இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்!

சீனாவை சேர்ந்த கிரேட்வால் நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்!

இந்திய கார் மார்க்கெட்டில் உள்ள வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டங்களை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சீனாவை சேர்ந்த பல்வேறு கார் நிறுவனங்களுக்கும் இந்திய கார் மார்க்கெட்டில் இறங்குவதற்கு அதிக முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்!

அண்மையில் சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் தனது கீழ் செயல்படும் எம்ஜி மோட்டார்ஸ் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த வரிசையில் அடுத்ததாக சீனாவை சேர்ந்த கிரேட் வால் நிறுவனம் இந்திய கார் சந்தையில் கால் பதிக்க உள்ளது.

இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்!

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் போலவே, கிரேட்வால் நிறுவனமும் எஸ்யூவி தயாரிப்பில் பிரபலமானது. சீன சந்தையில் இந்த நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களின் விற்பனை குறிப்பிடத்தகுந்த அளவு இருக்கின்றது.

இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்!

இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்திய சந்தையில் களமிறங்க கிரேட்வால் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கிரேட்வால் நிறுவனம் எஸ்யூவி மற்றும் பிக்கப் டிரக் ரக வாகனங்கள் தயாரிப்பில் சீனாவின் பிரபலமான நிறுவனமாக உள்ளது.

இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்!

மேலும், கிரேட்வால், ஹவல், டபிள்யூஇஒய் மற்றும் ஓஆர்ஏ ஆகிய நான்கு பிராண்டுகளில் கிரேட்வால் நிறுவனம் எஸ்யூவி மற்றும் பிக்கப் டிரக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஓஆர்ஏ நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்!

கிரேட்வால் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஹவல் நிறுவனம் சீனா மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் ஆப்ரிக்கா, ரஷ்யா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்!

இந்த பிராண்டின் பிரபலமான எச்-2 மற்றும் எச்-6 ஆகிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு கிரேட்வால் திட்டமிட்டுள்ளது. இதில், எச்-2 எஸ்யூவியானது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். எச்-6 மாடலானது எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

இந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்!

மேலும், கார் உற்பத்திக்காக குஜராத் மாநிலத்தில் புதிய கார் ஆலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்காக ரூ.7,000 கோடியை முதலீடு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரியில் இயங்கும் மின்சார கார் மாடல்களை உருவாக்கி விற்பனை செய்யவும் திட்டம் போட்டுள்ளது.

Most Read Articles
English summary
Great Wall Motors is planning to showcaseand they will be present at the upcoming 2020 Auto Expo in February.
Story first published: Thursday, October 17, 2019, 14:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X