மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

எரிபொருளால் இயங்கும் ஆட்டோக்களை சிஎன்ஜி வேரியண்டாக மாற்ற சிறப்பு சலுகை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளிாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

மாசுபாட்டைக் கட்டுபடுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கியமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசினை கட்டுபடுத்துவதற்கான முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிக தீவிரம் காட்டி வருகின்றன.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

அந்தவகையில், நாட்டில் இயங்கிவரும் எரிபொருள் வாகனங்களை முற்றிலும் ஒழித்து கட்டும் நடவடிக்கையை அரசு கையாண்டு வருகின்றது. இத்துடன், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின் மற்றும் குறைவான மாசினை வெளிப்படுத்தும் எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

மேலும், அதனை ஊக்குவிக்கும் விதமாக வரி, ஆர்டிஓ பதிவு உள்ளிட்டவற்றில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு சலுகைகள், புதிய வாகனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும்நிலையில், எரிபொருள் வாகனத்தில் இருந்து மாசில்லா வாகனமாக மாற்றப்படும் பழைய வாகனத்திற்கும் சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

ஆனால், இது தமிழகத்தில் இல்லை. இந்தியாவின் வட மாநிலமான பிஹாரில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் போக்குவரத்திற்காக அதிகம் பயன்படுத்தும் வாகனங்களில் வாடகை வாகனங்களே முதல் இடத்தில் உள்ளன. அதிலும், ஆட்டோக்கள்தான் முன்னணியில் உள்ளன. இவை, மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக இருக்கின்றன.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

ஆகையால், மாநிலத்தில் உள்ள ஆட்டோக்கள் அனைத்தையும் குறைந்த மாசினை வெளிப்படுத்தும் வாகனங்களாக மாற்றும் முயற்சியில் பிஹார் அரசு களமிறங்கியுள்ளது.

இதனடிப்படையில், பெட்ரோலால் இயங்கும் ஆட்டோக்களை சிஎன்ஜி ஆக மாற்றினால் சலுகை வழங்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தலைமையிலான அரசு அறவித்துள்ளது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

இதுகுறித்து ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் இடம் அவர் கூறியதாவது, "மாநிலத்தில் இயங்கிவரும் எரிபொருள் வாகனங்களை கட்டுபடுத்தும் விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டீசலால் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு அனுமதி வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, எரிபொருளால் இயங்கும் ஆட்டோக்களை சிஎன்ஜி ஆக மாற்ற சலுகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை போக்குவரத்துத்துறை தயாரித்து வருகின்றது" என்றார்.

MOST READ: பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

பாட்னாவில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோ ரிக்ஷாக்கள் இயங்குவதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவற்றில், 1,500 மட்டுமே சிஎன்ஜி ஆட்டோக்களாக உள்ளன. சிஎன்ஜி எரிபொருளை வழங்குவதற்கான நிலையங்கள் அம்மாநிலத்தில் இரண்டு செயல்படுகின்றது. அதில், ஒன்று ருகன்புராவிலும், மற்றொன்று பைபாஸ் சாலையில் உள்ளது.

MOST READ: ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

தற்போது, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையால், நகரில் இயங்கும் சிஎன்ஜி நிலையங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

நகர எரிவாயு விநியோக திட்டத்தின் கீழ், சிஎன்ஜி விநியோகம் பாட்னாவில் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி அன்று பெகுசாரையில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

MOST READ: ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித்துறை: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சிஎன்ஜி வாகனங்களை அதிகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எரிபொருளால் இயங்கும் ஆட்டோக்களைக்காட்டிலும், சிஎன்ஜி ஆட்டோக்கள் கூடுதல் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

அந்தவகையில், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 45கிமீ தூரம் வரை அது செல்லும். அதேபோன்று, நான்கு சக்கர வாகனங்கள் 30 கிமீ மைலேஜினை வழங்கும்.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

எரிபொருள் வாகனங்களை சிஎன்ஜி வேரியண்டாக மாற்றுவதற்கான பிரத்யேக எந்திரங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவை, தரத்தைப் பொருத்து, அதிக விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இது, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை சிஎன்ஜி மாற்றாக உதவும்.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

இவ்வாறு செய்வதன்மூலம், மாசின் அளவை கணிசமாக குறைக்க முடியும். அத்துடன், குறைந்த செலவில் அதிக லாபத்தையும் பெற முடியும்.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

அதிக மாசினை வெளிப்படுத்தும் வாகனங்களை, குறைக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையைப் போன்றே, பழைய வாகனங்களை முற்றிலும் ஒழித்துக்கட்டும் விதமாக, இலவச ஆர்டிஓ பதிவு என்ற சலுகையை மத்திய அரசு வழங்க உள்ளது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

எதிர்காலத்தில் இந்தியச் சாலைகளை மின் வாகனங்கள் ஆளவிருப்பது தற்போதே உறுதியாகியுள்ளது. அதற்கான நடவடிக்கையில் மாத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. அதேசமயம், நாட்டில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக் குறைக்கும் விதமான முயற்சியில் அரசு செயல்பட்டு வருகின்றது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

அந்தவகையில், எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டிற்கு ஒட்டுமொத்தமாக முழுக்குபோடும் வகையிலான நடவடிக்கைகள் அண்மைக் காலங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், புத்தம் புதிய நடவடிக்கையாக புதிய மற்றும் பழைய வாகனங்களின் ஆர்டிஓ பதிவிற்கு, தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக வசூலிக்க மத்திய அரசு திட்டம் தீட்டி வருகின்றது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

