சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து வந்த ஒரு பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

உலகின் பல்வேறு நாடுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு விடை கொடுக்கும் முடிவில் உள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் ப்யூயல் செல் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் இந்த வகை வாகனங்களில் முக்கியமான பிரச்னை ஒன்று உள்ளது. அதாவது எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் ப்யூயல் செல் வாகனங்கள் மிகவும் அமைதியானவை. பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் இவை இயங்கும்போது எவ்விதமான சப்தமும் எழாது.

சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

இது நல்ல விஷயம்தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கிடையவே கிடையாது. இது உண்மையில் மிக ஆபத்தான விஷயம். சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இதனால் பாதிப்பு ஏற்படும். அதாவது வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்கள் வந்தால் உங்களால் அவற்றின் இருப்பை கண்டு கொள்ள முடியும். அவை எழுப்பும் சப்தமே இதற்கு காரணம்.

சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

ஆனால் எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் ப்யூயல் செல் வாகனங்கள் அவ்வாறு எந்த சப்தத்தையும் எழுப்பாது. எனவே அவற்றின் இருப்பை பாதசாரிகள், சைக்கிள்களில் பயணம் செய்பவர்கள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகளால் அறிய முடியாது. இதன் காரணமாக சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

எனினும் தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான செயற்கை டிரைவிங் ஒலியை (Artificial Driving Noise), ஹெல்லா நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஹெல்லா என்பது ஜெர்மனியை சேர்ந்த ஆட்டோமோட்டிவ் லைட்டிங் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகும்.

சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான செயற்கை டிரைவிங் ஒலியான Acoustic Vehicle Alerting System-ஐ (AVAS) உருவாக்கியுள்ளது. எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் ப்யூயல் செல் வாகனங்களின் சாலை பாதுகாப்பை ஏவிஏஎஸ் அதிகரிக்கும் என ஹெல்லா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

வழக்கமான ஐசி இன்ஜின் (IC - Internal Combustion) வாகனங்கள் போன்ற ஒலியை இந்த ஏவிஎஸ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தரும் எனவும் ஹெல்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே சாலைகளில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் இந்த வாகனங்களின் ஒலியை நன்றாக கேட்க முடியும்.

MOST READ: மரண பயத்தை காட்டும் இந்த போட்டோக்களை பார்த்த பிறகும் சாலை விதிகளை மீறுவீங்க? கண்டிப்பா மாட்டீங்க

சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

பெல்ஜியத்தின் பிரஸெல்ஸ் நகரில், வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் அக்டோபர் 23ம் தேதி வரை பஸ் வேர்ல்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில்தான் ஹெல்லா நிறுவனம் முதல் முறையாக ஏவிஏஎஸ்-ஐ அறிமுகம் செய்யவுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இதுபோன்ற பாதுகாப்பு வசதிகள் மிகவும் அவசியமான ஒன்றுதான்.

MOST READ: டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?

ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்களின் அமைதி காரணமாக சாலை விபத்து நிகழ்ந்தால், விபத்தில் சிக்கிய நபருக்கு மட்டுமின்றி, வாகனத்தின் உரிமையாளருக்கும் சேர்த்தே பாதிப்பு ஏற்படும். ஆனால் ஏவிஏஎஸ் மூலமாக ஹெல்லா நிறுவனம் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

மிகவும் அமைதியானவை என்பதை தவிர எலெக்ட்ரிக் வாகனங்களில் இன்னும் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. இதில் மிகவும் முக்கியமானது விலை. ஆம், எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இதன் காரணமாக இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக கொண்டு சென்று சேர்க்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிகமான நன்மைகள் இருக்கின்றன. எனவே பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க தேவையான பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சலுகை ஒன்றை மத்திய அரசு விரைவில் அறிவிக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிகப்படியான தொகையை செலவிட்டு வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகிறது. அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் இந்தியாவின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

எனவே இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் முடிவு கட்டும் விதமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது இதற்கு ஒரு உதாரணம். இதுபோல் வருங்காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இன்னும் பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணங்களில் இருந்து சிறப்பு சலுகைகளை வழங்குவதும் ஒன்று.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

என்எச்ஏஐ எனப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India - NHAI) தற்போது புதிய டோல் கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. பிசிஜி எனப்படும் பாஸ்டன் கன்சல்டன்சி குழுவுடன் (Boston Consultancy Group - BCG) இணைந்து, இந்த வரைவு டோல் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

இதில், டோல்கேட் கட்டணங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கலாம் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி டோல்கேட் கட்டணங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்கலாம் என ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

ஆனால் இதன் காரணமாக பெரும் அளவிலான வருவாய் இழப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இது வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணங்களில் இருந்து 50 சதவீத தள்ளுபடி வழங்கலாம் என்றொரு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

இதுபோன்ற சலுகைகள் கிடைத்தால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் எழும். எனவேதான் வரைவு டோல் கொள்கையில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பல்வேறு மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. தற்போது வரைவு டோல் கொள்கை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

அங்கு இதன் மீது ஆலோசனை நடத்தப்படும். அதன்பின் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். நிதின் கட்கரியின் ஒப்புதலுக்காக வரைவு டோல் கொள்கை விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்த விஷயத்தில் அவரே இறுதி முடிவு எடுப்பார்.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

