சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

டொயேட்டோ மற்றும் சுஸுகி நிறுவனங்களின் இணைப்பில் வெளிவர இருக்கும் க்ளான்ஸா காரில், டோயோட்டா நிறுவனம், முதல் முறையாக ஆப்பிள் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரு நிறுவனங்களின் இணைப்பில் வெளிவரும் முதல் மாடலாக க்ளான்ஸா இருக்கின்றது. இந்தகார் முன்னதாக சுஸுகி நிறுவனத்தின் பேட்ஜில் பலனோ என்ற பெயரில் விற்பனையாகி வந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த கார்தான் தற்போது, சில மாற்றங்களுடன் இந்தியச் சந்தையில், க்ளான்ஸா என்ற பெயரில் விற்பனைக்கு களமிறங்க இருக்கின்றது.

சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

இந்நிலையில், டொயோட்டா நிறுவனம், இந்த புதிய மாடல் க்ளான்ஸாவில் சிறப்பம்சம் ஒன்றை புதிதாக சேர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அந்தவகையில், இரு நிறுவனங்களின் இணைப்பில் வெளிவரும் இந்த க்ளான்ஸா காரில், ஸ்டாண்டர்டு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் கூடிய ப்ளே காஸ்ட் சிஸ்டத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

இதுவே, இந்த தொழில்நுட்ப வசதியுடன், டொயோட்டா நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் முதல் காராக இருக்கின்றது. உலகளாவியச் சந்தையைக் கவனத்தில் கொண்டு க்ளான்ஸா காரில் இந்த அம்சத்தை அந்த நிறுவனம் இணைத்துள்ளது.

சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

இதன் ப்ளேகாஸ்ட் சிஸ்டத்தில் ஆன்போர்டு நேவிகேஷன் வசதி இணைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால், இந்த அம்சம் ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோவில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன், ப்ளேகாஸ்ட் சிஸ்டத்தில் வாய்ஸ் கமெண்ட், யுஎஸ்பி, ப்ளூடூத் மற்றும் ஆக்ஸ் வசதி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

மேலும், டொயோட்டா நிறுவனம் வித்தியமாசமாக 12 மாதம் இலவச டொயோட்டா கன்னெக்ட் ஆப் சப்ஸ்கிரிப்சனை வழங்க இருக்கின்றது. இந்த சேவையை டோயோட்டா வருடத்திற்கு ரூ. 10 ஆயிரம் என்ற விலையில் ஒரு வருடத்திற்கு வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.

சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

இதேபோன்று, டொயோட்டா க்ளான்ஸா காருக்கு 3 வருடங்கள் அல்லது ஒரு லட்சம் கிமீ வாரண்டியினை அந்த நிறுவனம் வழங்க இருக்கின்றது. மேலும், 5 வருடங்கள் அல்லது ஏழு வருடங்கள் ஆப்ஷனிலும் வாரண்டி வழங்கப்பட உள்ளது.

MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

டொயோட்டாவின் இந்த புதிய க்ளான்ஸா, ஹை வேரியண்ட்களான ஜி மற்றும் வி வேரியண்ட்களில் தயாராகியுள்ளன. இதில், ஜி மாடலானது மாருதி பலோனோவின் ஜெட்டா ட்ரிம் பிளாட்பாரத்திலும், வி மாடலானது பலேனோவின் ஆல்பா ட்ரிமிலும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.

சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

இதேபோல, இந்த கார் இரண்டு எஞ்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்க இருக்கின்றது. அவ்வாறு கிடைக்க கூடிய எஞ்ஜின் ஆப்ஷன் ஒன்றில், சுஸுகி நிறுவனத்தின் கே12என் 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த எஞ்ஜினில் சிறிய ரகத்திலான ஹைபிரிட்டிற்கான தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும்.

சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

மற்றுமொரு வேரியண்ட், 1.2 லிட்டர் கே12எம் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும்.அது அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும்,113 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க இருக்கின்றது.

சிறப்பு தொழில்நுட்பத்தை க்ளான்ஸா காரில் அறிமுகம் செய்யும் டொயோட்டா... ஸ்பெஷல் தகவல்...!

புதிய டொயோட்டா க்ளான்ஸா ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த டொயோட்டா க்ளான்ஸா கார் வருகின்ற ஜூன் 6ம் தேதி அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால், இந்த கார்மீது இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Source: Autocarindia

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Glanza Gets Android Auto & Apple CarPlay. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X