விநாயகர் சதுர்த்திக்கு பிறகு வாகனங்களில் நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

விநாயகர் சதுர்த்திக்கு பின்னர் வாகனம் சார்ந்த விவகாரத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அது எங்கு, என்ன மாற்றம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

வாகனங்களில் முக்கியமான விஷயங்கள் பல காணப்பட்டாலும், மிக முக்கியமானதாக நம்பர் பிளேட் இருக்கின்றன. அது, ஒவ்வொரு வாகனத்திலும் தனித்துவமானதாக காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், பயன்பாட்டிற்கு வரும் ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் சேஸிஸ் எண்ணை அடிப்படையாகக் கொண்டு பிரத்யேக பதிவெண்களைப் பெறுகின்றன. இதனை, மாவட்டம் வாரியாக செயல்படும் ஆர்டிஓ அலுவலகங்கள் வழங்கி வருகின்றன.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

இவை மற்ற வாகனங்களுடன் ஒத்துப் போவதில்லை. மோட்டார் வாகனங்களுக்கு பதிவெண் வழங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், மிக முக்கியமாக வாகனங்களை இனங் காண்பதற்காகவே இம்முறை கையாளப்படுகின்றது.

இந்த எண்கள் அசாதாரமானதாக காணப்படலாம். ஆனால், அதில் பல்வேறு நுணுக்கங்கள் கையாளப்பட்டு வருகின்றது.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

இருப்பினும், வாகன பதிவெண் விவகாரத்தில் பல முறைகேடுகள் நிகழ்வதாக, புகார்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளன. அதிலும் முக்கியமாக, போலி பதிவெண்தான் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

ஒரு வாகனத்தின் பதிவெண்ணைப் பயன்படுத்தி, வெறொரு வாகனத்தைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு முறைகேடுகள் நாட்டில் அரங்கேறிய வண்ணம் உள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஜம்ம மற்றும் காஷ்மீர் மாநிலத்தில், ஒரே நிறுவனம், ஒரே மாடல், ஒரே வண்ணம், ஒரே பதிவு எண் என எல்லாவற்றிலும் ஒத்துபோகின்ற வகையிலான காரை அம்மாநில போலீஸர் பறிமுதல் செய்தனர். அதில், எது போலியானது என்பதை கண்டுபிடிப்பதில் போலீஸார் தடுமாற்றம் கண்டனர்.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

பொதுவாக, இதுபோன்ற போலி நம்பர் பிளேட் கொண்ட வாகனங்கள் சதி திட்டம் மற்றும் முறைகேட்டு சம்பவங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கையால், இவற்றைக் கட்டுபடுத்தும் விதமாக மத்திய அரசு ஹை செக்யூரிட்டி பதிவெண் முறையை சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. ஆனால், இத்திட்டம், தமிழகம் போன்ற இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

இந்நிலையில், யூனியன் பிரதேசமான கோவாவில், ஹை செக்யூரிட்டி பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் திட்டம் விரைவில் அமலுக்கு கொண்டுவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது, விநாயகர் சதுர்த்திக்கு பின்னர் எப்போது வேண்டுமானாலும், நடைமுறைக்குக் கொண்டு வரப்படலாம் என அம்மாநில போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

முன்னதாக, 2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாக தயார் செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களில், உயர்பாதுகாப்பு எண் திட்டத்தை அறிமுகம் செய்ய அம்மாநிலம் திட்டம் தீட்டியது. ஆனால், அதில் சில இடையூறுகளைச் சந்தித்தது. அதேபோன்று, வாடகை முறையில் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பதிலும் குழப்பம் நீடித்தது. இதனால், ஓரங்கட்டப்பட்ட இத்திட்டம் மீண்டும் நடமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

இந்த உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் திட்டத்தை கட்டாயம் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற உத்தரவை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.

அது வெளியிட்ட அறிக்கையில், "2019ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களும் உயர்பாதுகாப்பு பதிவெண் திட்டத்தின்கீழ் விற்பனைச் செய்யப்பட வெண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

இதுகுறித்த, சுற்றறிக்கை ஏற்கனவே நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், கோவா மாநிலம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இந்த புதிய உயர்பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட், வாகனம் சார்ந்து நடைபெறும் குற்றங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் (High Security Registration Plates) என்பது, எலக்ட்ரானிக் முறையில் தயாரிக்கப்படும் அலுமினியத் தகடாகும்.

இதில், குரோமியம் ஹாலோகிராம் முறையில் பொறிக்கப்பட்ட அசோகர் சக்கரம் ஒட்டப்படும். இதனை கிழிக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. மேலும், இதற்கு கீழே 'ஐஎன்டி' என நாட்டின் அடையாளத்தைக் குறிக்கின்ற வகையிலான, நீல நிறத்தில் ஆங்கில எழுத்துகள் இடம் பெறும்.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

இதைத்தொடர்ந்தே, வாகனங்களுக்கான பிரத்யேக பதிவெண், ஸ்டிக்கராக அல்லாமல், அழுத்தம் முறையில் பதியப்படும். பின்னர், இந்த நம்பர் பிளேட் மோல்டிங் முறையில், அதாவது நீக்கப்படாத முறையில் வாகனங்களுடன் பொருத்தப்படும். மேலும், இதனை ஒரு முறை நீக்கிவிட்டால், மீண்டும் பயன்படுத்த முடியது.

இத்துடன், இந்த நம்பர் பிளேட் மற்றும் வாகனம் குறித்த அனைத்து தகவல்களும் மத்திய அரசின் வாஹன் எனும் வாகனங்களுக்கான இணைய தளத்தில் பதிவேற்றப்படும்.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு நடக்க உள்ள மாற்றம் இதுதான்... அதிரடிக்கு தயாராகுங்கள்!

ஆகையால், உயர்பாதுகாப்பு பதிவெண் நம்பர் பிளேட் கொண்ட ஏதேனும் வாகனம் திருடப்பட்டால், அதனை மிக எளிதாக கண்டுபிடித்து விட முடியும். மேலும், இந்த முறை பயன்பாட்டுக்கு வருவதால், போலி பதிவெண் பயன்பாடு முழுமையாக தடுக்கப்படும்.

மேலும், வாகனம் சார்ந்து நடைபெறும் குற்றங்கள் கணிசமாக குறையும். இதன்காரணமாகவே, மத்திய அரசு உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றது.

Most Read Articles
English summary
Goa Might Be Enforced HSRP System After Ganesh Festival. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X