இந்தியாவில் மின்சார வாகனங்களை பிரபலமாக்குவதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தே ஆக வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். எனவே மின்சார வாகனங்களுக்கு சாதகமான அறிவிப்பு வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

''புதிய டோல் கொள்கை அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த சலுகைகள் பொருந்தும்'' என்று இது தொடர்பாக விவரம் அறிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் செயல்பட்டும் வரும் டோல்கேட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அந்த வாகனங்களுக்கு மட்டும் சுங்க சாவடி கட்டணங்களில் இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த சூழலில் தற்போது வெளிவந்துள்ள இந்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக மக்கள் காத்து கொண்டுள்ளனர்.

டோல்கேட் விஷயத்தில் அதிரடி முடிவை எடுக்கிறது மத்திய அரசு... இதற்காகதான் நாடே காத்து கொண்டுள்ளது

டோல்கேட்களில் இவ்வாறான சலுகைகள் வழங்கப்பட்டால், மக்களின் கவனம் மின்சார வாகனங்களின் மீது திரும்பும் என்பது உறுதி.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..!

ஹெல்லா நிறுவனம் செயற்கை எஞ்ஜின் ஒலிக்கான கருவியை தயார்செய்து வரும் அதேவேலையில் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி புக்கிங்கில் வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கும் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் செயற்கையாக சைலென்சரின் சப்தத்தை வெளிப்படுத்தும் கருவி அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..!

திரைப்பட நடிகையான அசினின் கணவரும், மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் ஷர்மா, ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் எனும் மின்வாகன உற்பத்தி நிறுவனத்தை அண்மையில் தொடங்கினார். மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன், தொடர் விற்பனைச் சரிவைக் கண்டு வந்ததன் காரணமாக, இந்த புதிய தொழிலை அவர் தொடங்கினார்.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..!

இந்நிறுவனத்தின் முதல் மாடல் எலக்ட்ரிக் பைக் கடந்த சில மாதங்களுக்கு தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலக்ட்ரிக் பைக்கின் விற்பனைக்கு அராய் (ARAI) அமைப்பிடம் கிடைத்த ஒப்புதலை அடுத்து அந்நிறுவனம், இந்த நடவடிக்கையில், இறங்கியது.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், மலிவான விலையில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனைச் செய்து வந்தது, நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதுபோலவே, தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்குகளும் மலிவு விலையில் களமிறக்கப்பட்டுள்ளன.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..!

இந்நிலையில், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கில், புதிய சிறப்பம்சமாக, செயற்கையாக சைலென்சர் சத்தத்தை வெளிப்படுத்தும் திறன் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.

அதுகுறித்த வீடியோ ஒன்றை இன்டெல்லிகார்ப் நிறுவனம், அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

பொதுவாக இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், அதிலிருந்து வெளியேறும் சைலென்சர் சப்தத்திற்கு அடிமையாக இருக்கின்றனர். இதன்காரணமாகவே, சிலர் தங்களது வாகனங்களில் அதிக சத்தத்தை வெளிப்படுத்தும் சைலென்சர்களைப் பொருத்திக் கொள்கின்றனர். ஆனால், இது இந்திய மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும்.

இந்த நிலையில், தனது மின்சார பைக்கில் பெரும் குறையாக இருந்துவந்த சைலென்சர் இல்லாததை, செயற்கை ஒலிப்பான் மூலம் ரிவோல்ட் நிறுவனம் நிறைவேற்றியது.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..!

அந்த ஒலிப்பானை, நமது தேவைக்கேற்ப ஸ்மார்ட் போன் செயலி மூலம் கட்டுபடுத்திக் கொள்ள முடியும். மேலும், விருப்பத்திற்கேற்ப சைலென்சர் மாற்றியமைத்துக்கொள்ளவும் முடியும். இதுமட்டுமின்றி, ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..!

அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு, 4ஜி சிம் கார்டு பொருத்தப்பட்ட இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. அதேசமயம், இந்த எலக்ட்ரிக் பைக் பாதுகாப்பிற்கும் சிறந்தது என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும்வகையில், ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக், 10.2 டிகிரி சாய்வான கோணத்தில் வைத்து இயக்கப்பட்டது.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..!

அதில், எலக்ட்ரிக் பைக் அதன் நிலைத் தன்மையில் எந்தவொரு மாற்றமுமின்றி, பயணத்தைத் தொடர்ந்தது. ஆகையால், இந்த பைக்கில் வளைந்து நெளிந்து செல்ல ஏதுவாக, கிராவிட்டி அமைப்பு வழங்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..!

மேலும், நெய்ல் பெனரேஷன், ஷாக் அப்சார்பேஷன், வாட்டர் ப்ரூஃப் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பரீட்சைகளுக்கு இந்த எலக்ட்ரிக் உட்படுத்தப்பட்டுள்ளது. அவையனைத்திலும் நல்ல தேர்ச்சியையே அது பெற்றுள்ளது.

Most Read Articles

Tamil
English summary
German Company Develops Artificial Driving Noise For Electric, Hybrid And Fuel-cell Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more