டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவதை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

நொய்டா-ஆக்ரா யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு பேருந்து ஒன்று பாலத்தில் மோதி கால்வாயில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில் இதுபோன்று பல்வேறு விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

எனவே ராஜ்யசபாவில் இது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில் நடைபெற்ற விபத்து துரதிருஷ்டவசமானது. இந்த விபத்திற்கு பின்னால் உள்ள காரணங்களை கண்டறிய உத்தரபிரதேச அரசு ஏற்கனவே விசாரணை கமிட்டியை அமைத்துள்ளது.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையை உத்தரபிரதேச அரசுதான் கட்டமைத்தது. இதற்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைக்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்பு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திற்கு உள்ளது. ஆனால் நொய்டா-ஆக்ரா யமுனா எக்ஸ்பிரஸ் வே, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தாலோ (NHAI - National Highways Authority of India)அல்லது இந்த அமைச்சகத்தாலோ கட்டமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை கிடையாது.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

எனினும் கமிட்டியின் பரிந்துரைகளை அமலுக்கு கொண்டு வரும்படியும், விபத்துக்கள் மற்றும் மக்களின் மரணத்திற்கு காரணமான அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டு கொள்ளும். இந்த சிமெண்ட் கான்கிரீட் சாலையில், விபத்துக்கள் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு 133 பேரும், 2017ம் ஆண்டு 146 பேரும், 2018ம் ஆண்டு 11 பேரும் உயிரிழந்துள்ளனர்'' என்றார்.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து பேசுகையில், ''ரப்பருடன் சிலிக்கானை கலந்து டயர்கள் உற்பத்தி செய்யப்படுவதையும், டயர்களில் வழக்கமான காற்றுக்கு பதிலாக நைட்ரஜன் வாயு நிரப்பப்படுவதையும் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது'' என்றார். சர்வதேச தரஅளவுகளின்படி, ரப்பருடன் சிலிக்கான் கலக்கப்படுகிறது மற்றும் டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

அதிகப்படியான வெப்பம் காரணமாக டயர்கள் வெடிக்கும் வாய்ப்பை குறைப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. வழக்கமான காற்றை பயன்படுத்துவதன் காரணமாக, அதிகப்படியான வெப்பநிலை நிலவும் கோடை காலங்களில், டயர்கள் வெடித்து சாலை விபத்துக்கள் ஏற்படுவதாக அரசு கருகிறது. டயர் வெடிப்பு என்பது மிகவும் அபாயகரமான ஒரு சூழ்நிலை. திடீரென டயர் வெடித்து விட்டால், அதனை கையாள்வது என்பது எந்தவொரு டிரைவருக்கும் கடினமான காரியமே. டயர் வெடித்து விட்டால், வாகனத்தை கட்டுப்படுத்துவது சிரமம். எனவே இது சாலை விபத்துக்கு வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

இதனிடையே சாலை விபத்துக்களை தடுப்பதற்காக 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளதாகவும், இதன் மூலம் விலை மதிப்பற்ற உயிர்கள் சாலை விபத்துக்களில் பறிபோவது தடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். அத்துடன் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும், ஆனால் உத்தரபிரதேசத்தில் அதிகப்படியான சாலை விபத்துக்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

அதே சமயம் இந்தியாவில் 25 லட்சம் பயிற்சி பெற்ற டிரைவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாகவும், எனவே அரசு பயிற்சி பள்ளிகளை நிறுவி வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இந்திய சாலைகளின் தரத்தை மேம்படுத்தவும், இந்தியாவில் சாலை விபத்துக்களை குறைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அமைச்சர் நிதின் கட்கரி பட்டியலிட்டார்.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் 1,47,913 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எனவே சாலை விபத்துக்களை குறைக்க மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாகனங்களில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

இதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125 சிசிக்கும் மேற்பட்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெறுவது கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஜூலை 1ம் தேதி மேலும் சில புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன.

டயர்களில் நைட்ரஜன் வாயு நிரப்புவது கட்டாயமாகிறது? மத்திய அரசின் அதிரடி திட்டத்திற்கு காரணம் இதுதான்

இதன்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும், டிரைவர் ஏர் பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஃப்ரண்ட் சீல்பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்களில் விலை சற்று அதிகரித்துள்ளது. என்றாலும் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால், விலை உயர்வை பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை. வரும் மாதங்களில் இன்னும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளையும் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Government Might Make Nitrogen Filled Tyres Mandatory. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X