தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

உலகிலேயே விபத்து அபாயம் அதிகம் நிறைந்த சாலைகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்தியாவில், பாதுகாப்பான காரை வாங்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்குதான் இந்த செய்தி.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

குளோபல் என்சிஏபி அமைப்பு கடந்த 5 ஆண்டுகளில் (2014-2019), இந்தியாவின் 25 கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்துள்ளது. சில கார்கள் ஒருமுறைக்கு மேல் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

குளோபல் என்சிஏபி பாதுகாப்பு ரேட்டிங் முற்றிலும் வேறுபட்ட பட்டியலை வழங்குகிறது. குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுடன் ஒப்பிடும்போது, அதிகம் விற்பனையாகும் கார்கள் குறைவான ஸ்கோரை பெற்றுள்ளன.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

குளோபல் என்சிஏபி அமைப்பால் நடத்தப்பட்ட க்ராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகள் இதனை தெளிவாக காட்டுகின்றன. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற ஒரு சில கார்கள் இதற்கு விதிவிலக்கு.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற ஒரே இந்திய கார் நெக்ஸான்தான். போட்டியாளர்களைவிட விற்பனையில் பின்தங்கியிருந்தாலும், பாதுகாப்பு விஷயத்தில் போட்டியாளர்களை வீழ்த்துகிறது.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

2018ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி முதல் உற்பத்தி செய்யப்படும் அனைத்து நெக்ஸான் கார்களும் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் தரநிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

நெக்ஸானுக்கு அடுத்தபடியாக மஹிந்திரா மராஸ்ஸோ 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. பட்டியலில் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற ஒரே ஒரு எம்பிவி கார் இதுதான்.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

நெக்ஸானை போல் விற்பனையில் சற்று பின்தங்கினாலும், பாதுகாப்பு என்ற விஷயத்தில் மராஸ்ஸோ தனது போட்டியாளர்களை வீழ்த்தி விடுகிறது. கடந்த செப்டம்பரில் எம்பிவி ரகத்தில் 6வது இடத்தில் உள்ளது.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

பிற ரகத்தில் டொயோட்டா எட்டியோஸ், டாடா ஜெஸ்ட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களும் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

மாருதி எர்டிகா, ஃபோர்டு அஸ்பயர், ஹோண்டா மொபிலியோ, ரெனால்ட் டஸ்டருக்கு 3 ஸ்டார் ரேட்டிங்கையும், மாருதி ஸ்விப்ட், வேகன் ஆர், ஹூண்டாய் சாண்ட்ரோவுக்கு 2 ஸ்டாரும் பெற்றன.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

இவை சிறப்பாக விற்பனையாக கூடிய கார்கள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது. பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததையும், மலிவு விலை நோக்கமும் தெளிவாக காட்டுகிறது.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

எனினும், வரும் காலத்தில் பாதுகாப்பு விஷயத்தில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் புது கார்களுக்கு பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு வரிசையாக கட்டாயமாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

இதில், ரெனால்ட் க்விட், ஃபோர்டு ஃபிகோ, மாருதி சுஸுகி ஈக்கோ, ஆல்டோ, செலிரியோ, மற்றும் ஹுண்டாய் ஐ10 ஆகிய கார்கள் அடங்குகின்றன. அதே சமயம் ரெனால்ட் லாட்ஜி, டட்சன் கோ மற்றும் டாடா நானோ ஆகிய கார்களும் குறைவான பாதுகாப்பு ரேட்டிங்கைதான் பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட கார்களின் லேட்டஸ்ட் ரேட்டிங்ஸ்தான் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

தகர டப்பாக்களை நம்பாதீங்க... இந்தியாவின் பாதுகாப்பான கார் இதுதான்... பெருமைப்பட வேண்டிய விஷயம்...

இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள டாடா நெக்ஸான், இந்தியாவிற்கே பெருமை தேடி தந்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல. குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற ஒரே இந்திய காரான டாடா நெக்ஸான், விபத்துக்களில் இருந்து பல முறை பயணிகளை காப்பாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் குறித்த தகவல்களை பார்த்தோம். நீங்கள் வாங்கும் கார்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் உங்கள் கார்களில் ஒரு சில பொருட்கள் இருந்தால் உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கான ஆக்ஸசரீஸ்கள் சிலவற்றில் பல்வேறு ஆபத்துக்கள் இருக்கின்றன.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

