வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு என் கையில் இல்லை... நிர்மலா சீத்தாராமன் கைவிரிப்பு!

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கான முடிவு எடுக்கும் அதிகாரம் தனது கையில் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு என் கையில் இல்லை... நிர்மலா சீத்தாராமன் கைவிரிப்பு!

இந்திய பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. குறிப்பாக, இதன் தாக்கத்தால் ஆட்டோமொபைல் துறை பெரும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், வாகன விற்பனையை அதிகரிப்பதற்கான புதிய ஊக்குவிப்புத் திட்டங்களை கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு என் கையில் இல்லை... நிர்மலா சீத்தாராமன் கைவிரிப்பு!

இந்த ஊக்குவிப்புச் சலுகைகள் மற்றும் பிஎஸ்-4 வாகனப் பதிவு குறித்த விளக்கம் போன்றவை சற்று ஆறுதலை தந்துள்ளது. இருப்பினும், தற்போது வாகனத் துறை இருக்கும் கடினமான சூழலில், இந்த திட்டடங்கள் போதாது என்றே கருதப்படுகிறது.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு என் கையில் இல்லை... நிர்மலா சீத்தாராமன் கைவிரிப்பு!

மேலும், வாகனத் துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவதற்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. தற்போது வாகனங்கள் மீது விதிக்கப்படும் அதிகபட்சமான 28 சதவீத வரியை 18 சதவீதமாக குறைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு என் கையில் இல்லை... நிர்மலா சீத்தாராமன் கைவிரிப்பு!

இந்த நிலையில், நேற்று சென்னையில் நடந்த ஜிஎஸ்டி வரி ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்," வாகன விற்பனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு என் கையில் இல்லை... நிர்மலா சீத்தாராமன் கைவிரிப்பு!

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கவனத்தில் கொண்டுள்ளோம். மேலும், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலின் கையில்தான் உள்ளது. அது என் கையில் இல்லை.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு என் கையில் இல்லை... நிர்மலா சீத்தாராமன் கைவிரிப்பு!

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு யோசனை வழங்கி இருக்கிறோம். வரும் 20ந் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவாவில் நடக்க இருக்கிறது. அதில், நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு என் கையில் இல்லை... நிர்மலா சீத்தாராமன் கைவிரிப்பு!

இதனால், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால் இது நிச்சயம் வாகனத் துறையை ஊக்கப்படுத்தும் என்று கருதப்படுகிறது. பண்டிகை காலத்தில் இந்த அறிவிப்பு வந்தால், அது நிச்சயம் கார், பைக் உள்ளிட்ட வாகனத் துறைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

Most Read Articles
English summary
Finance Minister Nirmala Sitharaman has revealed that the GST Council will take the final call on reducing the tax rate on motor vehicles.
Story first published: Monday, September 2, 2019, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X