இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

நாளை மறு நாள் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் இல்லாமல் உங்களால் ஒரு நாள் இருக்க முடியுமா? நிச்சயமாக சிரமம் என்றுதான் சொல்ல வேண்டும். வேண்டுமானால் முயற்சி செய்து ஒரு நாள் மட்டும் இருந்து விடலாம். ஆனால் தினமும் முடியாது அல்லவா? வாகனங்கள் நம் வாழ்வோடு இரண்டற கலந்து விட்டன. நமது விரைவான மற்றும் சுலபமான போக்குவரத்திற்கு வாகனங்களின் பங்கு இன்றியமையாதது.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

ஆனால் வாகன ஓட்டிகள் அனைவரையும் தற்போது ஒரு பிரச்னை தினமும் பாடாய் படுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னைதான் அது. முன்பு மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும். அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படும்.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

ஆனால் அதன்பின் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தபின், வாகன ஓட்டிகள் தினமும் திக்... திக்... மனநிலையில்தான் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

ஆனால் அவர்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேறவில்லை. அதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. மத்திய பட்ஜெட் கடந்த ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு லிட்டருக்கு 1 ரூபாய் உயர்த்தினார்.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதன்பின் பெட்ரோல், டீசல் விலை இன்னும் கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது. சென்னையில் கடந்த ஜூலை 5ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 73.19 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று (ஜூலை 23) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76.24 ரூபாய். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 3.05 ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

அதே சமயம் சென்னையில் கடந்த ஜூலை 5ம் தேதி ஒரு லிட்டர் டீசல் 67.96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை எவ்வளவு தெரியுமா? 69.96 ரூபாய். அதாவது ஒரு லிட்டர் டீசலின் விலை 2 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தினமும் சிரமப்பட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கை. ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

ஆனால் வாகன ஓட்டிகளின் இந்த எதிர்பார்ப்பு தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. எனினும் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் நாளை மறு தினம் (ஜூலை 25, வியாழன்) நடைபெறவுள்ளது.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

இந்த கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஜிஎஸ்டி தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். எனினும் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைதான் இந்த கூட்டத்தில் முக்கியத்துவம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அளவிற்கு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வருவது தொடர்பான உறுதியான முடிவு எவ்வளவு விரைவாக எடுக்கப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்திய மக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது? பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைய வாய்ப்பு!!

எனினும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு அடித்தளமாக இந்த கூட்டம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை மறு நாள் நடைபெறவுள்ள இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு சுமார் 15 ரூபாயும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 10 ரூபாயும் குறைவதற்கான சூழல் உருவாகும். இது தோரயமான மதிப்பீடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
GST Council Likely To Discuss Bringing Petrol, Diesel Under GST Ambit At July 25 Meet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X