வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

வெறும் 100 ரூபாயில் காப்பாற்றும் ஒரு சூப்பர் ரூல் இருப்பது தெரியாமல், ஆயிரக்கணக்கான ரூபாயை வாகன ஓட்டிகள் அபராதமாக இழந்து வருகின்றனர். உங்கள் விழிப்புணர்விற்காக இந்த விதிமுறை தொடர்பான தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகளையும் தலை சுற்ற வைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் அந்த அளவிற்கு மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இதற்கு முன்பாக இவ்வளவு கடுமையான அபராதங்கள் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டதில்லை.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதை அப்படியே ஏற்று கொண்டு விட்டன. ஆனால் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

அவ்வளவு ஏன்? பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தே இதை அமல்படுத்த மறுத்து முரண்டு பிடித்து கொண்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதை மேற்கண்ட 5 மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது வாகன ஓட்டிகளை கடுமையாக பாதிக்கும் என இந்த 5 மாநில அரசுகளும் கூறி வருகின்றன.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

எனினும் இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் புதிய அபராத தொகைகள் அமலுக்கு வந்து விட்டன. போலீசாரும் அதனை மிக கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர். புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது முதல் வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. ஏனெனில் ஒருவருக்கே பல்லாயிரக்கணக்கான ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் லாரி டிரைவர் ஒருவருக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான செய்தி அதிர்வலைகளை உண்டாக்கியது. சில சமயங்களில் வாகனத்தின் விலையை காட்டிலும் கூடுதலாக அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. எனவே வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர்.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

ஆனால் உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய ஒரு வழி இருக்கிறது. இந்த கூடுதல் விதிமுறை குறித்து பலருக்கும் தெரிவதில்லை. எனவே உங்களுக்கு உதவும் வகையில் அந்த விதிமுறை குறித்த தகவல்களை இனி பகிர்ந்து கொள்கிறோம். வெறும் 100 ரூபாய் மட்டும் இருந்தால் போதும். உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்து விடலாம்.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

இன்சூரன்ஸ் பேப்பர்கள், டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் மற்றும் மற்ற முக்கியமான ஆவணங்கள் உங்களிடம் இல்லாவிட்டால் அதற்குரிய அபராத தொகையை விதித்து போலீசார் உங்களுக்கு சலானை வழங்குவார்கள். ஆனால் இந்த ஆவணங்களை எல்லாம் நீங்கள் கையில் வைத்திருந்தே ஆக வேண்டும் என்ற அவசியம் கிடையவே கிடையாது.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் அவற்றை சமர்ப்பிப்பதற்கு உங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் உள்ளது. ஒருவேளை உங்கள் ஆவணங்களை வீட்டிலோ அல்லது வேறு எங்கேயாவதோ மறந்து வைத்து விட்டீர்கள் என்றால் இந்த விதி உங்களுக்கு உதவும். இந்த விதிமுறையின்படி, ஸ்பாட்டிலேயே அவற்றை சமர்ப்பித்தே ஆக வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் உங்களை கட்டாயப்படுத்த முடியாது.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

ஆனால் வசூல் வேட்டையாட நினைக்கும் ஒரு சில போலீஸ் அதிகாரிகள், ஆவணங்களை உடனே சமர்ப்பித்தாக வேண்டும் என உங்களை கட்டாயப்படுத்தலாம். உங்களுக்கு அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், இந்த விதிமுறை குறித்து அவர்களிடம் கூறுங்கள். அதன்பின் 15 நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்து விட்டால், உங்களுக்கு விதிக்கப்பட்ட சலான் ரத்து செய்யப்பட்டு விடும்.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

இந்த பணிகளுக்காக மட்டும் நீங்கள் 100 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் உங்களிடம் அனைத்து ஆவணங்களும் இருக்கும் சூழலில், அவற்றை நீங்கள் வீட்டிலோ அல்லது வேறு எங்கேயாவதோ மறந்து வைத்து விட்டு வந்து விட்டீர்கள் எனும்போது மட்டுமே இந்த 15 நாள் விதி பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

அதேபோல் இன்சூரன்ஸ் பேப்பர்கள், டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் மற்றும் மற்ற முக்கியமான ஆவணங்கள் இல்லாதது தொடர்பான குற்றங்களுக்கு மட்டுமே இந்த 15 நாள் விதியை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த முக்கியமான விதிமுறையை எக்காரணத்தை கொண்டும் சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

ஏனெனில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு 500 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இது தற்போது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம். ஆனால் இது தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

உங்கள் கையில் இந்த ஆவணங்கள் இல்லையென்றால், நீங்கள் கொஞ்சம் அசந்தாலும் உயர்த்தப்பட்ட புதிய அபராத தொகை உங்கள் மீது விதிக்கப்பட்டு விடும். இப்படிப்பட்ட சூழலில் இந்த விதிமுறை உங்களை ஆபந்பாந்தவனாக வந்து காப்பாற்றும். எனவே போலீசாரிடம் நீங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் நடந்து கொள்வதுதான் உங்கள் பர்சுக்கு நல்லது.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

ஏனெனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தினேஷ் மதன் என்ற இளைஞருக்கு ஹரியானா மாநிலம் குருகிராம் போலீசார் 23 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்தனர். லைசென்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதது உள்பட பல்வேறு குற்றங்களுக்காக அவருக்கு ஒட்டுமொத்தமாக 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

வெறும் 100 ரூபாய் போதும்... நீங்கள் அபராதமே கட்ட வேண்டியதில்லை... இந்த சூப்பர் ரூல் தெரியாம போச்சே

ஆனால் அவர் ஓட்டி வந்த செகண்ட் ஹேண்ட் ஸ்கூட்டரின் விலையே வெறும் 15 ஆயிரம் ரூபாய்தான். இதனிடையே ஆவணங்கள் வீட்டில் இருப்பதாக தான் கூறியதாகவும், ஆனால் பத்தே நிமிடத்தில் அவற்றை கொண்டு வர வேண்டும் என போலீசார் கட்டாயப்படுத்தியதாகவும் தினேஷ் மதன் குற்றம்சாட்டியது இங்கே குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழல்களில் மேற்கண்ட விதிமுறை உங்களுக்கு உதவும்.

Most Read Articles
English summary
We Explain How 100 Rupee Escape Rule Saves You From Hefty Traffic Penalties. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X