2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

2019ஆம் ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டில் ஏகப்பட்ட புது மோட்டார்சைக்கிள்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. சில மோட்டார்சைக்கிள்கள் அப்டேட் செய்யப்பட்டு மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

இவற்றின் விற்பனை லிஸ்ட் மாதந்தோறும் வெளியாகிவரும் நிலையில் தற்போது இந்தாண்டில் கூகுளில் அதிகம் பேர் தேடிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் முதல் 5 மோட்டார்சைக்கிள்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

5. கேடிஎம் 790 ட்யூக்

இந்த வரிசையில் 5வது இடத்தை கேடிஎம் 790 ட்யூக் பைக் பெற்றுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படாத இந்த பைக் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இந்த பைக் இந்த லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

இந்திய மார்க்கெட்டில் எளிதாக இயக்கி செல்லக்கூடிய சூப்பர்பைக்கில் ஒன்றாக உள்ள இந்த 790 ட்யூக் பைக்கானது நிறைய எலக்ட்ரானிக் ஷூட்களை கொண்டிருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எக்ஸ்ஷோரூமில் இந்த பைக் ரூ.8.63 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

4. ஹோண்டா ஆக்டிவா 125

இந்தியாவில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான என்ஜினை பெற்ற முதல் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் தான். பிஎஸ்6 என்ஜின் மட்டுமில்லாமல் ஸ்டார்ட் செய்யும்போது எந்தவொரு சத்தத்தையும் வெளிப்படுத்தாத முதல் 125சிசி ஸ்கூட்டராகவும் ஹோண்டா ஆக்டிவா 125 விளங்குகிறது.

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

இந்திய சந்தையில் விற்பனையாகி வருகின்ற அனைத்து ஸ்கூட்டர்களும் பிஏஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டு வந்தாலும் ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டதுதான் கூகுள் அதிகம் தேடப்பட்ட மோட்டார்சைக்கிள்களின் லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பிடித்து கொடுத்துள்ளது. ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ.69,936- ரூ.76,986 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

3. ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ்

இந்தியாவில் எப்போதும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பெற்று வரும் ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகளுக்கு உலக சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஸ்பிளென்டரின் இந்த உலகளவு பிரபலம் தான் அதன் ப்ளஸ் வேரியண்ட் பைக்கை கூகுளில் அதிகம் பேரை தேட வைத்துள்ளது.

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

மேலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் ஸ்பிளென்டரின் ஐ-ஸ்மார்ட் வேரியண்ட்டை பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த பிஎஸ்6 பைக்கின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.64,900ல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read:போலீஸை ஏமாற்ற இளைஞர் செய்த தந்திரம்... ஆனா, இப்புடி மாட்டிக்கிட்டியே குமாரு...

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

2. ராயல் எண்ட்பீல்டு புல்லட் 350

வாடிக்கையாளர்களின் பேவரட் பைக்குகளில் எப்போதும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகளுக்கு ஒரு தனி இடம் உண்டு. குறிப்பாக இதன் 350சிசி பைக்குகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அது தான் புல்லட் 350 பைக்கை இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

புல்லட் 350 மாடல் பைக் இந்தாண்டில் வாடிக்கையாளர்களை மேலும் கவரும் வகையில் புதியதாக குறைந்த விலை வேரியண்ட் ஒன்றை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் புல்லட் ட்ரைல்ஸ் 350 என்கிற பெயரில் ஸ்க்ரம்ப்ளேர் வேரியண்ட்டையும் பெற்றது. இந்த புதிய புல்லட் ட்ரைல்ஸ் 350 பைக் ரூ.1.63 லட்சத்தில் விற்கப்பட்டு வருகிறது.

Most Read:டூவீலர் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேல்ஸ்மேன்... அந்தரத்தில் பறந்து சென்ற அதிர்ச்சி வீடியோ

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

1. பஜாஜ் பல்சர் 150

2019ல் கூகுளில் அதிக பேரால் தேடப்பட்ட பைக்காக பஜாஜ் பல்சர் 150 உள்ளது. இந்த வருடத்தில் இந்த பைக்கில் புதியதாக கொடுக்கப்பட்ட அப்டேட்டும், வியக்கத்தக்க வகையில் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் புதிய வேரியண்ட்டும் தான் வாடிக்கையாளர்களிடையே இந்த அளவிற்கு கவனம் பெற வைத்துள்ளது.

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

பெல்லி பான், பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் பிளவுப்பட்ட க்ராப் ரெயில்ஸ் உள்ளிட்டவை இந்த பைக்கிற்கு இந்த வருடத்தில் கொடுக்கப்பட்ட அப்டேட்களாகும். புதிய வேரியண்ட்டாக பல்சர் 150 நியான், பல்சர் 150-ன் விலையிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பல்சர் 150 பைக்கின் ஆரம்ப விலையானது ரூ.76 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

Most Read:யமஹா புதிதாக வடிவமைக்கும் பைக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா..? தீவிரமாக உருமாறும் டெனெர் 700..!

2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...

இந்த வருடத்தில் சில எலக்ட்ரிக் பைக்குகளும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அவற்றில் ஒன்று கூட இந்த லிஸ்ட்டில் இல்லை. இதையெல்லாம் விட டிவிஎஸ் ஜூபிட்டர் மற்றும் கேடிஎம் 390 பைக்குகள் இல்லாதது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Here Are The Most Searched Bikes On Google In 2019
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X