கோரிக்கையை ஏற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கோவா முதல்வர்.. புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்

வாகன விற்பனையகங்களின் உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று அதிரடி அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கோரிக்கையை ஏற்று உடனடியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலைமச்சர்... புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்!!!

இந்திய வாகன சந்தை கடந்த 20 ஆண்டுகளில் காணாத அளவிலான விற்பனை வீழ்ச்சியை அண்மைக் காலங்களாகச் சந்தித்து வருகின்றது.

இந்த மந்த நிலையில் இருந்து தப்பிக்கும் விதமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்காலிக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தல், உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக இழுத்து மூடுதல் உள்ளிட்ட செயல்களில் அவை ஈடுபட்டு வருகின்றன.

கோரிக்கையை ஏற்று உடனடியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலைமச்சர்... புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்!!!

இதுமட்டுமின்றி, சில டீலர்கள் அவர்களின் ஷோரூமிற்கு மூடு விழாவை செய்து வருகின்றனர். இருப்பினும், விற்பனைக்கு சரிவிற்கு ஈடு கொடுக்க முடியாத சூழலே நிலவி வருகின்றது.

கடந்த காலங்களில் உலகின் மிகப் பெரிய வாகன சந்தையாக நிலவி வந்த இந்திய வாகன சந்தையின் இந்த நிலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அதிகபட்ச ஜிஎஸ்டி வரி, எரிபொருள் வாகனங்களின் பதிவு கட்டணம் உயர்வு உள்ளிட்டவையே முக்கிய காரணியாக இருக்கின்றது.

கோரிக்கையை ஏற்று உடனடியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலைமச்சர்... புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்!!!

ஆகையால், பாதாளத்தின் விளம்பில் உள்ள இந்திய வாகனத்துறையை மீட்க ஜிஎஸ்டி வரியை கணிசமாக குறைக்குமாறு மத்திய அரசிடம் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒன்றுகூடி கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளன.

ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசோ, அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.

கோரிக்கையை ஏற்று உடனடியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலைமச்சர்... புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்!!!

இந்நிலையில், வீழ்ச்சியடைந்துள்ள வாகன சந்தைக்கு சற்றே கை கொடுக்கும் விதமாக, யூனியன் பிரதேசமான கோவா மாநிலத்தின் முதலமைச்சர் பிரமோத் சாவந்த், அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோரிக்கையை ஏற்று உடனடியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலைமச்சர்... புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்!!!

அதன்படி, வருகின்ற டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை பதிவு செய்யப்படும் புதிய வாகனங்கள் அனைத்திற்கும், சாலை வரி பாதியளவு மட்டுமே வசூலிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பால், வாகனங்களின் பதிவிற்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் 50 சதவீதம் குறைந்துள்ளது.

கோரிக்கையை ஏற்று உடனடியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலைமச்சர்... புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்!!!

மாநில போக்குவரத்துத் துறை தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் வாகனங்களின் விற்பனை ஒட்டுமொத்தமாக 15-17 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிகின்றது. இது மேலும் அதிகரிக்கும் என அம்மாநில வாகன உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்தனர். இதையடுத்தே இந்த அதிரடி நடவடிக்கையை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

கோரிக்கையை ஏற்று உடனடியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலைமச்சர்... புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்!!!

தற்போது, கோவா அரசு ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்திற்கு வரியாக அந்த வாகன த்தின் விலையில் இருந்து 9 சதவீதத்தைப் பெறுகின்றது. அதேபோன்று, ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சம் வரையுள்ள இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீதத்தையும், ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமான விலையுள்ள பைக்குகளுக்கு 15 சதவீதம் வரியையும் அது வசூலித்து வருகின்றது.

கோரிக்கையை ஏற்று உடனடியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலைமச்சர்... புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்!!!

இதேபோல, ரூ. 6 லட்சம் வரையுள்ள நான்கு சக்கர வாகனங்களுக்கு 9 சதவீதம் வரியும், பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனையாகும் வாகனங்களுக்கு 11 சதவீதம் வரியும் வசூலிக்கப்படுகின்றது. அதேசமயம், ரூ. 10-15 வரையுள்ள வாகனங்களுக்கு 11 சதவீதமாக வசூல் செய்யப்படுகின்றது. இதில், உச்சபட்சமாக 15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்பனையாகும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 13 சதவீதம் வரை வரி வசூல் செய்யப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

கோரிக்கையை ஏற்று உடனடியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலைமச்சர்... புதிய வாகனங்களை வாங்க இதுவே சரியான நேரம்!!!

ஏற்கனவே, நாடு முழுவதும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு டீலர்ஷிப் நிறுவனங்கள் கணிசமான சலுகை திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கோவா அரசு கையாண்டு இருக்கும் இந்த நடவடிக்கை சற்று வாகன விற்பனைக்குக் கைகொடுக்கும் என நம்பப்படுகின்றது.

Source: economictimes

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Goa Reduces Road Tax On New Vehicles From October Till December. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X