இதற்கான வரைவு அறிக்கையை மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் சமீபத்தில் முன்மொழிந்தது. அதில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பதிவு கட்டணம் மற்றும் அவற்றின் பதிவை புதுப்பித்தலுக்காக பெறப்படும் கட்டணங்களை இதுவரை இல்லாத அளவிற்கு பல மடங்கு உயர்த்த அதில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

இதனால், தற்போது இருசக்கர வாகனங்களின் பதிவிற்காக வசூலிக்கப்பட்டு வரும் 50 ரூபாய் கட்டணம், மிக விரைவில் ரூ. 1,000 ஆயிரமாக உயர இருப்பதாக கூறப்படுகின்றது. அதேசமயம், அதனை புதுப்பிக்க ரூ. 2 ஆயிரம் வசூலிக்கப்பட உள்ளது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

அதேபோன்று, பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் கார்களை பதிவு செய்ய தற்போது வசூலிக்கப்பட்டு வரும் ரூ. 600-க்கு பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், அதனை புதுப்பிப்பதற்கு ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட உள்ளது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

மத்திய அரசின் புதிய திட்டத்தால் மக்கள் தற்போது மிகப்பெரிய கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு மீண்டும் ஓர் புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இம்முறை புதிய வாகனங்களுக்கு இலவசமாக ஆர்டிஓ பதிவைச் செய்ய திட்டமிட்டு வருகின்றது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

அதேசமயம், புதிய காரை இலவசமாக பதிந்து கொள்ள அதிரடி நிபந்தனையையும் அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, புதிய காரை இலவசாக ஆர்டிஓ பதிந்துகொள்ள, அவர்களின் பழைய வாகனத்தின் ஆர்டிஓ பதிவு ரத்து செய்து, அதே எண்ணை புதிய வாகனத்திற்கு பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

மேலும், பதிவு நீக்கப்பட்ட அந்த பழைய காரை, பயன்பாட்டில் இல்லாமல் அழித்துவிடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

இதற்கான கொள்கை ஒன்று தயார் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அந்த கொள்கையின்படி, நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்கிராப்பிங் மையங்கள் மட்டுமே செயல்பட உள்ளன. அவை, பழைய கார் உரிமையாளர்களுக்கு ஸ்கிராப் சான்றிதழ்களை வழங்கும். பின்னர், அந்த சான்றிதழை வைத்து புதிய வாகனத்திற்கான, இலவச பதிவைப் பெற்றுக்கொள்ளலாம்.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

புதிய வாகனத்தின் இலவச பதிவு ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனம் அதே பிரிவில் மட்டுமே செல்லுபடியாகும். இதன் பொருள் நீங்கள் மாருதி ஆல்டோ போன்ற ஒரு சிறிய காரை ஸ்கிராப் செய்தால், இதேபோன்ற விலையுள்ள காரில் இலவச பதிவு கிடைக்கும்.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

அதே ஸ்கிராப் செய்யப்படுகின்ற கார் எந்த ரகத்தில் இருக்கின்றதோ, அதே ரகத்திலான புது காருக்கு மட்டுமே இலவச செய்யப்பட உள்ளது. எடுத்துக்காட்டாக, மாருதி ஆல்டோ காரை நீங்கள் ஸ்கிராப் செய்கிறீர்கள் என்றால், அதே ரகத்திலான காருக்கு மட்டுமே இலவச பதிவு பெற முடியும்.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

இத்தகைய ரகத்திலான ஸ்கிராப் மையத்தைதான் தற்போது மஹிந்திரா மற்றும் மெட்டல் ஸ்கிராப் டிரேட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் முதல் முறையாக மேற்கொள்ள இருக்கின்றது. இதற்கான செரோ (CERO) என்ற புதிய பிராண்ட் பெயரை அந்நிறுவனங்கள் தயார் செய்துள்ளன.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

பழைய கார்களை ஸ்கிராப் செய்வதன்மூலம், சாலையில் புழுதியடைந்து நிற்கும் கார்களை மறுசுழற்சி செய்யப்படுவதுடன், தேவையற்ற இடம் அடைப்பு உள்ளிட்டவை நீக்கப்படுகின்றது.

மேலும், சாலையில் பாதுகாப்பற்றநிலையில் நிற்கும் இந்த கார்கள், எப்போது யாருக்கு எந்தவித்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்றே நம்மால் உணர முடிவதில்லை. ஆகையால், இவற்றை அகற்றி மறுசுழற்சி செய்வது நாட்டிற்கு பல வகையில் பயனளிக்கும் என கூறப்படுகின்றது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

அதேசமயம், மத்திய அரசு எஃப்சி சான்றிதழ் அளிக்கும் முறையிலும் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், தற்போது அளிக்கப்பட்டு வரும் ஒரு வருட கால வேலிடிட்டி இனி மாதங்களாக குறைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன், பேருந்துகளை மாற்றி திறனாளிகள் எளிதில் பயன்படுத்துகின்ற வகையிலான மாற்றத்தை மேற்கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது.

அவ்வாறு, வீல் சேர், இருக்கையில் முன்னுரிமை, சைககள், ஹேண்ட் ரெயில் உள்ளிட்ட பல வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...

இந்த முயற்சிக்காக, ​​நாடு முழுவதும் பல அங்கீகரிக்கப்பட்ட கார் ஸ்கிராப்பிங் மையங்கள் நிறுவப்பட உள்ளது. அவ்வாறு, ஸ்கிராப் செய்யப்படும் கார்களுக்கு இலவச பதிவு வழங்குவதைத் தவிர, ஸ்கிராப் சான்றிதழ்களை வைத்திருப்பவர்களுக்கு புதிய கார்களில் வரி சலுகை, ரொக்க தள்ளுபடிகள் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை அரசு எதிர்காலத்தில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

Tamil
English summary
Govt Plan To Give Incentive For Convert Fuel Auto Into CNG. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more