குறைந்த விலையில் கிடைப்பதாலும், காருக்கு அழகை கொடுப்பதாலும், ஒரு சில கார் ஓட்டுநர்கள் இந்த விதமான ஆக்ஸசரீஸ்களை வாங்கி சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பொருட்கள் பயனுள்ளதாக இருந்தாலும் கூட, ஒரு சில பொருட்கள் மட்டும் பேராபத்துக்களை விளைவிளைவிக்க கூடியவை.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

அவ்வாறு ஆபத்தை ஏற்படுத்த கூடிய ஆக்ஸசரீஸ்கள் என்னென்ன? என்பதை தொடர்ந்து பார்க்கலாம். இவைகளில் ஏதேனும் ஒன்று உங்கள் காரில் இருந்தாலும் கூட உடனடியாக அதனை அகற்றி விடுங்கள். இது போன்ற பொருட்களை உங்களிடம் யார் விற்க முயன்றாலும் எக்காரணத்தை கொண்டும் வாங்க வேண்டாம்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

தரமில்லாத பிளோர்மேட்

இந்தியாவில் கார்களுக்கு என பல்வேறு வகையான பிளோர் மேட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் சில தரமில்லாத ஆபத்தை விளைவிக்க கூடிய பிளோர் மேட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதிரியான பிளோர்மேட்கள் தரையில் சரியாக ஃபிட் ஆகாமல் இருக்கும்.

இவ்வாறான பிளோர் மேட்கள் ஆக்ஸலரேட்டர், பிரேக், கிளட்ச் ஆகியவற்றை நாம் மிதிக்கும் போது அது பிளோர் மேட்டிற்கு இடையில் சிக்கி பெரும் விபத்திற்கு காரணமாக இருக்கும். இவ்வாறாக நடந்த விபத்தில், விபத்து நடந்ததற்கு பின் எவ்வாறு இந்த விபத்து நடந்தது என்பதை விளக்கும் வீடியோவை நீங்கள் மேலே பாருங்கள்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

ஸ்டியரிங் கவர்

சில கார் ஓனர்கள் தங்கள் காரின் உட்புறத்தை அழகாக வைக்க ஸ்டியரிங்கில் கவர் ஒன்றை மாட்டி கொள்ளகின்றனர். பெரும்பாலான கவர்கள் நல்ல கிரிப்பாக இருந்தாலும் சில ஸ்டியரிங் கவர்கள் கிரிப் இல்லாமல் இருக்கும். இதனால் நீங்கள் காரில் செல்லும் போது ஸ்டியரிங் கிரிப் இல்லாமல் கார் உங்கள் கண்ட்ரோலை இழந்து விபத்தில் சிக்க நேரிடலாம்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

கலர் ஃபாக் லைட் மற்றும் கலர் ஹெட்லைட்

சில கார்களின் ஃபாக் லைட்டிலோ அல்லது ஹெட்லைட்டிலோ மஞ்சள் நிற டிரான்ஸ்பரன்ட் சீட் ஒன்று ஒட்டப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். இவ்வாறாக லைட்களில் கலர் ஷீட்களை ஒட்டுவது லைட்களின் தரத்தை குறைத்து விடும். இரவு நேரங்களில் போதுமான வெளிச்சத்தை உங்களுக்கு தராது. இதனால் பனி காலங்களில் இரவு நேரத்தில் கார் ஓட்ட உங்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவது

பொதுவாக எதிரில் வரும் வாகனத்தின் கண்கள் கூசாமல் இருக்க ஹெட்லைட்டின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டுவதை நாம் பார்த்திருப்பபோம். ஆனால் சில கார் பிரியர்கள் தங்கள் கார் ஸ்போர்ட்ஸ் கார் போன்ற லுக்கில் இருக்க வேண்டும் என்பதற்காக கருப்பு ஸ்டிக்கர்களை ஹெட்லைட்டில் ஓட்டி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. இரவு நேரத்தில் ஹெட்லைட்டில் இருந்து வரும் வெளிச்சம் மிக குறைவாகவும் மங்கலாகவும் இருக்கும். இதனால் உங்களுக்கு எதிரில் வரும் வாகனம் தெரியாமலும் எதிரில் வருபவருக்கு உங்கள் வாகனம் தெரியாமலும் விபத்தில் சிக்க நேரிடும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

