82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் 82 ஆயிரம் வானங்களை முற்றிலுமாக அழிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டால் சுற்றுப்புறச் சூழலுக்கு பல்வேறு விதமான பின்விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. முக்கியமாக, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகையால் புவி வெப்பமயமாதல் மற்றும் காற்று மாசுறுதல் உள்ளிட்ட பல்வேறு தீங்குகள் உருவாகின்றன.

ஆகையால், இதனைத் தவிர்க்கும் விதமான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

அதேசமயம், பின்விளைவில்லா வாகனமான மின் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகளும் படு வேகமாக நடைபெற்று வருகின்றது. இருப்பினும், மின் வாகனத்திற்கான சார்ஜிங் நிலையங்கள் உள்ளிட்ட ஒரு சில விஷயங்கள் குறைவாக இருப்பதன் காரணத்தால், மக்கள் மத்தியில் மின் வாகனம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை.

82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் வாகனத்திற்கு எதிரான போரை தொடுத்த வண்ணமே இருக்கின்றன.

ஏனென்றால், இந்த வாகனங்கள் பல்வேறு விதமான பிரச்னைக்கு மூலதனாக இருக்கின்றன. இதனை தலைநகர் டெல்லியின் சுற்றுப்புறச் சூழலின் நிலையைக் கண்டாலே நமக்கு புரிந்துவிடும். ஆகையால், டெல்லி என்சிஆர் பகுதியில் மாசினை அதிகம் ஏற்படுத்தும் வாகனங்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

அந்தவகையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2015ம் ஆண்டு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்த பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பூர்த்தியடைந்த டீசல் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கக் கூடாது என அறிவித்திருந்தது. இந்த உத்தரவை தலைநகர் டெல்லியின் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு தெரிவித்திருந்தது.

82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

இந்நிலையில், அண்மையில் தகுதி நீக்கம் (பதிவெண் ரத்து) செய்யப்பட்ட 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய இருப்பதாக காசியாபாத் ஆர்டிஓ அலுவலகம் அறிவித்துள்ளது.

82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

இந்த பழைய வாகனங்களைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்க இருவிதமான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதாவது, பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெட்ரோல் மற்றும் பத்து வயதை பூர்த்தியடைந்த டீசல் வாகனங்களை டெல்லியின் என்சிஆர் பகுதிக்குள் இயக்க வேண்டுமானால் மறு பதிவு செய்திருக்க வேண்டும்.

82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

அதேபோன்று, அந்த பழைய வாகனங்களை என்சிஆர் அல்லாத மற்ற மாநிலத்திற்கு மாற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு தடையில்லா சான்றினை ஆர்டிஓ-வில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

இவற்றிற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளுமாறு என்சிஆர் ஆர்டிஓ அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில், ஒரு சிலர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானோர் பதிவு செய்ய தவறி விட்டனர்.

82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

அத்தகைய பதிவு செய்யப்படாத வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டதாக ஆர்டிஓ அலுவலகம் சமீபத்தில் அறிவித்தது. ஆகையால், அவை சாலையில் இயக்கப்படுமானால், அது மோட்டார் வாகன விதிப்படி குற்றமாகும். எனவே, அந்த வாகனங்கள்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, நகரில் இருந்து அகற்றி ஸ்கிராப் செய்ய முடிவு செய்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.

82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..?

இதுகுறித்து டெல்லி என்சிஆர் பகுதியின் ஆர்டிஓ அதிகாரி விஸ்வஜித் சிங் கூறியதாவது,

"பழைய வாகனங்களை பதிவு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஜுலை மாதம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 60 நாட்களுக்கு பதிவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், இதனை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர். பெரும்பாலானோர் மறு பதிவு செய்ய தவறிவிட்டனர். அத்தகைய வாகனங்களை கண்டறிந்து ஸ்கிராப் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ghaziabad RTO Plan To Scrap 82,000 Old Vehicles. Read In Tamil.
Story first published: Saturday, September 21, 2019, 14:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X