் சொல்வதென்றால், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால்தான் Road Rage ஏற்படுகிறது என கூறலாம். சாலையில் ஏதாவது ஒரு வாகன ஓட்டி போக்குவரத்து விதியை மீறியதன் காரணமாக உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உங்களுக்கு ஆத்திரம் வரும் அல்லவா?

MOST READ: உலக அளவில் இந்தியாவை பெருமிதப்படுத்தும் டாடா... லாரி மோதியும் அசராமல் நின்ற காரின் வீடியோ வைரல்...

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

அதே ஆத்திரம்தான் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறினாலும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும். இதன் விளைவு வாய் தகராறில் தொடங்கும். ஆனால் இறுதியில் கைகலப்பில் முடிந்து விடும். சாலையில் இவ்வாறு வாகன ஓட்டிகள் சண்டையிட்டு கொள்வது இந்தியாவில் வாடிக்கையாகி வருகிறது.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

இதன் காரணமாக சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் ஆக்ரோஷமான டிரைவிங்கிற்கும் Road Rage வழிவகுத்து விடுகிறது. வாகனத்தை ஆக்ரோஷமாக இயக்குவதன் காரணமாக விபத்து நேரலாம்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

பொதுவாக வாகனங்களை நல்ல மனநிலையில் இருக்கும்போது, மென்மையாகதான் இயக்க வேண்டும். ஆனால் மற்ற வாகன ஓட்டிகளுடன் ஏற்பட்ட தகராறு ஒருவரை ஆக்ரோஷமாக வாகனத்தை இயக்க தூண்டும். இதன் விளைவு சாலை விபத்தாகவும் இருக்கலாம்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

எனவே சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுடன் மோதலில் ஈடுபடுவதை தவிர்ப்பதே சிறந்தது. வாகனத்தை இயக்க தொடங்கும் முன்பாக உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைத்து விட்டதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

ஏனெனில் ஓய்வு இல்லாமல் வாகனம் இயக்கினால் நீங்கள் எளிதில் கோபம் கொள்ள கூடியவராக மாறி விடுவீர்கள். இந்த கோபத்தை நீங்கள் மற்ற வாகன ஓட்டிகளின் மீது காட்ட கூடும். அத்துடன் எங்கு செல்வதாக இருந்தாலும் சற்று முன் கூட்டியே கிளம்பி விடுங்கள்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

தாமதம் காரணமாக வீண் பதற்றம் ஏற்பட்டு, அது மற்ற வாகன ஓட்டிகளுடன் மோதலில் முடிவடையலாம். எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடித்தாலே முக்கால்வாசி பிரச்னை முடிந்து விடும்.

MOST READ: ஒட்டுமொத்த இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஹூண்டாய் காரின் உற்பத்தி தமிழகத்தில் தொடங்கியது...

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

ஒருவேளை நீங்கள் தவறு செய்து விட்டால், வீண் கௌரவம் பார்த்து கொண்டு, மற்ற வாகன ஓட்டிகளிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். நீங்களாக முன்வந்து 'சாரி' சொல்வதன் மூலம் அவர்களின் ஆத்திரம் குறையலாம். வீண் பிடிவாதம் பிடித்தால் சிக்கல் உங்களுக்கும்தான்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

ஒருவேளை நீங்கள் காரில் பயணிக்கும்போது தகராறு ஏற்பட்டால், முடிந்தவரை காரை விட்டு இறங்காதீர்கள். குறிப்பாக எந்த வாகன ஓட்டியாவது குடிபோதையில் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

ஒருவேளை தகராறு ஏற்பட்டால், உங்கள் செய்கைகள் மூலம் மற்ற வாகன ஓட்டிகளை ஆத்திரப்படுத்தாதீர்கள். அதேபோல் அசிங்கமான வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டாம். அத்துடன் சாலையின் நடுவே வாகனத்தை அப்படியே நிறுத்தி விடாதீர்கள்.

அந்த சாதிக்காரங்க வாகனத்தை கூட முந்தி செல்ல கூடாதாம்... 2 பேரை தாக்கியதற்கு அதிர்ச்சி காரணம் இதுதான்

இது மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும். பொதுவாக மேற்கண்ட காரணங்களால்தான் வாகன ஓட்டிகளுக்கு இடையே சாலையில் தகராறு நிகழும். ஆனால் திண்டுக்கல் அருகே சாதியை முன் வைத்து, வாகனத்தை முந்தி சென்றவர்களை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Most Read Articles

English summary
Gang Attacks Two-wheeler Riders Near Dindigul: Here is Why. Read in Tamil
Story first published: Tuesday, May 7, 2019, 18:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more