ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹோண்டா அமேஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி டிசையருக்கு அடுத்த இடத்தில் ஹோண்டா அமேஸ் விற்பனையில் கலக்கி வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 13 மாதங்களில் விற்பனையில் ஒரு லட்சத்தை கடந்து சாதனை புரிந்துள்ளது.

ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

கடந்த 2013ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை மாடலைவிட இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் விற்பனையில் மிக விரைவாக இந்த சாதனையை பதிவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில், சிறப்பு பதிப்பு மாடலை ஹோண்டா கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அழைக்கப்படுகிறது. ஹோண்டா அமேஸ் காரின் விஎக்ஸ் வேரியண்ட்டின் அடிப்படையில் கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் மாடலாக வந்துள்ளது.

ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் மாடலில் கருப்பு வண்ண அலாய் வீல்கள், கருப்பு வண்ண டிரங்க் ஸ்பாய்லர், ஏஸ் எடிசன் பேட்ஜ் கொண்ட சீட் கவர்கள் இடம்பெற்றுள்ளன. கருப்பு வண்ண டோர் வைசர்கள், கதவுகளில் ஏஸ் எடிசன் சின்னம் ஆகியவை இதனை தனித்துவப்படுத்துகிறது.

ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் மாடலானது ரேடியண்ட் ரெட், லூனார் சில்வர் மற்றும் ஒயிட் ஆர்சிட் பியர்ல் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

MOST READ: அதிர்ச்சி... இனி இந்த 6 மாவட்டங்களுக்கு டீசல் கிடையாது... மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதி...!

ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல், டீசல் மாடல்களில் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹோண்டா அமேஸ் காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலை 20 சதவீத வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதாகவும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: அசத்தலான சிறப்பம்சங்களுடன் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி!

ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்

புதிய ஹோண்டா அமேஸ் காரின் ஏஸ் எடிசன் மாடல் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் ஏஸ் வேரியண்ட்டுகள் ரூ.7.89 லட்சத்திலிருந்து ரூ.8.72 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் ஏஸ் வேரியண்ட்டுகள் ரூ.8.99 லட்சத்திலிருந்து ரூ.9.72 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

Most Read Articles

English summary
Honda Cars India has launched Amaze Ace Edition in India starting price at Rs.7.89 lakhs.
Story first published: Monday, June 17, 2019, 17:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X