கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்!

கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது குட்இயர் நிறுவனம். இந்த டயர்களின் விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்!

இந்தியாவின் கார் டயர் விற்பனை சந்தையில் குட்இயர் நிறுவனம் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து, இரண்டு புதிய டயர்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. குட்இயர் அஸ்யூரன்ஸ் டியூராப்ளஸ்-2 என்ற பெயரில் வந்துள்ள ஒரு டயர், சிறிய மற்றும் நடுத்தர வகை கார்களுக்கானதாகவும், ரேங்லர் ஏடி சைலென்ட்டிராக் என்ற டயர் எஸ்யூவி வகை கார்களுக்கானதாகவும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்!

குட்இயர் அஸ்யூரன்ஸ் டியூராப்ளஸ் 2 டயரானது 13 அங்குலம் முதல் 15 அங்குல விட்டமுடைய ரிம்களில் பொருத்தக்கூடியதாக இருக்கும். ரேங்லர் ஏடி சைலென்ட் டிராக் எஸ்யூவி டயரானது 15 முதல் 17 அங்குல ரிம்களில் பொருத்தக்கூடியதாக இருக்கிறது.

கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்!

அஸ்யூரன்ஸ் டியூராப்ளஸ் 2 டயரானது மிக நீடித்த உழைப்பையும், சிறந்த செயல்திறனையும் வெளிப்படுத்தும் டிரெட்லைஃப் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகச் சிறந்த மைலேஜையும் வழங்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்!

சிறிய மற்றும் நடுத்தர வகை கார்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் அஸ்யூரன்ஸ் டியூராப்ளஸ் 2 டயரானது அதிகபட்சமாக 1,10 லட்சம் கிமீ தூரம் உழைக்கும் திறன் கொண்டதாக குட்இயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்!

மறுபுறத்தில் ரேங்லர் ஏடி சைலென்ட் டிராக் எஸ்யூவி டயரானது குட்இயர் நிறுவனத்தின் டியூராவால் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டயர் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும் என்று குட்இயர் தெரிவிக்கிறது.

கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்!

இந்த புதிய டயர்கள் அறிமுக விழாவில் பேசிய குட்இயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் ஆனந்த்,"டயர் தயாரிப்புத் துறையில் புதுமையான தொழில்நுட்பங்களை புகுத்துவதில் குட்இயர் நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது. சந்தையில் பல்வேறு தரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில், பல்வேறு வகையான டயர்களை தயாரித்து வழங்குகிறோம். பல்வேறு சவால்களை கடந்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்பை வழங்குவதற்கு செயலாற்றி வருகிறோம்," என்று தெரிவித்தார்.

கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்!

இதேநிகழ்ச்சியில் பேசிய குட்இயர் நிறுவனத்தின் நுகர்வோர் வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் பிகே.வாலியா கூறுகையில்,"அஸ்யூரன்ஸ் டியூராப்ளஸ் 2 மற்றும் ரேங்லர் ஏடி சைலென்ட் டிராக் ஆகிய இரண்டு டயர்களும், அதற்கு முந்தைய டயர்களைவிட மிகச் சிறந்த செயல்திறனையும், நீடித்த உழைப்பையும் வழங்கும். இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும். இந்த புதிய டயர்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகப் பாதுகாப்பான, சிறந்த தரமான ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்கும்," என்று தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Goodyear has launched two new car tyres in India. Goodyear Assurance DuraPlus 2 will be suited for small cars and Wrangler AT SilentTrac for SUV cars.
Story first published: Thursday, August 22, 2019, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X