காரின் பின்புறம் வைக்கப்படும் அழகு பொருட்கள்

சில கார் ஓட்டுநர்கள் நமது காருக்கு பின்னால் வரும் வாகனத்தில் வருபவர்களை கவரும் விதமாக காரிற்கு பின்னால் உள்ள டிரேயில் தலையணை, பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை வைக்கின்றனர். இது டிரைவருக்கு ரியர் வீயூவை சரியாக தெரியாமல் செய்ய வழி வகுக்கும். மேலும் சில நேரத்தில் வேகமாக பிரேக் பிடிக்கும் போது அவை பின்புற சீட்டில் இருப்பவர்கள் மீது விழும். இது தேவையில்லாமல் டிரைவருக்கு கவன சிதறலை ஏற்படுத்தும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

ரூப்பில் பொருத்தப்பட்ட வீடியோ பிளேயர்

காரின் ரூப்பில் பொருத்தப்பட்ட வீடியோ பிளேயர்கள் டிரைவரின் கவனத்தை சிதற வைக்கின்றன. சில கார்களில் ஃபேக்டரி பிட்டிங்காகவே இது மாதிரியான வீடியோ பிளேயர்கள் வருகின்றன. அவை கார் ஓடும் போது இயங்காது. ஆனால் விற்பனைக்கு பின் வெளியில் பொருத்தப்படும் வீடியோ பிளேயர்கள் எல்லா நேரத்திலும் இயங்கும். இதனால் டிரைவருக்கு கவன சிதறல் ஏற்படும். சில கார்களில் இந்த பிளேயரை திறந்து வைத்தால் டிரைவருக்கு ரியர் வீயூ தெரியாமல் பாதிக்கப்படும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

கலர் மாற்றப்பட்ட பின் பக்க லைட்

சில கார் ஓனர்கள் தங்கள் காரின் கலருக்கு ஏற்ற வகையில் பின் பக்க லைட்டின் கலரையும் மாற்றி விடுகின்றனர். ஆனால் உலகளவில் பின் பக்க லைட்டின் கலர்கள், டிரைவிங்கின் போது மிக முக்கியமாக நீங்கள் பிரேக் பிடித்தால் பின் பக்கம் சிவப்பு லைட் எரிந்து பின்னால் வருபவர்களை எச்சரிக்கும். ஆனால் நீங்கள் லைட்டின் கலரை மாற்றினால் எல்லா லைட்டும் ஒரே கலராக தெரிந்து பின்னால் வருபவர்களை குழப்பி விபத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பாக அமையும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

விற்பனைக்கு பின்பான எலெக்ட்ரிக்கல் மாற்றம்

காரை வாங்கியதற்கு பின் வெளியில் விற்பனையாகும் ஆக்ஸசரீஸ்களை காரில் பொருத்த சிலர் காரில் உள்ள கம்பெனி மூலம் செய்யப்பட்ட வயரிங்கை மாற்றுகின்றனர். இதனால் சில எலெக்ட்ரிக்கலில் இருக்கும் பொருட்கள் விரைவில் சூடாகி வீணாக போகும் வாய்ப்புகள் உள்ளது. இவை பெரும்பாலும் காரில் உயர் ரக ஸ்பீக்கர்கள் மற்றம் ஆடியோ சிஸ்டம்கள் பொருத்தப்படும் போது நடக்கிறது.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

ஸ்டியரிங் ஸ்பின்னர்

சிலர் காரின் ஸ்டியரிங்கில் சிறிய ரக வீல்களை பொருத்துகின்றனர். இது காரை சிரமப்படாமல் திருப்ப உதவுகிறது. ஆனால் இதன் தரம் கேள்வி குறிதான். சில நேரங்களில் நீங்கள் காரை திருப்பும் போது இது உடைந்தாலோ அல்லது ஜாம் ஆனாலோ உங்களுக்கு சிக்கல் ஏற்படும். மேலும் காரில் வேகமாக செல்லும் போது இவ்வாறான வீல்களை பயன்படுத்துவது காரை விபத்திற்கு கொண்டு சென்று விடும்.

உங்கள் காரில் உள்ள இந்த பொருட்களால் உங்கள் உயிருக்கே ஆபத்து...!

சீட் பெல்ட் அக்ஸசரீஸ்

சிலர் வெளிமார்கெட்டில் விற்கப்படும் பேன்சி சீட் பெல்ட்களை பயன்படுத்துகின்றனர். இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இதன் தரம் கேள்வி குறியாகதான் இருக்கும். அவசர காலகட்டத்தில் இது உங்கள் காலை வாரிவிட்டால் உங்கள் உயிருக்கு நீங்களே வினை வைத்தது போல மாறிவிடும்.

Most Read Articles

English summary
Global NCAP Safety Ratings Of Indian Cars. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X